ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த முறையில் பணிபுரிந்த நபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டின் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த முறையில் பணிபுரிந்த நபர்களுக்கும், மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் மாநில விருதுகள் சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் 15.8.2011 அன்று இந்த விருதுகள் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த விருதினைப் பெற விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த முறையில் பணிபுரிந்த நபர்களுக்கும், மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் 15.8.2011 அன்று, அதாவது சுதந்திர தின விழா அன்று, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் கீழ்கண்ட 7 விருதுகள் வழங்கப்படும்.
1. மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பளித்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும்
2. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும்
3. மாற்றுத் திறனாளிகளுக்கு அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும்
4. மாற்றுத் திறனாளிகளுக்காக பணிபுரிந்த சிறந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கும்
5. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக மருத்துவ உதவிகள் செய்த ஒரு மருத்துவருக்கும்
6. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கும்
7. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும்,
மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இணைப்புகள் மற்றும் புகைப்படத்துடன் 2 நகல்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.
மாநில விருதுகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள் 15.7.2011. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம்,
15/1 மாதிரிப் பள்ளி சாலை,
ஆயிரம் விளக்கு,
சென்னை 600 006.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |