இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இன்று துவங்கவுள்ள இம்மாநாட்டிற்காக வெளியூர்களிலிருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பொதுமக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை பேருந்து நிறுத்தங்களிலிருந்து வரவேற்பதற்காக தன்னார்வலர்கள் மாநாட்டின் அடையாள அட்டை அணிந்து வரவேற்று, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்து வருகின்றனர்.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதிதாக பலரும் திரண்டு வந்திருப்பதால், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் இன்று ஜும்ஆ தொழுகையின்போது இட நெருக்கடி ஏற்பட்டது. பள்ளிவாசல் வளாகத்திற்குள் நின்று தொழ இடம் கிடைக்காதோருக்காக சாலையில் இரண்டு வரிசைகளுக்கு பாய் விரிக்கப்பட்டது. கொளுத்தும் வெயிலில் அவர்கள் அவற்றில் நின்று தொழுதனர்.
|