Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:12:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6672
#KOTW6672
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 8, 2011
இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இன்று துவக்க விழா! காயல்பட்டினத்தில் விழாக்கோலம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 8805 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இன்று துவங்கவுள்ள இம்மாநாட்டிற்காக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆயத்தப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.









எல்.எஃப்.ரோட்டில் துவங்கி, நகரின் பிரதான வீதி, திருச்செந்தூர் சாலையில் கே.எம்.டி.மருத்துவமனை வரை குழல் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. ஊரின் நுழைவுப் பகுதிகளில் வரவேற்பு வளைவுகளும் நிறுவப்பட்டுள்ளன. மக்கள் திரள் அதிகமிருக்கும் பகுதிகளில் மாநாட்டு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன.





இலங்கையிலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.



பேராளர் பதிவு:
துவக்கமாக, இன்று காலை 10 மணிக்கு பேராளர் பதிவும், வரவேற்பும் காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

துவக்க விழா:
மாநாட்டு துவக்க விழா இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில், வரகவி காசிம் புலவர் பந்தலில், வள்ளல் சீதக்காதி நுழைவாயிலில், சதக்கத்துல்லாஹ் அப்பா அரங்கத்தில் நடைபெறுகிறது.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ் துவக்க விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். நகர பிரமுகர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்புரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து, மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் “மஸ்னவீ ஷரீஃப்” தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். வேலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி வாழ்த்துரை வழங்குகிறார்.

கவியரங்கம்:
இன்றிரவு 07.00 மணிக்கு பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் “ஊடகம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. துவக்கமாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது வரவேற்புக் கவிதை வழங்குகிறார்.

பின்னர் நடைபெறும் கவியரங்கத்தில், தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் படைக்கின்றனர்.

இஸ்லாமிய பாடல் அரங்கம்:
துவக்க விழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பாவலர் எஸ்.எஸ்.அப்துல் காதிர் அரங்கத்தில், இன்றிரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை இஸ்லாமிய பாடல் அரங்கம் கவிஞர் ஹாஜி எஸ்.செய்யது அஹ்மது தலைமையில் நடைபெறுகிறது.

ஆழ்வை எம்.ஏ.உஸ்மான் குழுவினரும், நெல்லை அபூபக்கர் குழுவினரும் இவ்வரங்கில் இஸ்லாமிய பாடல்களை இசைக்கவுள்ளனர்.

முதல் நாள் துவக்க விழா நிகழ்ச்சிகளனைத்தையும், மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நெறிப்படுத்துகிறார்.

செய்தி திருத்தப்பட்டுள்ளது. கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by jamal (colombo) [08 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5828

எத்தனை தடவைதான் வெளியிட்ட நூலை திரும்ப திரும்ப வெளியிடுவார்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [08 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5833

சகோ. ஜமால் அவர்களே, இப்படி எல்லாம் போட்டு உடைக்கக் கூடாது ஆம்மாம்..

"இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக" என்று வருவது இல்லையா..அதுமாதிரி என்று விட்டுவிடுங்களேன்..

இந்த மாநாடைப்பற்றி நிறைய எழுத வேண்டியது உள்ளது, பார்ப்போம்.இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஞானப்பெட்டகம்
posted by kavimagan (dubai) [08 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5834

முதல் முறையாக வெளியீடு என்று அறிவிக்கப்படவில்லை. வறண்ட இந்த பூமிக்கு, மீண்டும் மீண்டும் பொழியும் மாமழையின் அவசியம் எப்படியோ, அந்த அளவிற்கு மிகவும் அவசியம் " மஸ்னவி ஷரீப் " போன்ற ஞானப்பெட்டகங்கள். வறண்டுபோன இதயங்களை குளிர்விக்கும் இந்த மகத்தான நூலை நம்முள் எத்தனை பேர் படித்து அறிந்திருக்கின்றனர்? இப்பேர்ப்பட்ட அற்புத நூலை வெளியிடுவதன் மூலம், இஸ்லாமிய இலக்கிய மாநாடு, கௌரவமும் பெருமையும் பெறுகிறது என்பதே எனது கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மஸ்னவி ஷரீப் இரண்டாவது பாகம்
posted by Ahmad (HK) [08 July 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 5835

The Persian version of Masnavi Shareef has 6 volumes in total.

I think what had been released today was the Tamil version of volume 2. Insha-allah yet another 4 volumes to come to the Tamil world.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Cnash (Makkah) [08 July 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5836

வெளியீடு என்று சொன்னாலே புதிதாக வர இருக்கும் ஒன்றை சொல்லுவது நடைமுறையில் நமக்கு தெரிந்தது......தேர்வு முடிவு வெளியீடு, தேர்தல் முடிவு வெளியீடு, புதுப்படம் வெளியீடு இப்படி தான் கேள்வி பட்டு இருகிறோம்....இது என்ன முதல் முறை வெளியீடு ரெண்டாம் முறை வெளியீடு என்று தெரியவில்லை.... ஓகே.. இது ஒன்றும் பெரிய விவாதம் பண்ணுற Topic இல்லை...இன்ஷா அல்லா நல்ல படி நடந்தேற வாழ்த்துக்கள்!!

இதை விட முக்கியமான, அல்லாஹ் உடைய வேதத்தை அழகிய முறையில் தப்ஸீர் செய்யு இருக்கும் Tafseer Ibn Katheer (10 Volumes..... Kithab Althawheed , இஸ்லாமிய கோட்பாடை அதன் சீரிய வழியில் சொல்லும் Bidhaaya Nihaaya , Authentic Stories of Prophets போன்ற பொன்னான பொக்கிஷங்கள் எல்லாம் இன்னும் தமிழில் வராமல் அரபியில் மட்டுமே, 1000 ஆண்டுகளுக்கு மேல் சில மதராசகளில் மட்டுமே உள்ளதே...இந்த அறிஞர்கள் அதற்கவும் முயற்சி எடுப்ப்பர்களா!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by சாளை நவாஸ் (singapore) [09 July 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 5841

முன்ன எழுதிய கருத்துக்கள் ஏன் வெளியிடவில்லை? ஆடம்பரத்தையும் இன்னிசையும் இஸ்லாத்துக்கு எதிரானவை என சொல்வது தப்பா? இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது சொல்வது தப்பா? மாநாடு நடத்துவது தப்பில்லை, மாநாடு என்பது மாபெரும் அறிஞர்கள் கூடும் இடம். அது எளிமையாக இருந்தால் இம்மாநாட்டுக்கு மிகவும் சிறப்பு. மேடை அலங்காரமும் வீதி முழுவதும் குழல் விளக்கும் அரசியல் மாநாட்டையே பிரதிபலிக்கும். எஞ்சிய காசையாவது ஒரு வேலை சாப்பாட்டிற்கு ஏங்கும் நம்மூர் ஏழை மக்களுக்காவது கொடுத்து உதவுவார்களா? இதற்கும் கத்திரி போட்டால் இனிமேலே இங்கே எழுத போவது இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எது தவறு?
posted by kavimagan (dubai) [09 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5843

ஆடம்பரமும்,இசையும் தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, அதே நேரத்தில் எது ஆடம்பரம்? ஆடம்பரத்திற்கான அளவுகோல் என்பது, ஒரு நிகழ்வின் அத்தியாவசியத்தையும், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்தது, அதுபோல ஒட்டுமொத்தமாக இசையே தடை செய்யப்பட்டுள்ளதா? நண்பர் விளக்க வேண்டும்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by சாளை நவாஸ் (singapore) [09 July 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 5844

கவிமகன் அவர்களே!!! வட்டியும் விபசாரமும் போதையும் ஏதும் அளவுகோல் வைத்தா தடுக்கப்பட்டது? என்னுடைய ஆதங்கம் இதற்கெல்லாம் கொட்டி கொடுக்கும் வசதி படைத்தவர்கள் கண்ணீர் சிந்தும் ஏழை மக்களின் துயர் துடைபார்களா? வெளிநாடு வாழ் காயலர்கள் காயல் நலமான்றங்கள் மூலம் செய்து வரும் ஏழைகள் துயர் துடைக்கும் பணியை உள்ளூர் வசதி படைத்தவர்கள் செய்ய ஆரம்பித்தால் காயல் நலமான்றங்களுக்கு உதவி கடிதமே வராதே!!!! எத்தனை கடிதங்கள் இன்னும் கோப்பில் இருக்கின்றன? எல்லாவற்றையும் மாநாட்டு அமைபாளர்களுக்கு அனுப்பி, இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டு சிறப்பு உதவிகள் செய்ய சொல்லுங்களேன் பாப்போம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [09 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5845

சுழற்றுங்கள் சாட்டையை சாளை நவாஸ் அவர்களே.

நமக்கு அன்பால் கை விலங்கு போடப்பட்டு உள்ளது..இன்னும் டைம் உள்ளது, கொட்டி தீர்க்க.

சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அதனதன் வேலை!
posted by kavimagan (dubai) [09 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5846

அன்பு சகோதரர் நவாஸ் அவர்களே!

பூரணமாக தடை செய்யப்பட காரியங்களை, தடையில்லா செயல்களோடு ஒப்புமைப்படுத்துவது தவறு என்று தங்களுக்கு தோன்ற வில்லையா? வறியவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்ற தங்களது கருத்திலிருந்து நான் கிஞ்சிற்றும் மாறுபடவில்லை.அதற்கான களப்பணி ஆற்றுவதற்கெனவே வெளிநாட்டு மன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை தனது பணியை திறம்படச் செய்து வருகிறது.

உதாரணத்திற்காக, USC , KSC போன்ற அமைப்புகள், விளையாட்டில் நம்மவர்கள் திறனை வளர்ப்பதற்காக உண்டாக்கப்பட்ட அமைப்புகள்.அவர்களிடம் போய், ஏன் செலவு செய்து போட்டி எல்லாம் நடத்துகின்றீர்கள்? அதற்கு செய்யும் செலவை ஏழைக்குமர்களுக்காக செய்யலாமே என்று சொன்னால் அது நியாயமான வாதமாகுமா?

ஒவ்வொரு அமைப்புக்கும் வேறுபட்ட சமூக நோக்கங்கள் இருக்கிறது.அவைகள் தத்தம் பணியினை திறம்பட செய்கிறதா? அப்படி செய்வது மார்க்கத்திற்கு எதிரானதா? என்பதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அறிஞர்கள் கூடும் இடத்தில் எளிமை வேண்டும் என்பது உண்மைதான்.அதே நேரத்தில் அது மக்களை சென்றடைய செலவு செய்வது அத்தியாவசியமானது. அழைப்பதற்கு விளம்பரமும்,வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து நம் தாயகத்திற்கு வருபவர்களை வரவேற்கும் வளைவுகளும்,வெயில் தெரியாத பந்தலும், இருப்பதற்கு இருக்கைகளும்,நிகழ்வுகளின் செய்திகள் உலகம் முழுவதும் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களை சென்று அடைவதற்கான ஊடக கேந்திரங்கள் இதற்கான செலவு எல்லாம், மது வட்டி போண்டவற்றோடு ஒப்புமைப்படுத்த எப்படி மனம் வந்தது உங்களுக்கு?

