இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இம்மாநாட்டில் களப்பணியாற்றுவதற்காக, ஆசிரியர் எம்.அப்துர்ரஸ்ஸாக் தலைமையில், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் ஒருங்கிணைப்பில் தன்னார்வப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் அடங்கிய களப்பணியாளர்களுக்கான வழிகாட்டு சிறப்புக் கூட்டம் இன்றிரவு 08.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, வழிகாட்டு உரை நிகழ்த்தினார். தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இக்கூட்டத்தில், மாநாட்டில் களப்பணியாற்றவுள்ள சுமார் 40 மாணவர்கள் கலந்துகொண்டனர். |