அண்மையில் தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணியர் கப்பல் சேவை - SCOTIA PRINCE என்ற கப்பல் கொண்டு - துவக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு இம்மார்க்கத்தில் துவக்கப்பட்டுள்ள இச்சேவையின் புதிய அம்சமாக - பயணியர் தங்கள் கார்களை கப்பலில் ஏற்றி செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன் முதலாக இச்சேவையை இரு ஆஸ்திரேலியா நாட்டு பயணியர் பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வசதி குறித்து கருத்து தெரிவித்த இம்மார்க்கத்தில் கப்பலை இயக்கும் Flemingo Liners நிர்வாகிகள், கப்பலில் தங்களின் கார்களை ஏற்றி செல்ல விரும்பும் இந்திய பயணியர், Automobile Association of India மூலம் Carnet de Passage என்ற சான்றிதழை பெற வேண்டும். இதற்கு சுமார் ரூபாய் 5000 செலவாகும். மேலும் இலங்கையை அடைந்தவுடன் அங்குள்ள வாகனத்துறை அலுவலகத்தில் இருந்து தற்காலிக அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்.
கார்களை கொண்டு செல்லும் பயணியர் 6 - 12 மாதங்களில் நாடு திரும்ப வேண்டும் என்றும், வங்கி உத்திரவாதமும் பெற வேண்டும் என்றும் மேலும் அந்நிர்வாகி தெரிவித்தார்.
2. கப்பல் விடப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது . posted byN.A. Thymiah (Chennai)[07 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5805
சட்டமன்றத்தில் அனைத்து கட்சியின் சார்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமான "தமிழின மக்களை கொன்று குவித்த இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் & ராஜபக்ஷேயை போர் குற்றவாளியை அறிவிக்க வேண்டும்" என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்திய அரசு கப்பல் விடப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது.
3. விமான சர்வீசையும் கண்டிக்கலாம் posted byM.M.Seyed Ibrahim (Chennai)[07 July 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 5806
கப்பல் சர்வீசை கண்டிப்பது போல் விமான சர்வீசையும் கண்டிக்கலாம்.
Br, Thaymiah, your comment is completely political. Cutting off a ship is not going to alter anything. Stopping this ferry will only hurt the people who travel. It is not going to hurt the President of Sri Lanka.
4. கப்பல் போக்குவரத்து இலங்கைக்கு சாதகமானது posted byN.A. Thymiah (Chennai)[07 July 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 5808
பொருளாதார நெருக்கடியின் காரணமாக சிங்கள இன மக்கள் ராஜபக்சேஐ எதிர்க்க முன்வருவார்கள். அதன் மூலமாக அப்பாவி தமிழ் மக்கள் காப்பாற்ற படுவார்கள். கப்பல் மூலமாக மட்டும் தான் அதிகமான இந்திய பொருள்களை கொண்டு போகமுடியும், விமானம் மூலமாக அதிகமான பொருள்கள் கொண்டு போகமுடியாது & செலவுகள் அதிகமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் தமிழகத்திலிருண்டு கப்பலில் கொண்டு செல்லும் பொருள்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற வாய்ப்புள்ளது. தீவரவாதத்தை அடக்குவது என்பது வேறு, அப்பாவிகளை கொள்வது என்பது வேறு.
5. கருத்து posted byziyan fazil (delhi)[07 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5814
இந்த கப்பல் சேவையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகள் அதிகமாகின்றது இது போன்ற இன்னும் பல சேவைகளை கொண்டு வந்தால் மக்களுக்கு மிக நல்லதாக இருக்கும் இதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள்
6. Re:இலங்கை கப்பலில் கார் கொண்... posted byhylee (india)[08 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5826
அரசியல் ஆலோசகர் தைமியா இலங்கை வரலாறை நல்ல தெரிந்து கொள்ளட்டும். எல்லா விசயத்தையும் மஞ்சள் கண்ணால் பார்க்கவேண்டாம். அடுத்தமுறை இந்திய பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பலாம்.
7. இலங்கை கப்பல் posted byhasbullah (dubai)[11 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5902
சகோதரர் தைமிய்யா வேண்டுமென்றால் இலங்கைக்கு நடந்து போகலாம் கடல் வழியாக விமானத்தையும் புறக்கணித்தால் இலங்கையின் பொருளாதாரம் முழுவதும் தடைபட்டு இலங்கை president க்கு புத்தி வரும். குஜராத்தில் கலவரம் நடந்தபோது முஸ்லிம்களை கொன்ற கயவர்கள் ஆட்சி நடந்தது அதனால் இந்தியாவை புறக்கணிக்க முடியுமா பொருளாதார தடை இந்தியாவுக்கு ஏற்படுத்தலாமா?
8. Re:இலங்கை கப்பலில் கார் கொண்... posted bykavimagan (dubai)[11 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5911
தம்பி ஹஸ்புல்லாஹ்!
குஜராத் என்பது இந்தியப்பேரரசுக்கு உட்பட்ட ஒரு மாநிலம்.
அந்த மாநில அரசை, இந்தியாவின் மற்ற மாநில அரசுகள்
தட்டிக்கேட்டதும், மத்திய அரசே விசாரணைக்கமிசன் அமைத்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற நடவடிக்கை
எடுத்து வருவதும்,பெஸ்ட் பேக்கரி உட்பட்ட வழக்குகள்
சி.பி.ஐ.யால் கையாளப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே!
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை நடந்ததே வேறு. ஒரு
அரசே சொந்த நாட்டு மக்களை,கொத்து கொத்தாய் கொன்று
குவித்த சோகவரலாறு நம்கண் முன்னே அரங்கேறியது.அதை
எதிர்த்து,தமிழக சட்டமன்றம் ஒட்டுமொத்தமாய் இலங்கைக்கு
எதிராக தீர்மானம் கொண்டு வந்த தீர்மானம் மத்திய
அரசால் தூக்கி எறியப்பட்டு,கூட்டாட்சி தத்துவமே கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.இதைக்குறித்து எல்லாம்
ஏற்கனவே வேறொரு தலைப்பில் விவரமாக நேயர்கள்
எழுதிய கருத்துக்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை
படித்துப்பாருங்கள்.
நீங்கள் நமது மத்திய அரசு காஷ்மீரில் செய்யும் அராஜக
செயல்களை குறிப்பிட்டு கேட்டிருந்தால் ஓரளவுக்கேனும்
பொருத்தமாக இருந்திருக்கும். அதைவிடுத்து,குஜராத்
பிரச்சனையை,இலங்கையோடு ஒப்புவமை செய்வது,
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது
போல!
சகோதரர் தைமியாவின் கருத்து அறிவுபூர்வமானது!
அவருக்கு எனது பாராட்டுக்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross