Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:58:38 PM
புதன் | 8 மே 2024 | துல்ஹஜ் 1742, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:52
மறைவு18:28மறைவு18:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
அமாவசை @ 04:29
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6708
#KOTW6708
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 14, 2011
ரமழான் 1432: நோன்புக் கஞ்சி தயாரிப்பிற்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4243 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (37) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரமலான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிக்க, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம், மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அனுமதி பெற்ற பள்ளிவாசல்கள், தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவர்.

ரமழான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க, 3,801 டன்கள் அரிசியை தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளும், இம்மாதம் 29ஆம் தேதியே ஆயத்தமாக வைத்திருக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, தமிழகத்தில் அனுமதி பெற்று, ஏற்கனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திவரும் பள்ளிவாசல்கள், மொத்த அனுமதியைப் புதுப்பித்து, மாவட்ட ஆட்சியரிடம் பெற்று, நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து அரிசியைப் பெறலாம் என, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:
தினமலர் (13.07.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அம்மாவின் அதிரடி ஆச்சரியம் ஆனால் உண்மை!!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [14 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5982

அஸ்ஸலாமு அழைக்கும்.

ஆஹா.. அருமையுளும் அருமை! அம்மாவின் அதிரடி மாற்றம் அல்லாஹ்வின் அன்பளிப்பு. தொடரட்டும் அணைத்து மக்களின் அன்பை அள்ளிக்கொண்டு செல்லும் உண்மையான, மதவாத சக்திகளை முஸ்லிம்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முற்பட வைக்கும் அழகிய முன்னேற்பாடு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பாராட்டலாம்
posted by saburudeen (united arab emirates) [14 July 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5983

இஸ்லாமியர்கள் மீதான முதல்வர் அம்மாவின் பாசம் பாரட்டுக்குரியது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முஸ்லிம் மக்களின் நன்றிகள்
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [14 July 2011]
IP: 27.*.*.* Singapore | Comment Reference Number: 5996

தமிழா முதல்வர் அவர்களுக்கு முஸ்லிம் மக்களின் நன்றிகள். அதே நேரம் தனது கட்சிக்கார்கள் அணிவகுக்க, கரைவேட்டி அணிந்து கொண்டு கட்சிக்காரர்கள் வருவார்கள் அவர்களுக்கும் இன்னும் பல சட்டிகள் ஏற்றி கஞ்சி பரிமாறுங்கள் என சொல்லி விடக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Muthu Babu (Malay) [14 July 2011]
IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 5997

வெரி குட் , முதல்வரின் வெற்றி பயணம் வெல்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by hm ahmed(sellavppa) (dubai satwa) [14 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6002

அஸ்ஸலாமு அழைக்கும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இது வரை எடுத்த எல்லா நல்ல முயற்சிகளும் வெகு அருமை இதுபோல் அம்மா நாடும் நம் நட்டு மக்களும் நலமுடனும் ஒற்றுமையுடனும் வாழ உங்கள் பனிthotattum என்றும் உங்கள் தொண்டன்

..................'''''''''''''''''''''''''''''''''''''''kayal ahmed''''''''''''''''''


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [15 July 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6003

ஒரு சில கேள்விகள்...

அரிசி சுத்தமானதா? (அரசு மதுபான கடைகள் லாபம் மூலம் ஹராமான வழியில் ஈட்டியதா?)

அப்படியெனில் அடுத்த கட்ட கேள்விகளுக்கு செல்லலாம். இல்லையா.!! முதல் கேள்வியில் அம்மாவின் இந்த பாசம் அவுட்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. good scheme
posted by syedahmed (GZ,China) [15 July 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 6005

Our honourable C.M.'s free distribution of rice for all the mosque in our state during the holy ramalan is very much appreciated and new well planned made by her which really boosted our religious morale. And also, this good scheme shows our C.M. really strengthened our bonds of affection with us. Very many thanks to our C.M. for caring most precious possession that she have.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by vsm ali (kangxi, Jiangmen , China) [15 July 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 6008

நண்பர் ibrahim ibn nowshad ,

இந்த திட்டம் இன்றோ நேற்றோ முடிவு செய்யப்பட்டு , உடனே நடைமுறை படுத்தியது அல்ல. சென்ற ஆட்சியில் புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டு , இப்போது நடைமுறை படுத்தும் திட்டமாக கூட இருக்கலாம். இது ஒருபுறம் இருக்க , அரசின் எந்த ஒரு திட்டமும் , நடைமுறைக்கு வரும்போது , இதற்கு வரும் பணம் ஹலாலா , ஹராமா என்றெல்லாம் , சாதாரண குடிமக்களாகிய நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையில் , நம் இந்திய குடிமக்கள் அனைவரும் அரசுக்கு கடன்காரர்களே ! நமக்காக , நம் மத்திய அரசு , மாநில அரசு , பல்வேறு திட்டங்களுக்காக , உலக வங்கி மற்றும் பல இடங்களில் இருந்தும் கடனாக பல கோடி ரூபாய்களை கடனாக பெற்றிருக்கிறது . அதுபோல நாமும் பல நாடுகளுக்கு கடனாக கொடுத்திருக்கிறோம். இதற்க்கெல்லாம் , பல கோடி ரூபாய்களை வட்டியாக கொடுக்கிறோம் , வட்டியாக வாங்குகிறோம். அரசுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் வருகிறது . தயாரிப்பு பொருட்களின் மீது வரி , வருமான வரி , சொத்து வரி , கடன் கொடுத்ததின் பேரில் வரும் வட்டி , இது போன்று பல. இதையெல்லாம் வைத்துதான் அரசு ஊழியருக்கு சம்பளம், மற்றும் குடி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் , அரசு தரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெரும் நீங்கள் ஹலாலானவரா அல்லது ஹராமானவரா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by சாளை நவாஸ் (sg) [15 July 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6009

ஆஹா ஆரம்பிச்சிடீங்களா? அப்போ ரேஷன் கடைய மூடி விடலாம். ஹஜ் கமிட்டி மானியம் வேண்டாம்னு சொல்லிடலாம். ஹஜ் கமிட்டி மூலம் ஏற்கனவே ஹஜ் செய்தவர்களை திரும்பவும் தனியார் ஹஜ் சர்வீஸ் மூலம் போக சொல்லலாம். ஊரில் உள்ள தண்ணீர் தொட்டி, ரோடு எல்லாவற்றையும் இடித்து தள்ளி விடலாம். அரசாங்க பள்ளிகளை மூடி விடலாம். அப்போ அழகிரி கொடுத்த 1000 ரூபாயை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

சாளை நவாஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஆரம்பிச்சுட்டாங்கய்யா....!!!
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [15 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6010

ஆரம்பிச்சுட்டாங்கய்யா....!!!

குடிமக்கள் கையில் உள்ள காசை கொடுத்துவிட்டு, தள்ளாடி வருகிறானே...அந்த டாஸ்மாக் வருமானம் மட்டும் இல்லை என்றால், அரசு நிர்வாகம் தள்ளாடி விடும்.

ஒவ்வொரு குடிமகன் தலையின் மீதும் வட்டியுடன் கூடிய கடன்..

நமக்கு கொடுக்கும் அனைத்து மானியங்களும் காஸ் முதல், ரேசன் பொருட்கள் வரை எப்படி வருகிறது..

இஸ்லாமிய ஆட்சியாக இருந்தால், நாம் கவலைப்படுவதில் நியாயம் உள்ளது..நடப்பது அப்படியான ஆட்சியா...

ரெம்பவும் ஸ்கேல் பிடித்து நடந்தால் அவ்வளவுதான். நம்மால் எவ்வளவு முடியுமோ அதுவரை இஸ்லாத்தை பேணி வாழுங்க..

வல்ல ரஹ்மான் அனைத்தையும் நன்கு அறிந்தவன் மற்றும் அதிகம் மன்னிக்கக் கூடியவன்..சரிங்களா..

அம்மாவிற்கு நன்றி சொல்லவில்லையே..சாரி..அம்மா அவர்களே உங்களுக்கு கோடி நன்றிகள்..வாழ்க வளமுடன்.

சாளை S.I.ஜியாவுதீன் அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வாழ்த்துக்கள் அம்மா.நன்றிகள் பல..
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [15 July 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 6013

ஒன்று தான் போகணும்? இலன்னா போறவங்களுக்கு வழி கொடுத்து ஒதுங்கி நிற்கணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Hasan Abdul Kader (Kayalpatnam) [15 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6014

அரிசி கொடுக்குறது எல்லாம் சரி , 5% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [16 July 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6027

அம்மையார் செய்த சில தவறுகளை சுட்டி காட்டிய நாம், அவருடைய இந்த அரிசி வழங்கும் திட்டத்தை பாராட்ட வேண்டும்.

