மத்திய அமைச்சரவை இன்று (ஜுலை 12) மாற்றி அமைக்கப்பட்டது. பிரணாப்முகர்ஜி (நிதி), ப.சிதம்பரம் (உள்துறை), ஏ.கே.அந்தோணி (பாதுகாப்பு), எஸ்.எம். கிருஷ்ணா (வெளியுறவுத்துறை) ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் இல்லை.
மாற்றியமைக்கப்பட்ட இலாக்காக்கள் குறித்த விபரங்கள் வருமாறு:
மத்திய அமைச்சரவையில் புதிதாக சிலரை நியமிக்கவும், சிலரின் இலாகாக்களை மாற்றி அமைக்கவும் பிரதமர் மன்மோகன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்துள்ளார். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களின் விவரம்:
கேபினட் அந்தஸ்து
கிஷோர் சந்திர தேவ் - பழங்குடியினர் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்யம்
தினேஷ் திவிவேதி - ரயில்வே
பேனி பிரசாத் வர்மா - உருக்கு
ஜெய்ராம் ரமேஷ்- ஊரக மேம்பாடு
இணை அமைச்சர்கள் (தனி அதிகாரம்)
ஸ்ரீகாந்தி ஜேனா - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை
ஜெயந்தி நடராஜன் - சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்
ஸ்ரீபபான் சிங் கவ்டோவர் - வடகிழக்கு மேம்பாட்டுத் துறை
குருதாஸ் காமத் - குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறை
இணை அமைச்சர்கள்
சுதிப் பந்தோபாத்யாயா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
சரண் தாஸ் மஹந்த் - வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை
ஜிதேந்திர சிங் - உள்துறை
மிலிந்த் தியோரா - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ராஜிவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரங்கள்
அமைச்சர்கள் சிலருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த துறை மாற்றப்பட்டு புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
கேபினட் அந்தஸ்து
விலாஸ்ராவ் தேஷ்முக் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ம் மற்றும் பூகோள அறிவியல்
வீரப்ப மொய்லி - கம்பெனி விவகாரங்கள்
ஆனந்த் சர்மா - தொழில் மற்றும் வணிகத்துறை; ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பு
பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரங்கள்; நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பு
சல்மான் குர்ஷீத் - சட்டம் மற்றும் நீதித்துறை ; சிறுபான்மை விவகாரங்கள் கூடுதல் பொறுப்பு
இணை அமைச்சர்கள்
இ.அகமது - வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாடு
வி.நாராயணசாமி - பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியம்; மற்றும் பிரதமர் அலுவலகம்
ஹரீஷ் ராவத் - வேளாண் மற்றும் உணவு படுத்துதல் துறை; மற்றும் நாடாளுமன்ற விவகாரம்
முகுல் ராய் - ஷிப்பிங்
அஷ்வனி குமார் - திட்டமிடல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பூகோள அறிவியல்
நீக்கப்பட்ட அமைச்சர்கள்: முரளி தியோரா, எம்.எஸ். கில், சாய் பிரதாப், பி.கே.ஹந்திக், காந்திலால் புரியா, அருண் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தயாநிதி மாறனும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.
தகவல்:
www.chennaionline.com
|