இந்த ஆண்டு சிறந்த பள்ளிக்கூடமாக தேர்வு செய்யப்பட்ட சுபைதா மேல்நிலைப்பள்ளிக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றம் - அப்பள்ளியின் ஏற்பாட்டில், பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான அறிவியல் கண்காட்சி நடத்த ரூபாய் 25,000 தொகை பரிசு வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து - சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் ஏற்பாட்டில், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் துணையுடன், வரும் ஜூலை 28 (வியாழன்) அன்று, அறிவியல் கண்காட்சி, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து இரு பாகங்களாக நடத்தப்பட உள்ளது.
காயல்பட்டினம் நகரின் பள்ளிக்கூட மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொண்டுவரும் பொருட்டு, அனைத்து பள்ளிகளின் மாணவர்களும், தங்கள் அறிவியல் தயாரிப்புகளை (Science Exhibits) கண்காட்சியில் பார்வைக்கு வைக்கலாம். அதில் சிறந்த தயாரிப்புகளுக்கு பரிசுகளும் உண்டு.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக - அறிவியல் தொடர்பான அம்சங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் எடுத்துச் சொல்லும் பேராசிரியர் சுப்பையா பாண்டியனின் அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் பாண்டியன் மக்கள் தொலைக்காட்சியில் அறிவியல் எளிது, ஏன் எதற்கு எப்படி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
தகவல்:
செய்யத் ஹசன்,
அல் கோபார், சவுதி அரேபியா.
|