சகோதரர் குறிப்பிட்டது போல் அரசு நமக்கு தரும் மானியம், (கேஸ், ரேசன் பொருள், ஹஜ் பயணம், இன்னும் பல மானியங்கள்) எதன் மூலம் கிடைக்கின்றது என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்,

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல கூடாது,
ரேசன் பொருட்கள் வாங்க கூடாது,
தனியாரிடம் காஸ் வாங்கணும்,
ஆகா, உங்க வீட்டு பட்ஜெட்ட பாருங்க,
மாத செலவு மூன்று மடங்கு அதிகரிச்சிடும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Javed Nazeem (Chennai) [16 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6030

அரசின் இந்த உதவி நிச்சயம் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் நமக்கு கிடைக்கும் உதவிக்கான நிதி ஆதாரம் தவறானது எனத் தெளிவாகத் தெரிய வருமானால் அதை தவிர்க்க வேண்டியது* நமது கடமை. இரண்டு விஷயங்களையும் தனித்தனியே அணுக வேண்டும்.

* சில அவசியத் தேவைகளுக்கு விதி விலக்கு இருக்கலாம் - இங்கே கூறப்படும் காரணங்கள் அவசியத் தேவைகள் அல்ல


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by cnash (Makkah ) [16 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6036

அப்படி என்றால் இங்கே சொன்ன எதுமே அத்தியாவசியமாக தெரியவில்லையே ஹஜ்க்கு வழங்கப்படும் மானியம் முதல் உலமாக்கள் பென்ஷன், உலமாக்கள் சைக்கிள் வரை.....கவர்ன்மென்ட் மட்டும் இல்லை ...நாம் வேலை பார்க்கும் கார்ப்ரடே கம்பெனி வரை வட்டியை அடிப்படையாக கொண்டது தான்.. என்ன செய்வது!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Javed Nazeem (Chennai) [16 July 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 6056

சில தருணங்களில் ஹராமானது கூட ஹலால் ஆகும் - அதைத்தான் அவசியத் தேவைகள் என்று குறிப்பிட்டேன்

>> நாம் வேலை பார்க்கும் கார்ப்ரடே கம்பெனி வரை வட்டியை அடிப்படையாக கொண்டது தான்

நமது கம்பெனி நமக்கு சம்பளம் தான் தருகிறது உதவி செய்யவில்லை

>> என்ன செய்வது!!

முடிந்த வரை தவறுகளை மாற்ற முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் குறைந்த பட்சம் மனதளவிலாவது வெறுக்க வேண்டும். இதெல்லாம் சகஜம் தானே என்கிற நிலை ஆபத்தானது

கீழ்காணும் URL ல் உள்ள செய்தியைப் பாருங்கள் - இது போன்று சிலரும் இருக்கின்றார்கள்

http://tinyurl.com/66ofx2k


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [17 July 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6058

அல்லாஹ் மிக்க அறிந்தவன், மாபெரும் கிருபையாளன், மன்னிப்போன், ஞானமிக்கவன்.. தவறு என்று தெரிந்த பின் தவிர்ப்பது நல்லது. முஹ்மின்கள் யார் எனில் தான் செய்த தவறுக்காக வருதுபவர்கள், அல்லாஹ்வின் பால் தவ்பா செய்பவர்கள். முஸ்லிம்கள் ஒரே அணியில் உள்ளவர்கள் இஸ்லாத்தில் உள்ளவர்கள்.

நாம் முஸ்லிம் மட்டுமா இல்லை முஹ்மினா என்று நாம் தாம் நம்மை உரசி பார்க்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [17 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6060

Whether we perform Hajj through Hajj Comitee or privately is not a question. Whether we did it with Ihlas is important. Allah doesn't ask us to perform through Hajj Comitee alone. We have alot of choice to go private as well. What we do if Allah doesn't accept our Hajj? Anyone of us think this? As we know Quran ayat "They wil come to do Hajj by walk, by camels which is slim from farthest location" 22:27.

But how many of us take photos in Masjidul Haram and post them in Facebook? The Hajj for Allah or to other people want to see you that in Masjidul Haram?

This kind of situation comes to the hearts of people who often self test and restrain from wordly pleasure.

