காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.
இருபத்தொன்றாம் நாளான நேற்று, (24.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்கினார்.
திருமறை குர்ஆனின் பல்வேறு அத்தியாயங்களின் மகத்துவங்கள், இறைநேசர்கள், இமாம்கள், தபஉத்தாபிஈன்கள், தாபியீன்கள், நபித்தோழர்கள் என்ற சங்கிலித் தொடரில் நபிகளாரைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வழங்குகிறார்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
|