தினமணி படிப்பது என்பது வேறு! பாடப்புத்தகம் என்பது வேறு! எல்லாவற்றையும் போட்டுக்குழப்பினால் குழப்பம்தான் மிஞ்சும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [09 July 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5847

"தமிழ் இலக்கிய மாநாடு" என்று தலைப்பு வைத்திருக்கலாம். மாநாட்டு அரங்கில் ஆண்களும் பெண்களும் கலந்து அமர்ந்துள்ளனர்.....

"இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு" என்றால், பெண்களுக்கு தனி இட வசதி இல்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நம் தமிழீழ தமிழ் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க உதவி செய்யுங்கள்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [09 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5849

இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அவர்களே நீங்கள் இங்கே காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறீர்கள் ரெம்ப சந்தோசம் - இலங்கையில் தமிழீழ மக்கள் சிங்கள ஓநாய் கூட்டத்தாரால் நாசமாக்க பட்டு இருக்கிறார்கள் நம் தமிழீழ தமிழ் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க உதவி செய்யுங்கள்..

வாழ்க தமிழீழம் - வளர்க தமிழ் மொழி
நட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சீரிய சிந்தனைக்கு...........
posted by zubair (riyadh) [09 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5857

அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு நடத்தும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

அன்பு சாளை நவாஸ் அவர்களே.... நம் ஊர் தனவந்தர்களை, உதவுபவர்களை தாங்கள் கோபத்தின் உச்ச கட்டத்தில் விமர்சிப்பது சரி இல்லை. தாங்கள் நினைப்பது போல் யாரும் உதவாமல் இல்லை. உதவியும் இருக்கிறார்கள், உதவிக்கொண்டும் இருக்கிறார்கள், உதவவும் இருக்கிறார்கள். உதவும் விசயத்தில் நம் மார்க்கம் பறை அடித்து சொல்வதை தடுத்து இருப்பதை நீங்கள் அறிய வில்லையா?

மாநாட்டிற்கு செலவு விசயத்தில்.............. சில செலவுகளை பண்ணிதான் பல ஹலாலான என்னம்களை நிறைவேற்ற முடியும் கட்டத்தில் பண்ணுவது...... இஸ்ராஃபோ, தகாத்ததோ இல்லை. சுண்டைக்காய் காப்பணம்.....சுமக்க கூலி முக்காப்பணம் என்பார்கள். சுண்டைக்காய் தாங்களுக்கு வேண்டும் என்றால்...... சுமக்க கூலி முக்காபணத்தையும் கொடுத்துதான் ஆக வேண்டும். நீங்கள் சிந்திப்பது நல்லதுதான். ஆனால் குறுகிய வட்டத்தில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by ilayakayal (mohmedyounus@yahoo.co.uk) (chennai) [12 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5927

பல லட்சம் செலவழித்து நடை பெற்ற இந்த மாநாட்டினால் நமதூருக்கும், சமுதாயத்திற்கும் விளைந்த பயன்கள் என்ன? வட்டி,வரதட்சணை கொடுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நமதூரில் பல நூறு உண்டு.

திறமை இருந்தும் தொழில் தொடங்க இயலாத நிலையில் பல வாலிபர்கள்.

கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க முடியாத நிலையில் பல நூறு பேர்.

தகுதி இருந்தும், கல்லூரிகளில் இடம் கிடைத்தும், வறுமையினால் கல்வியை தொடர முடியாத நிலையில் பல மாணவர்கள்.

பல மஸ்ஜித் விரிவாக்க பணிகளில் தேக்க நிலை.

இவை எல்லாவற்றையும் நிவர்த்தி சித்து விட்டுத்தான் நாம் மாநாடு நடத்தினோமா?

மேற்கூறிய எந்த காரியத்தையும் அதீத சிரத்தையோடு செய்யாத தனவந்தர்கள், செயல் வீரர்கள்(?), இந்த மாநாட்டிற்காக, ஆறு மாதத்திற்கு முன்பாக காரியத்தில் இறங்கிய கரணம் என்னவோ?

பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் அமைப்பான இக்ராவின் இந்த வருட பட்ஜெட் மைனஸ் நாற்பத்து மூன்றாயிரம்.

ஆனாலும், மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட, ஊரில் கட்டப்பட்ட tube லைட்டுகளின் எண்ணிக்கை ஜாஸ்தி.

தமிழ் தெரியாத காந்தி தாத்தாவின் ஆர்ச்சுக்கு அலங்கார லைட்டு செட்டுகள்.

நம் மாவட்டத்தின் மந்திரி வர முடியாத நிலை.
இதனால், மாவட்ட ஆட்சி தலைவரும் வர முடியாத நிலை.
இதனால் நமது ஊரின் தேவைகளை கூட எடுத்து சொல்லமுடியாத அவல நிலை.

மொத்தத்தில் இந்த மாநாடு விளம்பர பிரியர்களுக்காக நடாத்தபெற்ற ஒரு மூன்று நாள் கூத்து.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. முகவரி இழந்தவர்கள்!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [12 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5929

மொழியை இழந்தவன் தன் சொந்த முகவரியை இழந்தவன் என்பது நமக்கு வரலாறு கற்றுத்தரும் பாடம். அதனால்தான் நமது முன்னோர்கள் " இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி " என்ற பொன்மொழியை முன்னிறுத்தி, கல்வி,வணிகம், மருத்துவம், சமூகனலத் திட்டங்கள், மார்க்க ஞானக்கல்வி இவற்றோடு இணைந்து மொழி மற்றும் அதுசார்ந்த கலாச்சார வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டினர்.

நுனிப்புல் மேய்பவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு என்பது அகிலம் முழுதும் வாழ்கின்ற தமிழ் பேசும் முஸ்லிம்களது ஒன்றிணைந்த மாநாடு. இது ஒன்றும் தனிப்பட்ட காயல்பட்டணத்தின் வளர்ச்சிக்கான மாநாடு கிடையாது. அதே நேரத்தில் இந்த மாநாடு வெற்றிபெற முழுமையாக உழைத்து ஒத்துழைத்தவர்கள் யார் யார் தெரியுமா?

நகர வாலிபர்கள்...
தொழில் துவங்க உதவி செய்து விளம்பரம் தேடாதவர்கள்...

மருத்துவம் பார்க்க முடியாத பலருக்கு அறுவை சிகிச்சை வரையிலான செலவிற்காக, அல்லாஹ் ரசூலுக்கு அஞ்சி இன்றளவும் உதவி புரிந்து வரும் அதே நேரத்தில் தம்பட்டம் அடிக்காதவர்கள்.

கிட்டத்தட்ட இருநூறு காயல் மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்ட முன்மாதிரி மனிதர்கள். இக்ராவை உருவாக்கி, அதன் செயல்பாடுகளில் இன்றளவும் இரத்தமாக, இதயமாக விளங்குபவர்கள்.

இறை இல்லக் கொடையாளிகள்.

தமிழ் தெரியாத காந்திதாத்தாவை நேசிக்கும் தேசாபிமானிகள்.

நகரமக்களின் தாகம் தீர்க்கும் குடிநீர்த் திட்டத்திற்காக இமைக்கும் பொழுதுக்குள் இலட்சம் ஐம்பதை வாரி வழங்கியவர்கள்.

இந்து அறநிலையத் துறை மந்திரி வரவில்லையே என்று கவலைப்படாத இஸ்லாமிய இலக்கியவாதிகள்.

1978 ஆம் ஆண்டு காயலில் மாபெரும் மாநாட்டை நடத்தி, இஸ்லாமிய இலக்கிய நூற்கள் பலவற்றை, பல்கலைக் கழக பாடங்களில் இடம்பெறச் செய்தவர்கள்.

நமது ஊரின் புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து போர்டு அலுவலகம், பொது நூலகம், மற்றும் மக்கள் நலம்பேணும் பல்வேறு திட்டங்களுக்காக சொந்த நிலத்தை தானம் வழங்கியவர்கள்.

தமிழ் இலக்கியத்தால் பல்லாயிரக் கணக்கானோரை இஸ்லாத்தின்பால் ஈர்த்திட்ட நமது மண்ணுக்கே மணம் சேர்த்த ஞானமாமணிகள்
செயகுனாப்புலவர்,
வரகவி காசிம்புலவர்,
நூஹு வலியுல்லாஹ்,
உமர் வலி நாயகம்,
மாமேதை ஷாம் சிஹாப்தீன் வலியுல்லாஹ்
இன்னும் இஸ்லாத்திற்காக இன்னுயிர்நீத்த கண்மணிகளை நேசிக்கத் தெரிந்தவர்கள்.

தமிழ் இலக்கியத்தின் மூலம் மத நல்லிணக்கம் வளர்ப்பவர்கள்.

இந்த மாநாடு, காயல்பட்டனத்து மக்களை, தாய்மொழியை நேசிக்கின்ற மக்களாக உலகத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. பல்வேறு துறையில் சேவையாற்றிய பெருமக்களுக்கு, விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

பல்வேறு சமூக அமைப்புகள் பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி சேவையாற்றி வருகிறது. அதில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விளையாட்டு, சமூக நலத்திட்டங்கள் என்பனபோன்று.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், தமிழ் இலக்கிய வளர்ச்சி, ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் சமுதாயம் காண்பது. அது இறைவனருளால் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.

இந்த மாநாடு நடக்கவில்லையெனில், காயலின் அனைத்து பிரச்சனையும் ஏகநேரத்தில் தீர்ந்துவிடும் என நம்புகின்றவர்கள் மாத்திரமே, எதிர் கருத்தை விதைப்பவர்கள். இந்த மாநாடு வெற்றிபெற உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும், எல்லாம் வல்ல இறைவன் தன் மேலான அருளைப் பொழிந்திட,உலகெங்கிலும் இருந்து துஆ செய்யும் இலட்சக் கணக்கானோருடன் என்னிரு கரத்தினையும் இணைக்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. மன்னிப்பு கேட்பதே.... மனித குணம்.
posted by zubair (riyadh) [12 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5932

அஸ்ஸலாமு அலைக்கும். இளைய காயல் என்ற பெயரில் கமாண்டு எழுதி இருந்த நண்பர் அவர்களே...... தாங்கள் இளைய காயல் வாசியாய் இருப்பதால் (அந்த தன்மையில் சிந்திப்பதால்) தான் முதிய நம் காயல்வாசிகளைப்பற்றி பற்றி தெரியாமல் எழுதி விட்டீர்கள். கவிமகனின் கருவூலத்தை முழுமையாக புரிந்து, உணர்ந்து கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Cnash (Makkah ) [12 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5944

உங்கள் கருத்து படி மொழி, இலக்கியம் வளர்க்க எத்தனை கோடி செலவழிக்க நியாயபடுத்தும் நீங்க செம்மொழி மாநாடு கருணாநிதி நடத்தியதை மட்டும் ஏன் விமர்சனம். அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்....