In LPG, we are collecting from HP, Bharat, Indane etc. Which are private sector governed by Government? I do not know this section. If anyone knows please clarify this.

முடிந்த வரை தவறுகளை மாற்ற முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் குறைந்த பட்சம் மனதளவிலாவது வெறுக்க வேண்டும். இதெல்லாம் சகஜம் தானே என்கிற நிலை ஆபத்தானது

I agree this from Babu kaka.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by vsm ali (Kangxi, Jiangmen, China) [17 July 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 6064

எந்த ஒரு திட்டத்திற்கும் , அரசு கஜானாவில் இருந்துதான் பணம் எடுக்கப்படுகிறது. அரசுக்கு பல வகையில் வருவாய் வருகிறது. டாஸ்மாக்கில் வந்த பணம் இந்த திட்டத்திற்கு , சொத்து வருவாய் அந்த திட்டத்திற்கு என்று குறிப்பிட்டு செலவிடப்படுவதில்லை. அரிசிக்கான பணம் டாஸ்மாக்கில் கிடைத்த இலாபம் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை . தவறு என்று தெரிந்தால் திருத்திக்கொள்வது நல்லதுதான். அதற்காக அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் பணம் எப்படி வருகிறது என்று ஆராய்ந்துகொண்டிருந்தால் , நாம் எந்த ஒரு நலத்திட்டத்தையும் ஏற்கக்கூடாது . அரசின் ஹஜ் சர்வீஸ் மூலம் ஹஜ் செய்யக்கூடாது. அரசு வாகனங்களில் பயணிக்கக்கூடாது. அரசு பள்ளிகள் , கல்லூரிகளில் படிக்கக்கூடாது . ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக்கூடாது . அரசு போட்ட ரோடுகளில் நடப்பதே தவறு . நான் முன்பே சொன்ன மாதிரி , நாமெல்லாம் அரசுக்கு கடன் காரர்கள். ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் சில ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. Ibrahim Ibn Nowshad , நீங்கள் மரணம் எய்துவதற்கு முன் , அரசுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து விட்டு , நீங்கள் நல்ல ஒரு முஹ்மின் என்று உலகிற்கு பறைசாற்றுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. நல்லதை வரவேற்போம்!
posted by Niyaz (Riyadh) [17 July 2011]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 6065

சிலர் அப்படிதான் தானும் படுக்க மாட்டார்கள் தள்ளியும் படுக்க மாட்டார்கள்!நன்மையை வரவேற்போம் தீமையை சுட்டி காட்டுவோம்! Thanks CM JJ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [17 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6067

டாஸ்மாக் கடையில் இருந்து குடிக்கும் பொது பிஸ்மில்லாஹ் என்று கூறினாயா இல்லையா என்ற கதைபோல் உள்ளது.

I don't want to argue on this post further.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by சாளை S.I. ஜியாவுதீன் (அல்கோபார்) [17 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6068

சகோ. நியாஸ் அவர்களே..

உங்களின் எடுத்துக்காட்டு " தானும் படுக்க மாட்டார்கள் தள்ளியும் படுக்க மாட்டார்கள் " - இதை வேறு ஒரு விசயத்துக்கு அல்லவா உதாரணமாக சொல்லுவார்கள்..

இந்த வழக்கு மொழியை தாங்கள் தவிர்ப்பது நலம்.

இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் பகுதி ஜே..ஜே.. என்று களைகட்டுகிறதே..தொடரட்டும் ஆரோக்யமாக.

சாளை S.I. ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Abdulkader ThaikaSahib MSS (Riyadh, KSA) [17 July 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6070

சகோ. VSM Ali , நல்லதொரு கருத்து, எந்த திட்டத்திற்கு எதில் இருந்து பணம் செலவிட படுகின்றது என்று அரசுக்கே தெரியாது, => மக்கள் வரி பணம்., டாஸ்மார்க் என்று பல வழிகளில் இருந்து அரசு கஜானாவிற்கு செல்கிறது.

அரசை விடுங்கள், தனியாரும் வங்கியில் வட்டிக்கு பணம் பெற்று தான் தொழில் துவங்குகின்றனர்.

LPG Cylinder , தனியார் மூலம் பெறப்பட்டாலும், அதற்க்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இதன் மூலம் ரூ. 600 -க்கும் அதிகமான விலையில் விற்கப்பட வேண்டிய LPG Cylinder ,அரசு வழங்கும் மானியம் கழித்து, ரூ. 350 -க்கு (இன்றைய Exact LPG Cylinder விலை தெரியவில்லை) நமக்கு கிடைக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by vsm ali (Kangxi, Jiangmen, China) [17 July 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 6074

Ibrahim Ibn Nowshad ., " argue " ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் . அனைவரும் வரவேர்ப்பார்கள். இப்படி " adamant " ஆக இருக்க கூடாது. அரிசி சுத்தமாக இல்லை என்றால் அதை கழுவி சுத்தம் செய்து சாப்பிடலாம்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. தொட்டுக்க ஊறுகாயும் வேணும்...!
posted by zubair (riyadh) [17 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6075

நோன்புக் கஞ்சி தயாரிப்பிற்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் அம்மாவுக்கு.... நல் வாழ்த்துகளும், பாராட்டுகளும். பாராட்டு..... ஓசி அரிசி வழங்குவதால் அல்ல. இஸ்லாமியர்கள் மீது ஒரு அக்கறை வந்ததை அறிந்து.

சில நண்பர்கள் ஹலாலா, ஹராமா என்று நோண்டி பார்க்கிறார்கள். இப்படி எல்லாம் பார்ப்பது நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இஸ்லாமிய சட்டம் கடைப்பிடிக்கும் சவுதியில் பல,பல இன்சூரன்ஸ் நடைமுறை படுத்தப்பட்டு.... நிர்ப்பந்தமும் படுத்தப்பட்டுள்ளது இதை நான் ஒரு இமாமிடம் கேட்ட போது அவர்கள் சொன்ன ஒரே.... வார்த்தை. சாதாரண நாம் இதை சிந்திப்பது சரி இல்லை. இவைகளுக்கான மொத்த பொறுப்பும் ஆட்சியாளரையே .... சேரும் என்றார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by AbdilKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [17 July 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6076

சகோதரருடைய எடுத்து காட்டு, "டாஸ்மாக் கடையில் இருந்து குடிக்கும் பொது பிஸ்மில்லாஹ் என்று கூறினாயா இல்லையா என்ற கதைபோல் உள்ளது. " இது செய்திக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை.

அரசு வழங்கும் அரிசி "டாஸ்மார்க் கடை லாபத்தில் இருந்து இஸ்லாமியருக்கு வழங்குகின்றோம்" என்று அரசு அறிவிக்கவில்லையே? இவ்வாறு கூறுபவர் இனி தனியாரிடம் (அதாவது அரசு மானியம் இல்லாத) LPG Cylinder வாங்கி உபயோகிக்கவும்.,

அவ்வாறு பார்த்தால், நமதூரில் உள்ள பள்ளிகளான, எல். கே. மேல்நிலை பள்ளி, ஜுபைதா பெண்கள் பள்ளி தீவு தெரு அரசு பெண்கள் பள்ளி, மற்றும் பல அரசு சார்ந்த பள்ளிகள், இவைகளில் வழங்கப்படும் கல்விக்கு அரசு தானே செலவு செய்கிறது? நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்த பள்ளிகளில் பயின்ற அனைவர்களது கல்வியும் ஹராம்

நமதூரில்/மாவட்டத்தில்/மாநிலத்தில்/நாட்டில் போடப்படும் அனைத்து சாலைகளும் அரசு செலவில்தான், தாங்கள் அவற்றை உபயோகிப்பது உங்கள் கருத்துப்படி ஹராம். (எல்லாம் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே)

ஜியாவுதீன் காகா, இருந்தாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்த்தி..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. எண்ணம் போல் வாழ்க்கை...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [17 July 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 6077

உருவத்தை பார்ப்பவன் மனிதன் அதில் உள்ளதை காண்பவன் ( அறிந்தவன் ) இறைவன் (அல்லாஹ்) ஆக எந்த ஒரு செயலும் உள்ளத்தின் அடிபடையில் மட்டுமே அமைகிறது. அல்லாஹு எல்லாம் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Javed Nazeem (Chennai) [17 July 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 6091

கருத்துக்களை விமர்சனம் செய்வது வரவேற்கத்தக்கது - கருத்து சொல்வபவர்களை விமர்சிப்பது சரியல்ல. சில நேரங்களில் தனி ஒருவர் corner செய்யப்படுவது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுவது வருத்தத்திற்குரியது.

