காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் 04.07.2011 அன்று காலை 10.00 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், 16 மாணவர்கள் “ஆலிம் மஹ்ழரீ” பட்டமும், ஒரு மாணவர் ஹாஃபிழ் பட்டமும் பெற்றனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்வுகள், 04.07.2011 திங்கட்கிழமையன்று காலை 09.00 மணிக்கு மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது. மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றார்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ, மாணவர்களுக்கு ஸனது - பட்டம் வழங்கி, பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
பின்னர்,
கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ,
பேராசிரியர்களான,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் பாக்கவீ,
மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ,
மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ,
மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷைக் இஸ்மாஈல் ஃபைஜீ,
மவ்லவீ ஏ.முஹம்மத் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ,
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ,
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.நாகூர் மீரான் சிராஜீ,
மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.எம்.முஹம்மத் யாஸர் அரஃபாத் மஹ்ழரீ
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அடுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கேரள மாநிலம் மலப்புரம் ஸலவாத் நகரில் அமைந்துள்ள மஃதினுஸ் ஸகாஃபத்தில் இஸ்லாமிய்யா பல்கலைக் கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான மவ்லவீ செய்யித் இப்றாஹீம் கலீல் புகாரீ மலையாள வாழ்த்துரை வழங்கினார். மஹ்ழரா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் அப்துர்ரஹ்மான் பாக்கவீ அவரது உரையை தமிழாக்கம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் உரையைத் தொடர்ந்து, அவருக்கு மஹ்ழரா அரபிக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் “ஷெய்க் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ விருது” வழங்கப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்ட அவரது பல்கலைக் கழகத்திற்கு உள்ளூர் மக்கள் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையளிக்கப்பட்டது.
இறுதியாக, மஹ்ழரா நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, சிறப்பு விருந்தினரின் துஆவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை மஹ்ழரா அரபிக்கல்லூரி செயலாளர் (பொறுப்பு) ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா ஒருங்கிணைப்பில், உதவி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அப்துல் காதிர், உதவித் தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதர் ஸாஹிப் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |