காயல்பட்டினம் நகரில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில், ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் சார்பில் நாளை காலை 09.30 மணிக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகரில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில், மருத்துவ நிபுணர் குழுவை கொண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான முதலுதவி செயல்முறை பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ் நாளை காலை 09:30 மணிக்கு, நமதூரில் அமைந்துள்ள ஜலாலிய நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நமதுரின் புகழ் பெற்ற குழந்தை நல மருத்துவர் டாக்டர் தம்பி அவர்கள் பங்கேற்க உள்ளார்கள். காயல் ஐக்கிய பேரவையின் தலைவர் உவைஸ் ஹாஜியார் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள். ஜீவன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் அபுல் ஹசன் அவர்கள் இந்த முதலுதவி செயல்முறை பயிற்சி முகாமை நடாத்தி தர இசைந்துள்ளார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே....
இந்த முதலுதவி பயிற்சி முகாம் நமது நகர பொதுமக்களிடம், குறிப்பாக பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.... முதற்கட்டமாக நம் நகரின் பொதுமக்கள் 100 பேருக்கு பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் மக்களின் அமோக வரவேற்பின் காரணமாக இந்த பயிற்சி திட்டத்தை 180 ஆக உயர்தி உள்ளோம், எல்லா புகழும் இறைவனுக்கே.........
இந்த பயிற்சி முகாமுக்கு முன்பதிவு செய்துள்ள பங்கேற்பாளர்கள் குறித்த நேரத்தில் தங்களது வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் பதிவு செய்துகொள்ளமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உள்ளூர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயல் நகர பொதுமக்கள், தங்களின் குடும்பத்தினரை இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்க ஊக்கபடுத்துமாறு கேட்டுகொள்ளுகிறோம். இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக பங்கேற்க உள்ளவர்களுக்கு, இனி வரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்பு அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பங்கேற்க உள்ள பொதுமக்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுகொள்ளுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. |