இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலில் ஜூலை 08, 09, 10 தேதிகளில் நடைபெற்றது.
கருத்தரங்கம்:
மாநாட்டின் நிறைவு நாளான 10.07.2011 அன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டுப் பந்தலில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரங்கில், “இனிய வாழ்வுக்கு இஸ்லாமிய நெறிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவரும், “மானுட வசந்தம்”” தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடர் மூலம் இஸ்லாமிய மார்க்கச் செய்திகளை உலகறியச் செய்து வருபவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார்.
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப், ஹாஜி எம்.என்.அபூபக்கர் பக்ரீன், ஹாஜி எம்.எம்.அஹ்மத், எம்.ஏ.காதர் அலீ, ஹாஜி என்.எம்.முஹம்மத் ஃபாரூக், ஹாஜி பிரபு சுல்தான், ஹாஜி கவிஞர் ஏ.ஆர்.தாஹா, ஏ.பத்ருத்தீன், ஹாஜி எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். மாநாட்டு விழாக்குழு தலைவர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை நாட்டின் முன்னாள் அமைச்சரும், நடப்பு பாராளுமன்ற உறுப்பினருமான ஹாஜி ஏ.எச்.எம்.அஸ்வர் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், நெல்லை தூய யோவான் கல்லூரியின் பேராசிரியர் வளன் அரசு, புதுச்சேரி பேராசிரியர் இளங்கோ, முனைவர் ராஜகோபால், நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் பல்வேறு தலைப்புகளிலான, இஸ்லாமிய மார்க்க நெறிகள் குறித்து கருத்துரையாற்றினர்.
நிறைவாக, ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் நன்றி கூற, அல்அஸ்ரார் மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ துஆவுடன் கருத்தரங்க நிகழ்வுகள் நிறைவுற்றன.
இக்கருத்தரங்கில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
|