இது ஒரு சகோதரத்துவ கருத்துப் பரிமாற்றம் தான். யாரும் வெற்றியோ தோல்வியோ அடையப் போவதில்லை. ஒரு வார்த்தை / வாசகம் / கருத்து, தவறாகிவிடும் பட்சத்தில் அது முறையாக எடுத்து சொல்லப்பட்டால் தவறுகள் உணரப்படலாம். கீழ்காணும் URLல் பதிவு எண் 11 மற்றும் 13 கருத்துக்களை பாருங்கள். சாளை நவாஸ் எவ்வளவு நளினமாக எனது தவறை சுட்டிக் காட்டுகிறார்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=6632

கீழ்காணும் விவாதம் சம்பந்தமான எனது ஓரிரு கருத்துக்களை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.

1. அரசின் நிதி ஆதாரத்தில் மது விற்ற காசும் இருப்பதால் அரசு வழங்கும் மான்யங்களை ஏற்கலாமா வேண்டாமா?

2. ஒரு வேளை ஏற்றுக் கொள்வது என்றால் முழுமையாகவா அல்லது selective ஆகவா?

3. இந்த முடிவுகளுக்கான அடிப்படை என்ன?

இதன் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான விவாதம் நடந்தால் அதில் தொடர்ந்து பங்கு பெறவே இன்னும் விரும்புகின்றேன். Seyed, Basheer, Shameem உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [17 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6092

ஏன்பா நசீம் பாபு, எங்களை ஏன் சண்டைக்கு கூப்பிடுகிறாய் :)

It is beyond our control how the govt receives its revenue and how it spends. The unwritten contract between the citizens and govt is that the citizens pay the taxes (and other dues), and receive benefits. Some (உங்கள மாதிரி சீனியர் மேனேஜர்ஸ்) may pay more taxes than what they get. Poor may pay much less tax (atleast Sales Tax) and receive more benefits.

Viewing from an islamic perspective, the sources of these taxes themselves may be wrong. Revenue from soft-pornography (e.g: many Movies, TV programs etc), intoxicants (Tasmac) and other prohibited businesses are haraam. Similarly, some of the Govt's expenditures fall into haraam categories.

In situations where there are mixed elements, we are not expected to be completely out of the system. Our responsibility is only to be sure we are not on the wrong side. An example would be Islamic banks. If a bank follows Shareeah in dealing with individuals, but deals with Riba in transactions involving treasuries or companies, then we can work in the department dealing with individuals. (This example is taken from IslamQA.com)

ஆகவே அரசு தரும் மானியங்களை வாங்கலாம் என்பது என் கருத்து. அந்த மானியங்கள், இலவசங்கள் நல்லவைகள் தானா என்று மட்டும் பார்க்கவும். Allaah knows best.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Javed Nazeem (Chennai) [18 July 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 6094

இதுக்குத் தான் ஊருல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுன்றது. இவ்ளோ விஷயம் தெரிஞ்சி வச்சிட்டு அமைதியா இருந்தா அது எப்படி?

இப்ப கூட உனக்கு லாபம் தானே, சண்டை தொடர்ந்தால் வரக்கூடிய நிறைய பதிவுகளை படித்து, எடிட் பண்ணி, அப்ரூவ் பண்ணுகிற சிரமம் குறைந்து விட்டது அல்லவா?

சரி all's well that ends well. அடுத்த சண்டையில் மீட் பண்ணலாம் :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by vsm ali (Kangxi, Jiangmen, China) [18 July 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 6095

In situations where there are mixed elements, we are not expected to be completely out of the system. Our responsibility is only to be sure we are not on the wrong side. An example would be Islamic banks. If a bank follows Shareeah in dealing with individuals, but deals with Riba in transactions involving treasuries or companies, then we can work in the department dealing with individuals. (This example is taken from IslamQA.com)

ஆகவே அரசு தரும் மானியங்களை வாங்கலாம் என்பது என் கருத்து. அந்த மானியங்கள், இலவசங்கள் நல்லவைகள் தானா என்று மட்டும் பார்க்கவும். Allaah knows best.

Among all other comments , this is the best one . much suitable to " adamant and orthodoxies "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [18 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6097

அஸ்ஸலாமு.அலைக்கும்.!நஹ்மதுஹு.வநு.ஸல்லிஅலா.. றஸூலிஹில்கறீம்.!