இந்த இன்ப(!) தமிழை உலகத்தில் உள்ள தமிழ் பேசும் அறிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி வாழ்த்துவதால் இஸ்லாம் வளருதா!! அங்க வந்த மாற்றுமத தமிழ் அறிஞர்கள் எல்லாம் மேடையில் பேசவும் கைதட்டல் வாங்கவும்...இஸ்லாம் தான் உயர்ந்தமார்க்கம் வேற்றுமை பாராத மார்க்கம், வாழ்க்கைக்கு ஏற்ற மார்க்கம் என்று வாய் கிழிய பேசுவார்கள்...அவர்கள் பேச்சை அவர்களே நடைமுறை படுத்துவாரா? செயல் படுத்துவார்களா!! அப்படி என்றால் எத்தனையோ பேர் மார்க்கத்தை நோக்கி வந்து இருக்கனுமே வந்தார்களா!! இல்லை வருகிறவரை வரத்தான் விடுவார்களா!! இந்த மாநாட்டால் இஸ்லாத்திற்கு என்ன நன்மை!! வந்தவர்களில் ஒருவருக்காவது இஸ்லாம் பற்றிய உண்மையான செய்தி யும் குர்ஆனில் இருந்தும் நபிமொழியாலும் சொல்லபட்டதா!!

இந்த புரியாத இலக்கணமும் இலக்கியமும் தான் பல்லாயிரக்கனக்கான பாமர மக்களை இஸ்லாத்தின் பக்கம் இழுத்தா!! இந்த சத்திய மார்க்கத்தை பரப்புவதற்காக கடல் கடந்து வந்த, அந்த தூயவர்களில் நேர்மையும், நற்குணங்களும், தூய மார்க்கத்தை அவர்களில் நெறி முறையாய் கடை பிடித்ததும் தானே நெறி தவறிய நம் முன்னோர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு போனது, இந்த அரபு தமிழ் இலக்கியங்களும், செய்யுள்களும், இலக்கான நூல்களும் யாரை சென்று அடைந்தது!!

இன்னும் சொல்லபோனால் நாம் புத்தகத்தில் படித்த உமறுபுலவர் நாயகம்!! எழுதிய சீறாப்புராணம் போன்ற இலக்கியங்கள் தானே இந்த மேடையில் புகழப்பட்டது!! அது போன்ற பதிப்பை கண்ட வர்கள் தானே இஸ்லாமும் பிற மதமும் ஒன்று என்ற நிலைக்கு தள்ள பட்டார்கள்!

அறிவை போதிக்க இந்த உலகத்துக்கு வந்த எம்பெருமானார் ...ஓநாய் உடன் பேசினார், மானுடன் பேசினார், (ஓநாய் பேசிய படலம் , மானுக்கு பிணை நிண்ட படலம், உடும்பு பேசிய படலம்) இது போல் மூட நம்பிக்கைக்கும் முட்டாள் தனத்துக்கும் பேர் போன இதிகாசங்களும் புராணங்களும் இஸ்லாமும் ஒன்று தன என்ற நிலைக்கு தானே இது போன்ற இலக்கியங்கள் உதவியது. இதை தானே தூக்கி பிடித்து இந்த மாநாட்டில் பேசுவார்கள். இதை கேட்பவர்கள் எம்மதமும் சம்மதம், இஸ்லாதில் உள்ளதை விட மேல இந்து இதிகாசத்தில் உள்ளது என்று தானே முடிவுக்கு வருவார். ஹிஜ்றது காண்டம், பாத்திமா திருமண படலம் என்று, சொர்கத்திற்கு முதலில் செல்லும் மூமீன்களில் தாய் பாத்திமா அவர்களில் அழகை வர்ணித்தும், மதீனத்து சஹாபிய பெண்கள் பிற ஆண்களை ஏறிட்டு பார்காத பெண்களை பார்த்து அலியின் அழகை ரசிததகவும், மடமையின் சிகரமாய் எழுதி வைத்ததை பார்த்த பின் யார் இஸ்லாத்திற்கு வருவார்கள்

உலகிற்கு முன்மாதிரியாக வந்த ஆடம்பரத்தை அறவே ஒழித்த பெருமானார் மகள் கல்யாணத்தில் மாவிலை தோரணம் மதினமா. நகர் எங்கும் கட்டப்பட்டு, இசை கருவிகள் முழங்க, உலகில் உள்ள அத்தனை அரசர்கள் முன்னிலையில் அலி பாத்திமா கழுத்தில் கருகு மணி தாலி கட்டினார் என்று எழுது வைத்து இஸ்லாத்தில் இல்லாத தாலியை தமிழ் மக்களுக்கு பார்லாக்கி விட்டாரே .. இதுவா நீங்க சொல்லும் இலக்கியம்... இதுக்காகவா மாநாடு, இன்னும் எழுத எவ்வளவு இருக்கு இது போன்ற பல இஸ்லாமிய இலக்கியங்களை பற்றி .. எழுதினால் கண்டிப்பா moderator அனுமதிக்க மாட்டார்!!

உலக அரசியலையும் நடப்பையும் அறிவு கொண்டு ஆராயும் நாம், இஸ்லாம் என்ற பேரில் எது வந்தாலும் ஏன் கண்மூடி கொள்கிறோம்.

மொழியை இழந்தவன் முகவரி இழக்கிறான்... ஆனான் பொய்யன் ஈமானை இழக்கிறான்...இது போன்ற இஸ்லாத்தில் பேரில பொய்யை பரப்பும் இலக்கியங்களை யாவது மேடை ஏறி வாழ்த்தாமல் ஒதுங்கி கொள்வதே மேல்.. அது தான் ஈமானின் கடைசி நிலை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வரலாற்றை மறுப்பவர் ?
posted by kavimagan (dubai) [13 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5955

சகோதரர் CNASH அவர்களது கருத்து ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது. முதலில்,பலநூறு கோடி மக்கள் பணத்தில், தகுதியுள்ள பல தமிழர்களை அழைக்காமல்,தமிழ் செம்மொழி ஆகுதற்காக பாடுபட்ட அறிஞர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டு, தனது ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையில்,தன்னை புகழ்வதற்கென்றே கவியரங்கமும் ,பாட்டரங்கமும் நடத்தப்பட்ட,கனிமொழி விழாவைத்தான், எல்லோரும் எதிர்த்தார்களேயன்றி, செம்மொழிக்கு ஏற்படும் அருமை, பெருமைகளை யாரும் எதிர்க்கவில்லை.ஆக,பொருந்தாத உவமையுடன் துவங்கிய நண்பரின் வாதம்,தொடர்ந்து தவறான திசையிலேயே பயணித்து, இஸ்லாம் வளர இலக்கியம்,மொழி ஆகியன ஒரு காரணியாக இருக்கவில்லை என்ற தவறான தகவலுடன் தடம் புரண்டு நிற்கிறது.

அடுத்து மாற்றுமத அறிஞர்களை நோக்கி திரும்புகின்ற அவரது பேனா,தாழ்த்தப்பட்டவர்களையும்,ஒடுக்கப்பட்டவர்களையும் இஸ்லாத்தின்பால் சுண்டி இழுத்த சர்.பி.டி.தியாகராயர், சவுந்திரபாண்டியனார்,தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்,வார்த்தை சித்தர் வலம்புரி ஜான், பேராசிரியர் பெரியார் தாசன் ( தற்போது அப்துல்லாஹ் ), இன்னும் ஏராளமான பெருமக்கள், இனவிடுதலைக்கு இஸ்லாம் ஒன்றே வழி என்று எழுதியதையும், முழங்கியதையும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான தலித் இளைஞர்கள் சத்தியத்தை உணர்ந்து விடுதலை பெற்ற வரலாற்றை அறிந்திருக்கவில்லை.

அடுத்து இந்தமாநாட்டில், ஆயிரக்கணக்கான இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் மேற்கோள் காட்டப்பட்டதை,அறிந்தே குற்றம் சாட்டுகின்றாரா? அல்லது,அறியாமல் ஆத்திரப்படுகின்றாரா என்பதை சகோதரர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தொடர்ந்து சீறாப்புராணத்தையும் அதன் ஆசிரியரையும்,எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் விமர்சிக்கத்துவங்குகிற நண்பர்,தனக்கு வசதியாக முன்னுரையை மறந்து விடுகின்றார். சற்று விளக்கமாக காண்பது இங்கே அவசியம் ஆகிறது.

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என்ற ஐவகை நிலங்களாக இந்தப் பூமிப்பந்து பிரிக்கப்பட்டதற்கான காரணமே, நிலத்தின் அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை முறையும்,கலாச்சார பழக்கவழக்கங்களும்தான்.

ரசூல் நபி ( ஸல் ) அவர்கள் பிறந்து,வாழ்ந்து இப்போதும் மரணத்திற்குப்பின் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பது பாலைநிலவெளியில்.ஆக, பாலை நிலத்தில் நிகழ்ந்த ஒருவரது வாழ்க்கையை,முல்லை மற்றும் மருதம் நிலத்தில் வாழும்,பலகடவுளை வணங்கும் மக்களுக்கு அறிமுகப்படுத்த, ரசூலையும் இஸ்லாத்தையும் அவர்கள் எளிமையாக விளங்கிக்கொள்ளும் வகையில், பாலை நில முறையில் இருந்து,முல்லை மற்றும் மருத நிலத்திற்கேற்றார்போல்,புதிய கலாச்சாரவடிவில், ஏக இறையை முற்றிலும் மறுத்தவர்கள் நெஞ்சத்தில் , இனிப்பு சேர்த்த மருந்து போல,ஏகத்துவத்தை உணர்த்துவதற்காக அவர் செய்த உபாயம் என்று அவரே ஒத்துக்கொள்கிற ஒரு விஷயம், இஸ்லாத்திற்கு எதிரானது என்று முடிவு செய்ய நாம் யார்?

தூய்மை,நேர்மை,இறைபக்தியால் வாழ்ந்த முன்னோர்களின் தியாகத்தால் மார்க்கம் பரவியது. அதை அதிக அளவில் மக்களிடம் எடுத்துச்சென்றது எது ? அன்றைய கவிதைகள்,பாடல்கள்,இலக்கியப்பதிவுகள் இல்லாமல் வேறேது ? பன்முகத்தன்மையுடன் வாழும் ஒருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு, தேசப்பற்று பாதுகாக்கப்பட, மொழி மற்றும் அதன் தொன்மையான கலாச்சார அடையாளங்கள் மற்றும் இலக்கிய பரிமாற்றங்கள் அவசியம் இல்லையா? ஒன்றுபட்ட சமூகம் உருவாக இஸ்லாம் வலியுறுத்த வில்லையா ? சாம் வலி நாயகத்தின் இலக்கியத்தின் தாக்கம் கேரளத்தின் எல்லைவரை இஸ்லாத்தை எடுத்து சென்றது வரலாறு இல்லையா?

மொழியை இழந்தவன் முகவரி இழக்கிறான்!

பொய்யை பரப்புபவன் ஈமானை இழக்கிறான்

உண்மை வரலாற்றை மறுப்பவன் ?????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Cnash (Makkah ) [13 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5962

கவிமகன் காக்கா உங்கள் விளக்கத்திற்கு நன்றி!! நான் இந்த மாநாடையோ, வேறு மொழியின் பெருமையை பேசும் மாநாட்டையோ குறை கூறவில்லை.. அதற்கான அவசியமும் இல்லை... அது பொதுமக்கள் பணமும், பொருளும் வீணாகாத வரை!!! மொழியால் ஒருவனுக்கு பெருமையோ சிறுமையோ இல்லை... பல மொழிகளை படைத்தது உங்களை அறிந்து கொள்வதற்குதான் என்று படைத்தவன் சொல்கிறான்.

நீங்க சொல்லுற பெரியார் முதல் இன்றைய வீரமணி வரை இஸ்லாம்தான் இன விடுதலைக்கு ஏற்ற மார்க்கம் என்று சொல்லி வாய் சொல்லில்தானே முழங்கினார்கள்!! ஏன் அந்த தூய வழியை அவர் நெறிமுறை ஆக்கவில்லை... இப்பொழுது ஆக்கிய அப்துல்லாஹ் (பெரியார் தாசனுக்கு) திக என்ற இயக்கத்தில் வந்த எதிர்ப்பை உங்களுக்கு சொல்லி தெரிய வைக்க வேணாம். இதெல்லாம் வெறும் மேடை பேச்சிற்க்கும் வோட்டு வங்கியாகவும்தான் பயன்படுத்தினார்கள்.

அப்புறம் இந்த பாமரர் படித்திட முடியாத இலகிய்யங்கள்தான் பலதெய்வ நம்பிக்கையில் இருந்த நம் முன்னோர்களை இஸ்லாத்தில் பால் கொண்டுவந்தது என்பதை ஆதாரபூர்வமாக சொல்ல முடியுமா!! இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறி மூலமும், குர்ஆண் ஹதீஸ் படி வாழ்ந்து காட்டி, அந்த வாழ்க்கை நெறியை போதித்துதான் லட்சகணக்கில் பாமர மக்களை, ஏட்டு அறிவு இல்லாத எழுத படிக்க தெரியாதா சமூகத்தை இஸ்லாத்தில் கொண்டுவந்தது எல்லாம் வரலாறு இல்லையா!!!

இது போன்ற கட்டுகதைகளையும் இதிகாச புராணங்களில் உள்ளவற்றை எல்லாம் இஸ்லாத்தில் நடந்தாக மாற்றி கூறும் சீறாப்புராணம் போன்ற இஸ்லாமிய இலக்கியங்கள் அந்த பாமர மக்களை, (அது முல்லை நிலமோ, நெய்தல் நிலமோ) அப்பொழுது சென்று இருந்தால் இருந்த மார்கமே பரவாஇல்லை என்று இருந்து இருப்பார். உண்மை இஸ்லாத்தை சொல்லுவதை விட்டு விட்டு இல்லாத நடக்காத கற்பனைகளை சொல்லி நபிகள் சொன்னதாகவும் அவர் வாழ்வில் நடந்தவும் கூறுபவன் நிலை என்ன?

(எவன் ஒருவன் நான் சொல்லாததை சொல்லி ஏன் பேரில் இட்டு கட்டுகிறானோ அவன் தான் தங்கும் இடத்தை நரகமாக்கி கொள்ளட்டும், என்றும் இன்னொரு இடத்தில அத்தகையோருக்கு நரகில் முன்பதிவு செய்யபடும் என்றும் ஹதீஸ் சொல்லுவது.. இது போன்றவற்றை சொல்லுபவருக்கு தானே)

ஏன் இஸ்லாத்தில் உண்மை நிலையில் எடுத்து சொல்லி இருந்தால், அதன் படி நடந்து இருந்தால் எஞ்சிய மக்களும் சத்திய மார்க்கத்தை தேடி வந்து இருப்பார்களே,... எதற்கு இஸ்லாத்தில் பேரில் கற்பனைகள் கதைகள்...

இதுபோன்ற கவிதை இஸ்லாத்திற்கு எதிராக, அறிவுக்கு எதிராக எழுதி இருபவரை மேடை போட்டு புகழ்வதும், நல்லடியார் நிலைக்கு கொண்டு போவதும் ஏன்? ஓநாய் உடன் நபி(ஸல்) பேசியதையும், மானுக்கு பிணை நின்றதையும், உடும்புடன் நபி பேசியதையும் நீங்க இஸ்லாத்தில் இந்த பகுத்தறிவு மார்க்கத்தில் உள்ளது தான் என்று ஆதாரபூர்வமாக குர்ஆண்/ ஹதீஸ் மூலமோ ஏன் 4 மத்ஹாப் சட்ட நூலில் மூலமோ நிருபித்து காட்ட முடிமா?

எந்த அன்னையை நாம் முமீன்களின் தாய் இன்று வரை போற்றுகிறோமோ... அந்த மாநபியின் மகள் பாத்திமாவை ஒரு புராண இதிகாசத்திற்கு இணையான பெண்ணை வர்ணிப்பது போல் அவர் அழகை வருணனை செய்கிறாரே.. இதுவா இஸ்லாமிய இலக்கியம்

கதுவகிற் கரிய கூந்தற் காரிகை பாத்தி மாதம்
குனிசிலைப் புருவ வாட்கட் கொடியிடைக் கரிய கூந்தற்
கனியிதழ்ச் சிறுவெண் மூரற் காரிகை நலத்தை நாடி
நினைவுநித் திரையும் போக்கி நீடொடு குழியி னார்ந்த
நனிமதக் களிறு போன்று வேட்கையி னடுங்கி னாரால்

வளைக்கா நிற்கும் கோதண்டத்தை நிகர்த்த புருவத்தையும் வாளை நிகர்த்த கண்களையும் கொடியை நிகர்த்த இடையையும் கரு நிறத்தை யுடைய கூந்தலையும் கோவைக் கனியை நிகர்த்த அதரங்களையும் சிறிய வெண்ணிறத்தைக் கொண்ட பற்களையுமுடைய பெண்ணாகிய அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களின் இன்பத்தை விரும்பித்.........
(நவூதுபில்லாஹ்).

இதை கேட்டும் கண்டுமா அந்த முல்லைநில மக்கள் இஸ்லாத்திற்கு வந்தார்கள்... அல்லாஹ்விற்கு அஞ்சி பதில் சொல்லுங்கள்!!

ஆடம்பரத்தை அறவே வெறுத்த அண்ணலார் மகள் கல்யாணத்தை ஒரு ஜெயலலிதா வளர்ப்பு மகன் கல்யாண ரேஞ்சுக்கு கற்பனை செய்து மதினமா நகர் எங்கும், மாவிலை தோரணம் கட்டபட்டு பந்தல் போடப்பட்டு, முக்கனிகள் வழங்கப்பட்டு... எந்த அளவு இஸ்லாத்தை கொச்சைபடுத்தி இருக்கிறார்.. அன்றைய மதீனாவில் ஏது மாவிலை, ஏது மா, பலா, வாழை... இரண்டு நாட்கள் தொடர்து நபி அவர்கள் வீட்டில் அடுப்பு எரிந்தது கிடையாது இதுதான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அப்டி இருக்க ஏன் இப்படி!

மேலும் சஹாபிய பெண்கள் அலி (ரலி) அவர்கள் அழகை கண்டு ஏங்கிய கீழ்த்தரமான வர்ணனை.

..........................சில பெண்கள் சொல்லுதற் கருமையான செவ்வானத்தைப் போலும் விரிந்த வத்திரங்களை அரையின் கண் கட்டித் தெள்ளிய செந்நிறத்தையுடைய சந்தனத்தையும் பூசிச் சிவந்த இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களைத் தாங்கிய வள்ளலாகிய அவ் அலி யிபுனு அபீத் தாலிபு அவர்களின் அழகை விழிகளால் அருந்தப்பட்ட பெண்களாகக் குதிப்பைப் பொருந்திய காமமாகிய நெருப்பானது மேலே பிரகாசிப்பதைப் போன்று நின்றார்கள்.........

அன்றியும், பொன்னினாற் செய்யப் பட்ட வளையல்களைத் தரித்த கார்த்திகைப் புஷ்பத்தைப் போன்ற சிவந்த கைகளை யுடைய மாதர்கள் தங்களின் சிறிய மருங்குலானது அசையவும், பிரகாசத்தைப் பெற்ற சிறிய நெற்றியானது வியர்க்கவும், சிறந்த முதிர்ச்சியை யுடைய ஆபரணங்களைக் கொண்ட முலைகள் விம்மவும், வண்டுகள் மதுவை யருந்தி ஒலிக்கவும், விஜயத்தைப் பொருந்திய வாளாயுதத்தை யுடைய அவ் வலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் இராஜேசுவரரினது பவனியிற் சென்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ளது இஸ்லாம் என்ற பேரில் நுழைந்த இதுபோன்ற இந்த இலக்கியங்கள் இஸ்லாத்தை வளர்க்க உதவவில்லை..படித்த மக்களை, சிந்தித்து இஸ்லாத்தை ஏற்க நினைபவர்களை அங்கயே நிறுத்தி வைக்க தான் உதவும்..

தயவு செய்து சீரிய பார்வையோடு சிந்திக்கவும்... இது போன்ற இலக்கண இலக்கியங்களை போற்ற பொருள் செலவிடுவதை விட.. நல்ல பல நூல்கள், பல அறிஞ்சர்கள் எழுதி இருக்கும் உண்மையான வரலாறுகள், சட்டங்கள், தப்சீர்கள் இன்னும் தமிழை வந்து அடையாமல் அரபியாகவே உள்ளது அதற்காக முயற்சி செய்தால் இன்னும் பல ஆயிரம் முஸ்லிம் அல்லாதவர்க்கு/ இஸ்லாத்தை சீரிய வழியில் அறியாதவருக்கும் இனிதாய் அமையும்.

நான் சுட்டிகட்டிய பொய்களும், கட்டு கதைகளும் தவறு என்று ஆதாரத்துடன் நிரூபித்தால் நானும் ஏன் நிலையை மாற்றி கொண்டு இதை ஏற்று கொள்கிறேன். உண்மையா இருக்கும் என்றால் அட்லீஸ்ட் அதை நியாய படுத்தாமல் இருப்பது சிறந்தது!

இது போன்ற கவிஞர்களைத்தான் அல்லாஹ் கூறுகிறான்

" And the Poets,- It is those straying in Evil, who follow them:Seest thou not that they wander distracted in every valley?- And that they say what they practise not?- (26:224-26)

May Allah Guide us Right Path., He knows the best.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by mohmed younus (chennai) [13 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5969

நான் நான்கு பள்ளிவாசல் கட்டினேன். ஆனால், மகள் கல்யானத்திற்கு நாற்பது கோடி ரூபாய் செலவளித்தேன் என்பது ஏற்புடைய விவாதமா?

பள்ளிகட்டியதற்கு நன்மை தரும் வல்ல இறைவன், நானூறு கோடி ரூபாய் எதற்கு செலவழித்தான் என்றும் கேள்வியும் கேட்பான். மொழியை வளர்கிறேன் என்ற பெயரில் மூநூறு கோடி ரூபாய் செலவழித்து செம்மொழி மாநாடு நடத்திய முத்தமிழ் அறிஞ்சரை வசை படாத பத்திரிகை இல்லை.

கண்டிக்காத நியாவன்கள் இல்லை.
இதை கவிமகன்கள் உணர்ந்த்தால் சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by kavimagan (dubai) [13 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5970

அன்புநண்பர் CNASH அவர்களுக்கு!

அறிவுபூர்வமாக அதேநேரத்தில் நிதானமாக, தெளிவாக விவாதிக்கும் தங்களது ஆற்றலுக்கு எனது பாராட்டுக்கள்! உங்களுடன் தொடர்ந்து விவாதிப்பதால், எனக்கும் நேயர்களுக்கும் நல்லபல செய்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றேன்.

மனிதனை, மனிதன் அறிந்துகொள்வதற்காக பல மொழிகளை இறைவன் படைத்தான் என்பதுதான் என்னுடைய கருத்தும். நீங்கள் கருதுவது போல யாருக்கும் புரியாமல் எழுதுவதுதான் இலக்கியம் என்பது தவறு.

மொழியின் பதிவு செய்யப்படுகின்ற பல்வேறு வடிவங்கள்தான் இலக்கியம். அது பேச்சாகவோ, எழுத்தாகவோ, கவிதையாகவோ, தாலாட்டாகவோ, இன்னும் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

பெரியார் முதல் வீரமணி வரை வெறும் வாய்ச்சொல்லில்தான் முழங்குகிறார்கள் என்னும் நீங்கள், அவர்களின் உள்மனதை எப்படி அறிந்து கொண்டீர்கள்? இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்கு, அவர்கள் ஒன்றும் தேர்தல் அரசியல் நடத்த வில்லையே! தேர்தலில் பங்குபெறாத சமூக இயக்கம் திராவிடர் கழகம்.

சீறாப்புராணம் பற்றிய தங்களது அனைத்து விமர்சனங்களுக்கும் ஏற்கனவே எழுதிய எனது கருத்தில் பதில் இருக்கிறது. அதில் நிலவெளி மாற்றமும், கலாச்சார மருவலும் இருப்பதை அதன் ஆசிரியரே ஒத்துக்கொண்டு அதற்கான காரணமும் விளக்கப்பட்டபின்னரும் மா, பலா, வாழை மதீனாவில் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் அது அர்த்தமுள்ள கேள்வியாகுமா?

இலக்கிய மாநாடு குறித்து துவங்கிய வாதத்தை மிக சாமர்த்தியமாக சீறாப்புராணத்தை நோக்கி திருப்பி இருக்கின்றீர்கள். உங்கள் விவாதப்படியே, பலவீனமான சில விஷயங்களால் பலமானது எல்லாம் அடிபட்டு போகுமா?

சீறாப்புராணம் தவறு என்றே இருக்கட்டும். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியமும் இஸ்லாத்திற்கு எதிராக திரும்பி விடுமா?

நீங்கள் குறிப்பிடுவது போன்று நல்லபல நூல்கள், உண்மையான வரலாறுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதுதானே இந்த மாநாட்டின் முக்கிய தீர்மானம்.

நிறைவாக நான் சொல்ல வருவது, அல்லவைகளை சுட்டிக்காட்டுங்கள். நல்லவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு பெரிய குறிக்கோளை நோக்கி பயணிக்கும்போது, பாதையில் ஏற்படும் கசப்புகளை மறந்து, அந்த இடத்தை அடையும்போது கிடைக்கும் நன்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பூதக்கண்ணாடி கொண்டு, எதிர்மறையாகப் பார்த்தால் எல்லாமே தவறாகத்தான் தோன்றும். நன்றி நண்பரே!

இந்த நிமிடம் மற்றொரு நண்பரது கருதுப்பதிவையும் பார்க்கிறேன். மிகவும் குறைந்த செலவில், அதிகபட்ச விளம்பரம் இல்லாமல், சாப்பாடு விருந்து என்ற தடபுடல் விருந்து இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்த ஒரு இலக்கிய மாநாட்டை குறைகூறுபவர்கள், லைட், பந்தல், இருக்கை, கலந்துகொள்பவர்களுக்கு தேநீர், ஒலிபெருக்கி, அழைப்பிதழ், இனிப்பு, பண்டம் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டு விழாக்களையும் எளிமையாக நடத்துவார்கள் என்று எண்ணுகிறேன். அதற்கு ஆகும் செலவினை சமூக நல காரியங்களுக்கு ஒப்படைத்து விடுவார்கள் என்றும் நம்புகிறேன்.

வாழ்க அந்த நல்லவர்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Siddique (Al ahsa) [13 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5971

தம்பி Cnash, சொன்னது ஆச்சரியமா இருந்தது. நியாயமா பட்டது. உமர் புலவர், காசிம் புலவர் இப்படி எல்லாம் எழுத்வ்ர்களா? சரி சும்மா உதரணத்துக்கு ஒன்னு எட்போம் என்று பர்ர்த்தால், புஹாரி இல் ஓநாய் பேசுன ஆதரம் இருக்கு.

Volume 3, Book 39, Number 517:
Narrated Abu Huraira RA:
The Prophet said, "While a man was riding a cow, it turned towards him and said, 'I have not been created for this purpose (i.e. carrying), I have been created for sloughing." The Prophet added, "I, Abu Bakr and 'Umar believe in the story." The Prophet went on, "A wolf caught a sheep, and when the shepherd chased it, the wolf said, 'Who will be its guard on the day of wild beasts, when there will be no shepherd for it except me?' "After narrating it, the Prophet said, "I, Abu Bakr and 'Umar too believe it." Abu Salama (a sub-narrator) said, "Abu Bakr and 'Umar were not present then." (It has been written that a wolf also spoke to one of the companions of the Prophet near Medina as narrated in Fatah-al-Bari:

Narrated Unais bin 'Amr: Ahban bin Aus said, "I was amongst my sheep. Suddenly a wolf caught a sheep and I shouted at it. The wolf sat on its tail and addressed me, saying, 'Who will look after it (i.e. the sheep) when you will be busy and not able to look after it? Do you forbid me the provision which Allah has provided me?' " Ahban added, "I clapped my hands and said, 'By Allah, I have never seen anything more curious and wonderful than this!' On that the wolf said, 'There is something (more curious) and wonderful than this; that is, Allah's Apostle in those palm trees, inviting people to Allah (i.e. Islam).' "Unais bin 'Amr further said, "Then Ahban went to Allah's Apostle and informed him what happened and embraced Islam.)" palm trees or other trees and share the fruits with me." http://www.sultan.org/books/bukhari/039.htm

தெரியாம சும்மா பெசபுடாது.

நபிகளின் அற்புதம் மற்ற இதிகாசதுக்கு ஒப்பிட புடாது. குரானில் பல்கிஸ் நாயகி சிமசனம் கண் இமைக்கும் நேரத்தில் வந்தத ஊள்ளது. மத்த சமுகம் இப்படி சொன்னால் வரமாட்டான் என்று நின்காபுடாது. பலதார திருமணம் மற்றவர் கேலி பண்றான் என்றா, விட்டுகொடுக்க முடியுமா? விவதம்பன்னி ஜெயிக்கணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Cnash (Makkah ) [14 July 2011]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5976

அஸ்ஸலாமு அலைக்கும்!! Thanks once again to Kavimagan Kaka for his kind motivation and very constructive approach and perspective on this subjected debate. சகோதரர் கவிமகன், உங்களோடு பல கருத்துக்களை பகிர்வது ஆரோக்கியமானதாகவும் அறிவு சார்ததகவும் உள்ளது. வாழ்த்துக்கள்!! உங்கள் இலக்கியம் பற்றிய கருத்தை ஒத்துகொள்கிறேன்..ஆனால் அந்த இலக்கியம் தான் அடி தட்டு மக்களையும் பாமரரையும் இஸ்லாத்தில் பால் ஈர்தததா என்றால் கண்டிப்பாக இல்லை என்பது வரலாற்று உண்மை!!

வீரமணியும் கருணாநிதியும் பேசும் மனுதர்மமும் மானுடநீதி அவர்கள் கல்லா வளர்க தான் என்பது நிதர்சன உண்மை! அதற்கு அவர் உள்மனதை எல்லாம் தட்டி பார்க்க வேண்டாம். இஸ்லாம் பற்றி வாய்சொல் பேசும் அவர்கள் ஏன் வாழ்கை முறையாக ஏற்று கொள்ள கூடாது என்பது தான் என் கேள்வி? அதையே விரிவா முன்னே சொல்லிட்டேன்!

சீறாபுறானமோ வேற எந்த புராணமோ...ஏன் இந்த கட்டு கதைகளை பள்ளி புத்தகத்தில் பக்தி இலக்கியமாக வைத்து இஸ்லாத்தின் பால் மாற்று மத மாணவர்களுக்கு ஒரு தாழ்த்த கண்ணோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்!! அது போன்ற கட்டு கதைகளை நீக்கி விட்டு நபி மொழியை குர்ஆண் நெறியையும் ஏன் படாமாக்கி உயர்ந்த சிந்தனையை மாற்று மத மாணவர்க்கு உண்டாக்க இது போன்ற மாநாடுகள் துணையாக இருக்க கூடாது? இஸ்லாத்திற்கு எதிர் மறை கருத்துள்ள பாடல் ஏன் இருக்கணும்!!

நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் ஏற்று கொள்கிறேன், நான் அறிந்த , மார்க்க அறிஞர்கள் மூலம் தெரிந்த தவற்றை சுட்டி கட்டுகிறேன்..கை புண் காண எந்த விதமான பூத கண்ணாடியும் தேவை இல்லை என்று நினைக்கிறன்!! அதே சமயம் எல்லாவற்றையும் பக்தி கண்ணாடி கொண்டு பார்தால் தவறுகளை பக்தி மறைத்துவிடலாம்!!

சகோதரர் சித்தீக்! ரெம்ப நயமாக சுட்டி காட்டி கருத்தை சொல்லி இருகிறீர்கள் நன்றி! இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஹதீஸ் தான் புஹாரி இல் இருந்து சொல்லி இருகிறீர்கள்! நீங்கள் சொல்லிய அந்த விவரம் போக இன்னும் சில கூடுதல் செய்தியுடன் முஸ்னத் அஹ்மத் லேயும் இடம் பெற்று இருக்கு! அதுக்கும் இந்த புலவர் சீராபுரனத்தில் அவருடைய கற்பனையில் உதிர்ததை எல்லாம் எழுதி ஹிந்து புராணம் மாதிரி சொல்லி இருபதற்கும் என்ன சம்பந்தம்.. இவர் ஓநாய் பேசியது பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி இருகிறாரே எந்த ஹதீஸில் இருந்து எடுத்தார்..

"அன்றியும், தெளிந்த ஜலத்தைச் சிந்துகின்ற நாவையுடைய அந்த ஓநாயானது தனது வாயாற் பற்றிற் றென்று சொல்லும் வண்ணம் அம்மானைப் பின் பற்றிப் போக, அந்தப் புள்ளி மானும் அடித்த பந்தைப் போலும் சாடி அருமை யோடும் இவ்வுலகத்தில் வெளிப்பட கஃபத் துல்லா வென்னும் பள்ளியை விரும்பிச் சென்றது"

இப்படிபட்ட பாடல்கள் தானே தான் கற்பனையில் உதிர்தடை வைத்து எழுதி இருக்கிறார், ஓநாய் பேசிய சம்பவதை கூட ஒழுங்கா தெரியாமல் . இது போன்ற பாடலில் வரும் கற்பனை சம்பவகள் எங்கே நடந்தது, புள்ளி மான் மதீனாவில்/ மக்காவிலும் எங்கிருந்து வந்தது!!

அற்புதங்களை அல்லாஹ் அவனுடைய எல்லா தூதருக்கும் வழங்கினான்... மூசா நபிக்கு கடலை பிளக்க செய்தான், பறையில் இருந்து நீரூற்றை கொடுத்தான், கைதடியை பாம்பாகினான், ஈசா நபிக்கு மரணித்தவரை உயிர் பிக்கும் ஆற்றலை அவன் நாடியபோது கொடுத்தான், சுலைமான் நபிக்கு ஜின்களை வசபடுத்தி கொடுத்தான், பறவைகள் விலங்குகள் பாசையை கற்று கொடுத்தான், இப்ரீத் எனும் ஜின் கண் இமைக்கும் நேரத்தில் பக்கத்து நாடு ராணி யின் (அது பல்கீஸ் என்று சொல்லி இருந்தீர்கள்...தெரியவில்லை... இருந்தால் ஆதாரம் தரவும்) சிம்மசனதை கொண்டு வந்தது. ஸாலிஹ் நபிக்கு அற்புதமாய் ஒட்டகத்தை கொடுத்தான், இப்ராகிம் நபியை தன்னுடைய ஆற்றலால் நெருப்பு குண்டதை குளிர் தரும் சோலையாய் மாற்றினான், யூனுஸ் நபியை மீன் வயிற்றில் 40 நாள் தஸ்பிஹ் செய்ய வைத்தான்..அது எம்பெருமானாருக்கு (ஸல்) ஒரே இரவில் சந்திரனுக்கு விண்ணுலக பயணம் கொள்ள செய்தான், சந்திரனை தன் இரு விரல்களால் அவன் நாடிய போது பிளக்க செய்தான்.அது போல இன்னும் வர இருக்கும் அற்புதமாய், ஈசா நபியை இறங்க செய்ய இருக்கிறான்,இந்த பூமியில் இருந்தே ஒரு உயிர் பிராணியை உண்டாக்கி அது மனிதர்களுடன் பேசசெய்ய இருக்கிறான், அதுக்கும் மேல் ஆற்றலும் அற்புதமும் செய்பவனாக தஜ்ஜாலை இறங்க வைக்க இருக்கிறான், இது எல்லாம் அல்லா உடைய ஆற்றலை சொல்லும் அற்புதங்கள், இதற்கான ஆதாரமும் சான்றுகளும் குர்அன் ஹதீஸ் இல் உள்ளது, அதை நம்பி இமான் கொண்ட வராக இருக்கிறோம்

அதற்காக புலவர்கள் கற்பனையில் உதிர்ததை எல்லாம் மார்க்கம் என்று நம்ப இந்த தூய மார்க்கம் இடம் தரவில்லை.. சரி உமறு புலவரா இப்படி எழுதி இருக்க போறார் என்று ஆராச்சி செய்த சித்தீக் காக்கா அப்படியே, சஹாபிய பெண்கள் பற்றி எழுதிய வரி களுக்கும், அண்ணலார் மகளார் பாத்திமா அழகு பற்றி வர்ணனை செய்தது பற்றியும், அப்படியே மதீனாவில் வாழை மரம் கெட்டி, குதிரை ஊருவலம் வந்து, உலக மன்னர்கள் எல்லாம் வந்து வாழ்த்தி, முக்கனி வழங்கி, முரசு ஒழிக்க, தாகம், முத்து பவளம், என உடல் முழுக்க அணிகலன் அணிந்து வந்து திருமணம் முடித்த கதைக்கும், இன்னும் எழுத முடியாத மடமைகள், அபத்தங்கள் 1000 இருக்கு தருகிறேன் அதற்க்கும் சேர்த்து எதாவது ஆதாரம் இருந்தால் தேடி பார்த்து தாருங்கள்!! திருத்தி கொள்கிறோம்.

فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاً

“(And) if you differ in anything amongst yourselves, refer it to Allah & His Rasool (PBUH), if you believe in Allah & in the Last Day. That is better and more suitable for final determination”.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by முத்துவாப்பா & நண்பர்கள் குழு (அல்-கோபர்) [14 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5978

மிகவும் அருமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ....

மாநாட்டின் பெயரோ இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு... அரங்கின் பெயரோ முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரங்கம் ... ஆரம்பமே முரண்பாடா இருக்கே......

இஸ்லாமிய நெறிமுறைகளை பற்றி பேச பேராசிரியர் இளங்கோ, முனைவர் ராஜகோபால், நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் – இவர்கள் தான் உங்கள் இஸ்லாமிய அறிஞர்களோ ....?

நாம் அரசாங்கத்திடம் இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு என்று போராடுகிறோம் நாம் ஒதுக்கினோமா இட ஒதுக்கீடு பெண்களுக்கு..

ஆண்களும் பெண்களும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து ... இது தான் நீங்கள் இஸ்லாத்தை வளர்க்கும் முறையா ...?

தமிழ் இஸ்லாமிய மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ, முனைவர் ராஜகோபால், நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் போன்ற மாற்று மத சகோதர்களை எல்லாம் அழைத்திருக்கும் பொழுது ஏன் உங்களுக்கு மாற்று கொள்கை உடைய நம் இஸ்லாமிய சகோதர்களை அழைக்கவில்லை ... ஏன் உருப்படியாக ஏதாவது பேசி விடுவார்கள் என்ற பயமா ...?

இதை எல்லாம் சொன்னால் ...
குறை கூறுபவன்
நிறை கூற மாட்டான் என்பார்கள்
மறை கூறியவாறு பெண்களுக்கு –தனித்
திரை போடுங்கள் என்று சொல்வது
குறை கூறுவது ,
தவறு என்று சொன்னால் –
இந்த தவறை நாங்கள் செய்து கொண்டே இருப்போம்.

இஸ்லாத்தை வளர்க்கின்றோம் என்ற பெயரில் இது போன்ற தேவையில்லாத செயல்கள் செய்பவர்களையும் , தாங்கள் செய்வது தான் மார்க்கம் என்று சுய விளம்பரம் செய்து இஸ்லாத்தில் கடமையாக்காத ஒன்றை இது தான் இஸ்லாம் என்று சொல்லுபர்களையும் நாங்கள் ஒரு பொழுதும் ஆதரிக்கமாட்டோம் .

அன்பு சகோதரர்கள்
முத்துவாப்பா & நண்பர்கள் குழு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. காழ்ப்புணர்ச்சியைக் களைந்திடுவோம்!
posted by kavimagan (dubai) [14 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5986

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு குறித்த
நீண்ட விவாதம்,இருதரப்பிலும் சிற்சில புரிதல்
ஏற்பட்டு நிறைவுக்கு வருகின்ற சமயத்தில்,
நண்பர் முத்துவாப்பா ஒரேஓர் உருப்படியான
குற்றச்சாட்டோடும்,ஏராளமான அரைத்த
மாவோடும் களம் புகுந்திருக்கின்றார்.

பெண்களுக்கு தனி இருக்கை ஒதுக்காதது
குற்றம்தான்.ஏற்கனவே நண்பர்களால், இந்தத்
தவறு மாநாட்டுக்குழுவினருக்கு சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. இருக்கை ஒதுக்காதது
குழுவினரின் குற்றமேயன்றி ,இஸ்லாமியத்
தமிழ் இலக்கியத்தின் குற்றமல்ல!

தன் வாழ்நாள் முழுமையும்,தமிழ் மொழி
வளர்ச்சி, உலகத்தமிழர்களிடையே ஒற்றுமை
மற்றும் மதநல்லிணக்கம் ஏற்பட பாடுபட்ட
ஒருவரது பெயரை வைக்காமல்,ஒவ்வொரு
தமிழ்பேசும் குடும்பமும் துண்டு துண்டாக
சிதறு தேங்காயாக ஆவதற்குக் காரணமான
குழப்பவாதிகள் பெயரையா மாநாட்டு
அரங்கிற்கு வைக்கமுடியும்?

மாற்றுமத அறிஞர்கள் இஸ்லாமிய
இலக்கியம் அல்லது உங்கள் பாணியில்
நெறிமுறைகளைப் பேசக்கூடாது என்று
சொல்லும் நீங்கள் அதற்கான ஒரேஒரு
ஆதாரத்தையாவது திருமறை அல்லது
நபிமொழியிலிருந்து எடுத்துக்காட்ட முடியுமா?
மாற்றுக்கொள்கை உடைய மார்க்க அறிஞர்கள்
அழைக்கப்பட்டதும்,சேவை செம்மல் போன்ற
விருது வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டும்,
அவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள்.காரணம்
அவர்களுக்கு குழப்பம் செய்யத்தான் தெரியுமே
தவிர இதுபோன்ற விழாக்கள் மூலமாக ஒற்றுமை
மற்றும் சமூக நல்லிணக்க பங்களிப்பு போன்ற
எதையும் உருப்படியாக செய்யத்தெரியாததால் !

இஸ்லாத்தில் கடமை ஆக்கப்படாத எதையும்
செய்யக்கூடாது என்ற வாதம் உங்களுக்கு
வினோதமாகப் படவில்லையா ? தயவுசெய்து
காழ்ப்புணர்ச்சியைக் கைவிட்டு நேர்மறையாக
சிந்தியுங்கள்.எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Salai Sheikh Saleem (Dubai) [14 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5989

என்ன விவேகமான கருத்து பரிமாற்றங்கள் நமக்கெல்லோருக்கும் புரியும்படி ஆதாரங்களுடன். கருத்துக்களை பதிவுசெய்த அனைவருக்கும் ஒரு சபாஷ். இந்த விவாதத்திற்கு புள்ளையார் சுழி போட்ட எனதன்பு இளவல் சாளை நவாசிர்க்கு ஒரு கொட்டு. (திருஷ்டிக்கொட்டுதான்). சரி இப்படியே போயகொண்டிருந்தால் எப்படி? நாட்டாமை ROLE யார் போடுவது ? தம்பி ஜியாயுதீன் எங்கே போனார்? சரி இப்படி ஒரு முடிவுக்கு வரலாமா?

1) விழா நடத்துவது ஆடம்பரம் என்று சொல்வது ஒரு சமூக பார்வையாக தெரியவில்லை. எது எது எப்போது நடக்க வேண்டுமோ அது அது அவ்வப்போது நடக்கத்தான் வேண்டுமே ஒழிய, ஊரில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று எதையுமே நடாத்தக்கூடாது என்று நாம் பிடிவாதமாக இருக்க முடியாது. இந்தியாவில் ஏழைகள் ஜாஸ்திதான் அதற்காக செயர்க்கைகோள்கள் விண்ணில் அனுப்புவது அனாச்சாரம் என்று எப்படி சொல்ல முடியும். ஆனாலும் எது ஆடம்பரம் எது ஆடம்பரம் இல்லை என்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை என்பதால், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டியதுதானே.

2) இஸ்லாத்தை பொறுத்த வரை நம்முடைய திருக்குரானை விட மற்ற இலக்கியங்கள் இரண்டாம் பட்சம்தான். சீறாப்புராணத்தில் சில பல தவறுகள் இருக்கலாம் அதற்காக எல்லா இஸ்லாமிய இலக்கிய கலைஞ்சியங்களும் தவறு என்று சொல்வதும் விவேகமான ஒரு பார்வையாக தெரியவில்லை.

நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு தீவினை அகற்றேல். நீ இலக்கியம் படித்தால்தான் ஒரு முழு முஸ்லிம் என்று யாரும் சொல்லவில்லையே. அதேபோல் நல்ல இஸ்லாமிய இலக்கியத்தால் மாற்றுக்கருத்து கொண்டோருக்கும் இஸ்லாத்தை இலகுவில் எடுத்து செல்லலாம் என்கிறபோது. இருக்கும் நல்ல இஸ்லாமிய இலக்கியங்களை பாதுகாருங்கள் இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லுங்கள். நல்ல (நல்ல என்றால் இஸ்லாமிய கருத்துக்களை ஒன்றிய) இஸ்லாமிய இலக்கியங்களை படியுங்கள் நான் ஒரு இலக்கியவாதியும் இல்லை இலக்கியத்தை எதிர்ப்பவனும் இல்லை. நடுநிலைவாதியாக இதை சொல்லலாமில்லே

3) தமிழ் இலக்கிய மாநாட்டில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் புறக்கணித்தார்களா அல்லது புறக்கநிக்கபட்டார்களா என்பது தெளிவில்லை. எப்படிதான் இருந்தாலும் இந்த விளையாட்டிற்கு நான் வரவில்லை.

நாட்டாமை தீர்ப்பை மற்றிசொல்லு என்று எங்கேயோ ஒரு கூக்குரல் கேட்கிறதே,, எனக்கு இடம் சுட்டு விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by M.A.SAYED ALI (ABUDHABHI) [14 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5990

மாநாட்டை நான் நேரில் காணவில்லை. ஆனால் இந்த மாநாடு ஒரு அருமையான விவாதத்திற்கு இந்த தளத்தில் அடிகோலியிருக்கிறது. மூடப்பழக்கங்களை ஒழிப்பதுதான் இஸ்லாமிய நெறி. அது எந்த ரூபத்திலும் வரக்கூடாது. சீறாப்புராணம் ஒரு இதிகாச வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பொய்யும் மிகைப்படுத்துதலும் கலந்துதான் காப்பியங்களையும் இதிகாசங்களையும் உருவாக்குகிறார்கள். இந்து மதத்தில் கூட இதிகாசங்களும் புராணங்களும் அவர்களின் வேதங்களுக்கு முரண்பட்டதாகவே இருப்பதை மேடை ஜாகிர் நாயக் வெளிப்படுத்தினார். தன்னை பற்றி பொய் சொல்பவன் நரிகிர்க்கு போகட்டும் என்றே நபி சொல்லி இருக்கிறார்கள். வெல் டன் முத்துவாப்பா & நண்பர்கள். இங்கு அதிகம் சொல்ல எனக்கு பயம். காரணம் இவர்கள் பில்ட்டர் பண்ணிவிடுகிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Siddique (Al Ahsa) [14 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5991

தம்பி cnash, இது ஒன்றும் பெரிய விவாதம் பண்ணுற Topic இல்லை...இன்ஷா அல்லா நல்ல படி நடந்தேற வாழ்த்துக்கள் என்று தம்பி முதலில் ஆரம்பித்து சொல்லி வாழ்த்து வசையாமாரி போயிட்டது.

தம்பி சொன்ன எல்லா அற்புதமும் நாம் மாற்று மதத்தவருக்கு தெரிவதால், இப்படி நெயனைப்பரோ அப்படி நினைப்பரோ என்று சொல்லதேவையில்லை.

தம்பி உங்க கேள்வி கீழே திரும்ப பாருங்க.

ஓநாய் உடன் நபி(ஸல்) பேசியதையும், மானுக்கு பிணை நின்றதையும், உடும்புடன் நபி பேசியதையும் நீங்க இஸ்லாத்தில் இந்த பகுத்தறிவு மார்க்கத்தில் உள்ளது தான் என்று ஆதாரபூர்வமாக குர்ஆண்/ ஹதீஸ் மூலமோ ஏன் 4 மத்ஹாப் சட்ட நூலில் மூலமோ நிருபித்து காட்ட முடிமா?

ஓநாயோடு பெசியத்துக்கு அறவே இல்லை என்று கேட்டுவிட்டு, இப்ப எல்லோருக்கும் தெரிந்த ஹதீஸ் என்று சொல்லுகீர் . முதலில் ஏன் இது மூடநம்பிக்கை போல் சிதரிக்கணும். நபி (ஸல்) அவர்கள் சட்டை,முடி,வியர்வை எல்லாத்துக்கும் பவர் உண்டு.இது மூடனன்பிக்கை என்று மத்தவன் நினைபான் என்பதால் மறுக்கலாம?

நீங்க சொன்ன இன்னொரு கருத்து. இப்ரீத் எனும் ஜின் கண் இமைக்கும் நேரத்தில் பக்கத்து நாடு ராணி யின் (அது பல்கீஸ் என்று சொல்லி இருந்தீர்கள்...தெரியவில்லை... இருந்தால் ஆதாரம் தரவும்) சிம்மசனதை கொண்டு வந்தது.

இந்த சம்பவம் பல்கீஸ் நாயகி சம்பதபட்டு இல்லாவிட்டால், வேறு யாருடை சிம்மாசனம் என்றால் சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்ளலாம். தம்பி, உங்க கமெண்ட்ஸ் பார்த்த பலதரபட்ட நூல்களை படிகிறீர்கள்.

How the Throne of Bilqis was brought in an Instant (ibn katheer)

http://www.tafsir.com/default.asp?sid=27&tid=38297

மேல தப்சீர் லிங்க் பார்க்கவும். எல்லாத்துக்கும் சந்தேக கண்ணோடு பாகவேனம்.

இப்ரீத் எனும் ஜின் கண் இமைக்கும் நேரத்தில் பக்கத்து நாடு ராணி யின் சிம்மசனதை கொண்டு வந்தது ஆணித்தரம கூறிவிட்டீர்.

Said one who had knowledge from the Scripture, "I will bring it to you before your glance returns to you." And when [Solomon] saw it placed before him, he said, "This is from the favor of my Lord to test me whether I will be grateful or ungrateful. And whoever is grateful - his gratitude is only for [the benefit of] himself. And whoever is ungrateful - then indeed, my Lord is Free of need and Generous." (Quran 27:40).

(One with whom was knowledge of the Scripture said: ) Ibn `Abbas said, "This was Asif, the scribe of Sulayman.'' It was also narrated by Muhammad bin Ishaq from Yazid bin Ruman that he was Asif bin Barkhiya' and he was a truthful believer who knew the Greatest Name of Allah. Qatadah said: "He was a believer among the humans, and his name was Asif.'' (Ibn katheer)

(And verily, I am indeed strong and trustworthy for such work.) Ibn `Abbas said: "Strong enough to carry it and trustworthy with the jewels it contains. Sulayman, upon him be peace, said, "I want it faster than that.'' From this it seems that Sulayman wanted to bring this throne as a demonstration of the greatness of the power and authority that Allah had bestowed upon him and the troops that He had subjugated to him. Power such as had never been given to anyone else, before or since, so that this would furnish proof of his prophethood before Bilqis and her people, because this would be a great and wondrous thing, if he brought her throne as if he were in her country, before they could come to it, although it was hidden and protected by so many locked doors. When Sulayman said, "I want it faster than that, (Ibn katheer)

குரானில் ஒரு விஷயம் ரொம்ப தெளிவா இருக்கு. பிரபல்யமான இந்த சம்பவத்திலேயே சந்தேகப்பட்டு அதையே இப்படி மாதி சொல்லிடீலே. இப்ரீத் ஜின் கண் இமைக்கும் நேரத்தில் கொண்டு வந்தது என்று மாத்தி பேசகுடாது? சரியா. உக்காந்த இடத்திலிருந்து எழும்பு முன்னாடி (kabla anthakooma makaamak) கொண்டுவருவேன் என்று இப்ரீத் சொன்னது. ஆனா வேதத்தை அறிந்த ஒருவர் அல்லது ஜின் (ஆசிபே பர்கிய்ய) இதில் கருத்து வேறுபாடி உண்டு) கண் இமைக்கும் நேரத்தில் கொண்டுவந்தார்.

