"மீடியாக்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்'’ என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
நேற்று மாலை கோபாலபுரம் வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் கூறும்போது,
"உலகில், குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது... அவர்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்; அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல,'' என்றார்.
பின், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:-
தயாநிதிக்கு தி.மு.க., துணை நிற்குமா?
துணை இருக்கும்.
தயாநிதிக்கு ஆதரவாக, கட்சி சார்பில் இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லையே?
இதுவரை என்ன நடந்திருக்கு...?
காங்கிரஸ் சார்பில் யாரேனும் உங்களிடம் பேசினார்களா?
இல்லை!
தொலைபேசியில் சோனியாவுடன் பேசினீர்களா?
தொடர்பு கொள்ளவில்லை...
மத்திய அமைச்சரவையிலிருந்து, ராஜா, தயாநிதி ஆகியோர் விலகிவிட்டதால், வேறு யாருக்கும் பதவி கேட்பீர்களா?
தெரியாது!
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளீர்களாமே?
உங்கள் கற்பனை அது!
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.
நன்றி:
தினமலர் (08.07.2011) |