ரெமப சந்தோஷம். அழகாக இருக்கிறது சம்மந்தப்பட்ட 20-30 கமன்டஸில் மக்களின் டிஸ்கஷன்ஸ் ஜோர் . நன்றி. எல்லாம் எழுதியாச்சு தான். ஆனால் நாம் குடிக்கும் தண்ணீரைப் பற்றி விள்க்கம் என்ன கூறுவீர்கள்.? லிஸன் ப்ளீஸ்.

(சுருக்க வரலாறு)1943 ல் குடிக்க, குளிக்க,உப்புத்தண்ணீர் தான் நம்மூர் விதி . இதனை மாற்ற, ஜன நாயக ஸபையினர் தியாகத்தால் போட்ட திட்டங்களால் ஐக்கிய முன்னேற்ற சங்கம் உருவானது.அதனால் காயல்பட்டண குடிநீர் திட்டம் உருவானது.டொனேஷன்ஸ் நாலரை ல. உக்கு கலக்ட் ஆனது. நிதியை எப்படி பாது காப்பது? என்ற பிரச்சனை..மஷூறா நடந்தது ஐ.மு.ச வில்(நபி வழியில் அல்ல). பணம் வங்கியில் போடப்பட்டது. ஆனால் மஷூறாவில் .எதிர் அபிப்பிராயம் சொன்னது செய்தாலிம் (றஹ்)அவர்களும் சூரங்குடி முஹம்மது இஸ்மாயீல் ஆலிம்(றஹ்)அவர்களுமே எதிர்த்து றாயீ சொன்னார்களாம்..*(அல்லாஹும்மங்ஃபிற் லஹுமா)... நடந்தது என்ன?

பணம் வங்கியில் போட்டாச்சு. நாம் இன்று வரை குடிப்பது வட்டீல தானே தண்ணீர் குடிக்கிறோம். இதனால் ஒழித்து ஒழித்து வட்டியை வியாபாரம் செய்து வந்த நம்மவர்களுக்கு வட்டியில் திமுப்பு வந்து விட்டது இன்று வரை சுமார் 99புள்ளி999 கம்பெனியர்களும்...தனியார்களும் மூழ்கி இருப்பது அதிலேதான் (சொல்ல வெட்கமா இருக்கிறது)இருந்த .கொஞ்ச நஞ்ச ஈமானும்.மக்களிடத்தில் என்னவாச்சு???? ஒரு வரலாறு கூறுகிறேன். இந்த டிஸ்கஷனுக்கெல்லாம் விடை தெரியும் எனெ நினைக்கிறேன். அல்லாஹ் ஹிதாயத் நம் எல்லோருக்கும் தரட்டும்.

நமதூரிலேயே பிறந்து , இங்கேயே வாழ்ந்து இங்கேயே மரணமான கண் கண்ட ஒலி நாயகம் மற்ஹூம் ஸெய்யித் இப்றாஹிம் அல்லாமா (றஹ்)அவர்களிடையே மார்க்க சந்தேகஙளை வழமைபோல் ஜாமில் அஜ்ஹரில் வைத்து கேட்கும்போது ஒரு சம்பாஷனை:- வர்ணனை (ஆலிம் அவர்கள் என்னுடன் அன்பாகவும்,கிருபையாகவும், சிலவேளை தமாஷாகவும் பேசுவார்கள்)

டி எம் ஆர்:-ஆலிம்ஸா ஊர்லெ மர்க்கம் எல்லாம் போச்சூ.. போச்சூ. இனி இந்த ஊர்ல இருக்கிறதா இல்லையா என்ற எண்ணம் தான் வருதூ...ண்டு பயான்களிலே சொல்றீங்களே (ரெகார்டிங் இருக்கிறது)நீங்களெல்லாம் சேர்ந்து தானே ஐ.மு.ச வில் தன்னிபணத்தெ பேங்க்ல போட்டு வட்டீ பேர்ல பயந்த மக்களுக்கு வழி காட்டுனியோ.இதனாலதானே ஹறாம் சம்பாத்யம் பெருகி மக்கள் நஃபகா, கிஸ்வத் கொடுத்து ஊர் சோறு போட்டு. கந்தூரி கொடுத்து ஹறாமான பொருள் எல்லாம் ஊரில் நிரமபி ஈமான் வெளி ஏறுதே......?

ஆலிம் அவர்கள்:_ (கோஃபக்கண் களோடும் முகம் சிவந்தும் காணப்பட்டாலும், ஆறுதலாக)ஆ...ங். ஊம்.என்னை ப்பத்தி என்ன நினைக்கிறா..?.. அபடீண்டு சொல்லிபோட்டு மேற்கண்ட ஒன்னாவது பேரா நாலாவது வரி ஸ்ப்ஜக்ட்ல இருண்ட்ய்ஹு படியிங்கோ... அச்சலாம் தொடர்புக்கு280852 ஃபோன் அடிங்க. வஸ்ஸலாம்

பி.கு:=-நபி வழி லெ நாஙகதான் நடக்கிறோம், நாஙகதான் தரீக்கா கொடீல இருக்கிறோம் என்று தப்லீக் செய்ரவங்களுக்கும் இதுபாடமாகலாம்.இன்ஷா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Javed Nazeem (Chennai) [18 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6100

Dear Bro Ali, unfortunately I am neither adamant, nor orthodox. The fact was, I was not clear and hence was asking for some clarifications honestly. Name calling is not good while debating - apart from getting confrontational, your good points will be lost.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI ( Jeddah.) [19 July 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 6161

முதல்வர் அவர்கள் எல்லோருக்கும் பொதுவாக பொறுப்புடன் இந்த இலவச திட்டத்தை வழங்கி இருப்பது நன்றிக்குரியது. நம்மவர்கள் பலபேர் எப்போதும் ஒருஅரசியல் கட்சி சாப்பகவே சிந்திக்கிறார்கள் எந்த அமைப்பும் நல்லதை அமல் நடத்தும்போதும் அங்கிகரிக்கும் பெருந்தன்மையை நாம் பெற்றிட வேண்டும். அரசு மானியங்களின் சுத்தத்தை ஆராய்ந்தால் ஒரு சரியான முடிவுக்கு வருவது சிரமம்தான். மானியத்தை முழுமையாக தவிர்க்க இயலவில்லைதான், காரணம் நம்மில் பலபேரும் ஹஜ்ஜுக்கு அரசு மானியாதில்தான் செல்லும்னிலையில் இருக்கிறார்கள், அதிலும் சிலர் பலமுறை மானியத்தில் செல்கிறார்கள், அரசு மானியத்தில் கடமையான ஹஜ்ஜை முடித்தவர்கள் மறுமுறையும் மானியத்தில் வருகிறார்கள் வசதி வாய்ப்பு இருப்பவர்களும். இதில் நண்பர் ஒருவர் சொன்னதுபோல் ஆட்சியாளர்களே பொறுப்பாளர்கள் அதுவும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு பொருந்தும், முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களின் கீழ் வரும் முஸ்லிம் பொதுமக்கள் எப்படி செயல்படவேண்டும் என்பதை விளக்குவார்கள் தெளிவான தெரிவை தரவேண்டும். அனைத்தையும் அறிபவன் அல்லாஹ் ஒருவனே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by vsm ali (singapore) [19 July 2011]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 6165

salih kaka, இதை இத்தோடு முடித்து விடுங்களேன்? ஹலால், ஹராம் எது என்பது நம் ஜனங்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. அதை அவர்கள் மிகவும் சீராக பேணிக்கொல்வார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. ஃபத்வா.... விளையாட்டல்ல.
posted by zubair (riyadh) [19 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6172

அஸ்ஸலாமு அலைக்கும். Solukku Seyed Mohamed Sahib SMI காக்கா..... நான் என் ஃபத்வாவா சொல்லவில்லை. இந்த மாதிரி இமாம் சொன்னார் என்பது தான்..... எல்லாம் அல்லாஹ் நன்கு அறிந்தவன். இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கும் நாட்டுக்கே நாம் வாய் திறக்க முடிய வில்லை என்று சொல்லும் போது.........! நம் நாட்டிற்கு எதிராக ஜிஹாதா புரிய முடியும்? முடிந்தவரை தவிர்த்து நடப்போம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah.) [19 July 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6187

நான் எனது கருத்தின் இறுதியில் குறிபிட்டது உலமாக்களைதான் நண்பர் zubair உங்களை அல்ல, இறைவன் நம்மனைவர்களையும் நேரான பாதையில் செலுத்துவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved