(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் அதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறாரோ அது அவருக்கு நல்லுதவியாக அமையும். யார் அதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றாவார். நூல் : முஸ்லிம் 1900)
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). காயல்பட்டணத்தில் 1953ம் வருடம் செப்டம்பர் திங்கள் 15ம் நாள் ஹிஜ்ரி 1373 முஹர்ரம் பிறை 6 வெள்ளிக்கிழமை அன்று இப்பள்ளி இப்பகுதி ஆன்றோர்களால் வக்/பு செய்யப்பட்டது. இன்றைக்கு 58 வருடங்களை கடந்துள்ள நிலையில் பள்ளி கட்டிடம் சிதலமடைந்து பலமுறை பெய்த மழையின் காரணத்தால் கான்கிரேட் வெடிப்பு மழை ஒழுக்கு போன்றவைகளால் தொழ வருபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையையும் இடநெருக்கடியையும் கோடை வெயில் கொடுமையும் உண்டானதால் கால நிலைக்கு ஏற்றவாறு இப்பள்ளியை புதுப்பித்துக் கட்டுவததென 31-03-2007 சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் ஜனாப் எஸ்.எல்.எஸ்.இபுராஹீம் (சொளுக்கு காக்கா) அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி கட்டுவதற்கான வரைபடம் காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சியின் அனுமதி மாநில அரசு சம்பந்தப்பட்ட ஒப்புதல் தமிழ்நாடு வக்/பு வாரிய தடையில்லா சான்று (என்.ஓ.சி) மற்றும் அனுமதி ஆகியவையும் முறைப்படி பெற்றதுடன் ஜமாஅத் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பள்ளிவாசலை நிர்மானிக்கும் பணியினை தொடங்கினோம். சகோதரர்களின் உதவி வேண்டி கடந்த 7 முறை அவ்வப்போது கட்டிட வளர்ச்சி குறித்து காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் தகவல் தந்துள்ளோம்.
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் அனைவர்களின் நிதி உதவியினால் இன்று வரை 75 சதவீதம் பணிகள் அல்லாஹ் உதவியால் நிறைவடைந்துள்ளன. இன்னும் 25 சதவீத பணிகள் பாக்கி உள்ளன. பள்ளியின் மின் விளக்கு, மின்சார பணிகள், மார்பல் பணிகள், பள்ளிக்கான பெயிண்ட் அடித்தல், காம்பவுண்ட் பணிகள், பள்ளியின் மினாரா அமைப்பு பணிகள் இன்னும் சில பணிகளும் நிறைவு செய்யாமல் உள்ளது. அந்த வகைக்கு இன்னும் ரூ.10 லட்சம் வரை தேவை உள்ளது. மேலே கண்ட புகைப்படங்கள் அனைத்தும் இன்றைய தேதி வரை பள்ளிவாசலின் கட்டிடப்பணி படிப்படியாக நிறைவடைந்துள்ளதைக் காட்டுவதாகும் அல்ஹம்துலில்லாஹ். மீதமுள்ள கட்டிடப்பணிகளையும் இன்ஷா அல்லாஹ் நிறைவு செய்து வரும் ரமழானில் புதிய பள்ளியில் தொழுகை நடத்திட முயன்று வருகிறோம். உங்கள் அனைவர்களின் நிதியினைக் கொண்டுதான் இந்தளவு காரியங்களை நிறைவேற்ற முடிந்தது. மீதியுள்ள பணிகளையும் செய்து முடிக்க ரமழானுக்கு முன்பு உங்களின் பேருதவியை விரும்பி வேண்டுகிறோம்.
ஆகவே இதனை பார்வையிடும் அன்பர்களும், நம் ஊர் மக்களும் உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், நிறுவனங்கள் ஆகியோர்களிடம் நிதி உதவியினை பெற்று கீழ்கண்ட முகவரிக்கு ஏற்பாடு செய்துதரும்படி வேண்டுகிறோம். நிதி உதவி செய்த அன்பர்களுக்கு மனமாhந்த நன்றி.
எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பணிக்கு உதவிடும் அனைவருக்கும் நலமான வளமான வாழ்வை தந்தருள வேண்டுமென இருகையேந்தி இறைஞ்சுகின்றோம். ஆமீன்.
நிதியினை அனுப்ப வேண்டிய முகவரி
Kindly Send your Cheque / Cash / DD in favour of
KATTU THAIKA AROOSIYA PALLI
A/C NO : 18635
Central Bank of India
Kayalpatnam Branch
Tamil Nadu, India.
or
S.M.B.MOOSA NAINA
A/C NO : 19701
CENTRAL BANK OF INDIA
KAYALPATNAM BRANCH
TAMIL NADU, INDIA
இவண்
கட்டிட பணிக்குழு
காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளி
காயல்பட்டணம்
தகவல்:
அல்ஹாஜ் எம்.ஏ.காதர் அலி
|