இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டிற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்குவதற்காக இன்று மாலை 06.00 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள மாநாட்டு அலுவலகமான செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் பிரமுகர்கள், மாநாட்டிற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கலந்துகொள்ளவிருக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, உள்ளூர் – வெளியூர்களிலிருந்து வருவோர் குறித்த விபரங்கள் உள்ளிட்டவற்றை, மாநாட்டு ஏற்பாட்டுக்குழு செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், கூட்டத்தில் கலந்துகொண்ட செய்தியாளர்களுக்கு விளக்கமாகத் தெரிவித்தார்.
கூட்டத்தின் நிறைவில், மூன்று நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் முழு நிகழ்ச்சி நிரல் அடங்கிய அழைப்பிதழ் அனைத்து செய்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டது. |