இன்னும் ஆச்சரியம் என்னன்னா, இது பல்கீஸ் நாயகி சிம்மாசம் இல்லைனா, யாருடையது? சிம்மாசனம் வந்த பின்னாடி எந்த அரசி சுலைமான் நபிட்ட வந்தது சொல்லுங்க பாப்போம்,தெரிஞ்சுகிலாம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Cnash (Makkah ) [16 July 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6022

சகோ. சித்தீக், நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் நீயா நானா போராட்டம் ஏதும் நடக்கவில்லை... நான் வாழ்த்தி விட்டு வசை பாடவும் இல்லை, இசைபாடவும் இல்லை... இது விவாதம் பண்ணுகிற topic இல்லை என்று நான் சொன்னது புத்தக வெளியீட்டை பற்றி.....எங்கே நம் விவாதிப்பது மாநாடு கூடுமா? கூடாதா? என்பது பற்றி இல்லை..சில சுட்டிகாட்டபட்ட புராண கதை போன்ற குறைகளை களைய வேண்டும் என்பது தான்!! சில கவனகுறைவால் வேத ஞானம் பெற்ற ஒரு(வர்) ஜின் கண் இமைக்கும் நேரத்தில் கொண்டு வருவேன்..என்று சொன்னதை இப்ரீத் என்று அவசரத்தில் எழுதிவிட்டேன் ...சுட்டிகாட்டுனிர்கள் திருத்தி கொள்கிறேன், இதில் ஒன்றும் ஆணித்தனமாவோ சுத்தியல் தனமாவோ அடித்து சொல்லவில்லை.. அது பல்கீஸ் என்பது தான் பெயரா என்பதில் இருவேறு கருத்துக்கள் அறிஞர்கள் மத்தியில் இருக்கிறது அதனால் அதையும் சுட்டிகட்டினேன்.!!

சரி சித்தீக் காக்கா!! என்னுடைய கருத்தை ஆராய்ந்து வரிக்கு வரி குற்றம் கண்டுபிடிக்க நினைக்கும் நீங்க..பல ஆயிரகணக்கான பிழைகள் பொய்கள், கற்பனை கதைகள் என்று வார்த்தைக்கு வார்த்தை உள்ள அந்த புராணத்தை ஏன் தவறு என்று ஒத்துகொள்ள மனம் வரவில்லை....இஸ்லாம் என்ற பெயரில் எது இருந்தாலும், அல்லது முன்னோர்கள் எது சொன்னாலும் அது நல்லது என்ற அறியாமையா? அல்லது நீயா நானா என்ற பிடிவாதமா? என்னுடைய வார்த்தைகளும், கருத்தும், எந்த புத்தகத்திலோ / பாடத்திலோ பக்தி இலக்கியமாக இடம் பெற போறதில்லை, ஆனால் ஒரு நூற்றாண்டு காலமாக பள்ளி புத்தகத்தில் படமாக பிஞ்சு மனத்திலும் மாற்று மத அறிஞர்கள் மனத்திலும் இது தான் இஸ்லாம்.. ராமாயணத்தின் மறுபதிப்பு தான் இந்த மார்க்கம் என்ற நிலைக்கு தள்ளிய இந்த புராணங்களில் உள்ளதை எல்லாம் இஸ்லாம் தான் என்று ஒத்து கொள்கிறீர்களா?

அப்படி என்றால், இந்த மதீனத்து சஹாபிய பெண்கள் பற்றிய கீழ் தரமான வர்ணனை, சுவர்க்கத்தில் முதலில் நுழையும் பாத்திமா (ரலி) அவர்களில் தோற்றம் அழகு பற்றிய அருவருக்க தக்க வர்ணனை, இன்னும் சொல்ல முடியாத பல பல கதைகள் கற்பனைகள்... இவற்றுக்கெல்லாம் ஆதாரம் தருவிர்களா... திரும்பவும் அதையே தான் கேட்கிறேன், அந்த ஓநாய் பேசிய சம்பவம் பற்றி வருகிற ஹதீஸ் நீங்கள் குறிப்பிட்டதை விட இன்னும் சில விளக்கங்களுடன் முஸ்னத் அஹ்மத், புஹாரி இரண்டையும் குறிப்பிட்டு விட்டேன், அதில் வரும் விளக்கங்களை தவிர, அந்த புலவர் கூறும் கிறுக்கு தனமான கற்பனை கதை 1000 வரிகளுக்கு மேல் இருக்கே இவருக்கு யார் சொன்னது,.. அந்த ஹதீஸ்லோ வேற எந்த ஹதீஸ்லோ எங்கே நபி பேசியதாக உள்ளது!! சொல்லுங்கள்...... புள்ளி மான் கதை, உடும்பு, ஒட்டக கதை மயிலுடன் பேசினார் மானுடன் பேசினார், மானுக்கு பிணை நிண்டார், இதை எல்லாம் இவருக்கு சொன்னது யார்...... முடிந்தால் சொல்லி தாருங்கள் நங்கள் எங்களை திருத்தி கொள்கிறோம், இல்லை உங்களை திருத்த விட்டாலும் பரவ இல்லை. மாணவர்களையும் இஸ்லாத்தை நோக்கி வரும் அறிஞர்களையும் கெடுத்து விட வேண்டாம்.

அன்பு சகோதரரே! நீங்கள் சொல்லுகின்ற விஷயம் அல்லாஹ் சொன்னதாக இருந்தால், அவனது தூதர் காட்டியதாக, செய்ததாக இருந்தால் அதை விவாதம் மூலம் வெற்றி கண்டு பல்லாயிரம் பேரை எந்த தூய மார்க்கத்தின் பக்கம் கொண்டு வந்து கொண்டே இருகிறார்கள்.. அதற்கு அல்லாஹ் உடைய உதவியும் வெற்றியும் கிடைக்கும்.... நபி மூசா அவர்கள் தேர்ச்சி பெற்ற பிர்அவுன் உடைய சபையில் உள்ள மந்திரவாதிகளை எல்லாம் வெற்றி கண்டார்கள்!! மூசா நபி உடைய மனதில் பயம் தோன்றியது, நாம் சொன்னோம் பயப்படாதீர்! நீர் தான் வெற்றியாளர் என்று!! என்று அல்லாஹ் சொன்னான், அந்த கைத்தடி பாம்பாய் மாறி, மற்ற பாம்புகளை விழுங்கியது, ..இது வரலாறு அல்லாஹ் வெற்றி கொடுத்தான், அல்லாஹ்வின் உதவி இருந்தது, இங்கே அல்லாஹ் சொல்லாததை, அவன் தூதர் தடுத்ததை கண்டித்ததை வெறுத்ததை எல்லாம் அல்லாஹ்வின் பெயரிலும் அவன் தூதர் பெயரிலும் இட்டு கட்டிவிட்டு, பிழைப்புக்காக கதை எழுதி விட்டு... மாற்றுமதகாரரிடம் பொய் விவாதம் பண்ணு என்று சொன்னால்.... இருகிறவன் கூட இஸ்லாத்தை விட்டு ஓடி விடுவான்!!!

கவிதைக்கு இஸ்லாம் எதிரி இல்லை!! ஹஸ்ஸான் இப்னு தாபித் போன்ற சஹாபியின் நல்ல கவிதைகளுக்கும், பிற இணைவைப்பு இல்லாத பாடல்களுக்கும் நபி அவர்களில் அங்கீகாரம் இருந்து இருக்கிறது, ஆனால் இது போன்ற மூடதனமான கவிதைகளுக்கும், பொய்களை மட்டுமே முதலாக வைத்து பொழப்பு நடத்தும் கவிஞர்களை பற்றியும் அதை மூட தனமாக பின்பற்றுவோர் பற்றியும் தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்!!

"கவிஞர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுகின்றனர், நிச்சியமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை கூறுகிறார்கள்" (26 : 224-226 )

அல்லாஹ் நாம் யாவருக்கு நல்ல வழி காட்டுவானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by kavimagan (dubai) [16 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6024

அன்புச் சகோதரர்கள் CNASH ,சித்தீக்,முத்துவாப்பா மற்றும் இவ்விவாதத்தில் பங்குகொண்டோர் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும்!

இந்தவிவாதம் இதுபோன்ற மாநாடுகள் தேவையா என்ற கேள்வியுடன் சகோதரர் சாளை நவாஸ் அவர்களால் துவக்கப்பட்டு, சீறாப்புராணம் தேவையா என்ற இன்னொரு தலைப்புக்குள் CNASH அவர்களால் திருப்பி விடப்பட்டு மிகநீண்ட விவாதம் நடந்து முடிந்திருக்கின்றது.

CNASH அவர்களது சீறாப்புராணம் குறித்த கேள்விகளுக்கு, நம்மிடம் தகுந்த பதில் இல்லை அல்லது அது குறித்த சரியான ஞானம் இல்லை என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதுமில்லை. காரணம் விவாதம் என்பது உண்மை நிலைகளை புரிந்து ஏற்றுக்கொள்ளத்தானே அன்றி, வீண் விவாதம் செய்து வெற்றி பெறுவதற்காக அல்ல!

அதே நேரத்தில், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, ஒருவேளை ஒரு சீறாப்புராணத்தில் தவறு இருப்பதால் ஒட்டுமொத்த இஸ்லாமிய இலக்கியங்களும் தவறு ஆகிவிடாது. இலக்கிய மாநாடுகள் நடத்துவது தவறு இல்லை என்றும் பொய்யில்லாத, இனைவைக்கப்படாத கவிதைகள் இரசூல் நபியின் அங்கீகாரம் பெற்றதுதான் என்பதனை CNASH (இயற்பெயர் தெரிந்தால் இன்னும் நல்லது) அவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

மற்றபடி வீண்செலவு, ஆடம்பரம் அப்படி இப்படி என்று எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுவிட்டது. இஸ்லாம் வளர்வதற்கு அதன் தூய கொள்கைகள்தான் காரணம் என்றாலும் அதை மக்கள் மத்தியில் பரப்பி, முழுமையான வெற்றியைத் தேடித் தந்ததில் மொழி இலக்கியங்களின் பங்களிப்பு மகத்தானது.

நல்லவற்றை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம்! நண்பரின் சீறாப்புராணம் குறித்த கருத்துக்களை நான் இப்போதுதான் ஆய்வு செய்யத் துவங்கி இருக்கிறேன். இன்ஷாஅல்லாஹ், இதே வலைதளத்தில் இதுகுறித்த விரிவான கட்டுரை ஒன்றும் எழுதவிருக்கிறேன். அட்மின் அவர்கள் அனுமதித்தால்.

இந்த விவாதத்தில் எனது கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Najeeb nana (Kayalpatnam) [17 July 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 6062

தொடர்ச்சியாக இந்த கமெண்ட்ஸ்-களை படித்து வந்தேன். கவிமகனாரின் ஆய்வுக்கட்டுரைக்காக காத்திருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தயாநிதி மாறன் ராஜினாமா!  (7/7/2011) [Views - 3117; Comments - 11]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved