தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டம் பயில - பொது கலந்தாய்வு சென்னையில் ஜூலை 1 துவங்கியது. ஐந்தாம் மற்றும் இறுதி நாளான இன்று நாள் முழுவதும் நடந்த கலந்தாய்வுகளில் 321 SC, ST, SC (அருந்ததியர்) மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
இன்றைய மாலை நிலவரப்படி மருத்துவ கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை காண இங்கு அழுத்தவும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். அதில் - தற்போது அனுமதி பெற்றுள்ள மாணவர்களில் எவரேனும் அவ்விடத்தை திரும்ப ஒப்படைத்தால் அவ்விடங்களும், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட (15%) இடங்களில் நிரப்பப்படாத இடங்களும், தற்போது காலியாக உள்ள 599 சுயநிதி மருத்துவ கல்லூரி இடங்களும் - இரண்டாம் கட்டத்தில் நிரப்பப்படும்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் BC (Muslim) இட ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் - BC (Muslim) இட ஒதுக்கீட்டில் - 16 இடங்கள் மீதி உள்ளன.
இன்று கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களும், அவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளின் விபரமும் காண இங்கு அழுத்தவும் |