Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:50:50 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6546
#KOTW6546
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 22, 2011
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4581 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்து விட்டது. இதையடுத்து, தி.மு.க., தலைவரான கருணாநிதி தன் மகளை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்தார். நேற்று காலை சென்னையிலிருந்து, விமானம் மூலம் டில்லி வந்து இறங்கினார்.

நேராக, டில்லி லீலா கெப்பின்ஸ்க்கி என்ற ஓட்டலுக்கு அவரது கார் விரைந்தது. அங்கு, மாலை வரை கருணாநிதி ஓய்வெடுத்தார். மாலை 4 மணிக்கு ஓட்டலை விட்டு கிளம்பிய அவர், திகார் சிறைக்குள் 4.50 மணிக்கு நுழைந்தார். அவரது காரில் ராஜாத்தியும், அழகிரியும் இருந்தனர். கருணாநிதியோடு துரைமுருகன், வேலு, பொன்முடி, சண்முகநாதன் உள்ளிட்ட பலரும் உள்ளே சென்றனர். உடன் சென்ற டி.ஆர்.பாலு மற்றும் விஜயன் ஆகியோர், சிறைக்கு வெளியே நின்று கொண்டனர்.

கருணாநிதி சந்திக்க வருவதையடுத்து, 6ம் எண் சிறையில் உள்ள கனிமொழி, தயார் நிலையில் இருந்தார். 4ம் எண் சிறையில் உள்ள சரத்குமாரும், ஒன்றாம் எண் சிறையில் உள்ள ராஜாவும், கனிமொழியின் 6ம் எண் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பே இவர்கள் மூவரும், கருணாநிதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

முதலில் கனிமொழியுடன், கருணாநிதி மற்றும் ராஜாத்தி ஆகியோர் மட்டும் கொண்ட சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றியுள்ளார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார். அந்த இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கருணாநிதி கூறினார். பின்னர், இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு, திகார் சிறையை விட்டு 5.45 மணிக்கு, கருணாநிதியின் கார் வெளியில் வந்தது. திகார் சிறையின் நான்காம் எண் நுழைவாயில் வழியாக நுழைந்த கார், அதே நுழைவாயிலிலிருந்து வெளியே வந்தது. கார் நேராக, கருணாநிதி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தது.

நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தங்கியிருந்த கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை. கடந்த முறை டில்லிக்கு வந்தபோது சிதம்பரம், குலாம்நபி ஆசாத், நாராயணசாமி ஆகியோர் வந்து சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்ற குற்றச்சாட்டை சுமந்து, டில்லி திகார் சிறையில் தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி இருந்து வருகிறார். சி.பி.ஐ., கோர்ட், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என மூன்று இடங்களிலுமே அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும், குறைந்தது 40 நாட்கள் வரையிலாவது சிறையில் இருக்கப் போவது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி:
தினமலர் (21.06.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தாரை தாரையாக கண்ணீர்
posted by சாளை நவாஸ் (singapore) [22 June 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5525

முதலில் கனிமொழியுடன், கருணாநிதி மற்றும் ராஜாத்தி ஆகியோர் மட்டும் கொண்ட சந்திப்பு நடைபெற்றது. அப்போ எப்படி இந்த போட்டோ எடுத்தாங்க?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நாளை வெளியே வருவார்கள்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [22 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5528

கட்சி தான் முக்கியம் என்று நீங்கள் அன்று இருந்து இருந்தால் இன்று இந்த கண்ணீர் வந்து இருக்காதே... ஐயா இது தேவையா ? இனி நடக்க வேண்டியதை பாருங்கள்.... நம் நாட்டில் எந்த அரசியல்வாதியும் தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க போவது இல்லை.... எல்லாம் சில மாதத்தில் உங்களுக்கு (அரசியல்வாதிகளுக்கு) சாதகமாக தீர்ப்பு வரும் - இப்போது உள்ளே இருபவர்கள் நாளை வெளியே வருவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. போட்டோ தற்போது எடுத்தது இல்லை
posted by Moosa Sahib (Sharjah) [22 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5529

பிரசதிருக்கும் நிழல் படம் தற்போது எடுத்தது இல்லை. இது பழைய படம். தினமலர் கமெண்ட்ஸ் பகுதி பார்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. செம்மொழியால் உயர்ந்த தலைவர் இப்படி கனிமொழியால் ரத்த கண்ணீர் வடிப்பதை பார்க்கும் போது,.................?
posted by A.R.Refaye (Abudhabi) [22 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5532

செம்மொழியால் உயர்ந்த தலைவர் இப்படி கனிமொழியால் ரத்த கண்ணீர் வடிப்பதை பார்க்கும் போது,.................?

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், ஊழல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் ஊழல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும். எங்கோ கேட்ட கலைஞர் உரை

ஊழல் தலைவர்களே உங்களுக்கும் இது படிப்பினியாக இருக்கட்டும்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Picture
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [22 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5533

இங்கு இருகின்ற படம் பழையது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கனிமொழி மகளே அல்ல.!!!
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [22 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5534

தம்பி. சாளை நவாஸ்..இந்த போட்டோ பழைய போட்டோம்மா.. ஒரு மீட்டிங்லே ஐயா கண்ணாடியை கழற்றி கண்ணை துடைக்கும் போது ஒரு பத்திரிகை போட்டோகிராபர் கிளிக்க்-கிப்புட்டார்.

என்ன...மகளை பார்த்ததும் கண்ணு கலங்கி விட்டதோ......... நீ(ங்க) பொய் கேஸ் போட்டு எத்தனை அப்பாவி முஸ்லிம்களை சிறைக்கு அனுப்புனீங்க...அவர்களின் வலி உங்களுக்கு புரியுமா..

ஒன்று உங்களுக்கு தெரியுமா தலைவரே- சுமார் 41 வருடங்களுக்கு முன்பு நீங்கள் முதல்வராக இருந்த காலத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பெட்டி செய்தி வந்தது நினைவில் உள்ளதா..

" இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி? "

உடனே தாங்கள் ராசாத்தி யார் என்றே தெரியாது என்று லப்போ திப்போ என்று குதித்து, தங்களின் முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழந்து, அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்திற்கு மாசு வந்து விட்டது என்று அந்த பத்திரிகை ஆசிரியரும் தாங்களின் நண்பருமான திரு. என்.கே.டி.சுபிரமணியம் அவர்களை உள்ளே தள்ளியது நினைவு உண்டா.

அந்த மகளுக்காக தாங்கள் கண்ணீர் சிந்தியது வியப்பு தான்.இன்னும் கூட கனிமொழி யார்? என்றால், கனிமொழியின் தாயார் என் துணைவி என்று நக்கல் தானே அடிக்கின்றீர்கள்...

காலம் பதில் சொல்லுகிறதா தலைவரே..

சந்திக்கலாம்..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கூடா நட்பு கேடாய் முடியும்
posted by N.A. Thymiah (Chennai) [22 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5535

கூடா நட்பு கேடாய் முடியும் என்றார் கருணாநிதி. அவர் சொல்வது உண்மை தான், தமிழக மக்களோடு நட்பு கொள்ளாமல் தன் குடும்பத்தோடு தவறான நட்பு (குடும்பத்தை கொள்ளை அடிக்க அனுமதித்தது ) பாராட்டியதன் விளைவு தான் இப்போது அனுபவிக்கிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Time has changed
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [22 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5539

When Mr.Karunanidhi was sworn in as a C.M. first time, he heard the news about the birth of KaniMozhi through news paper which he rejected that she was not born to him. Now see the change of time.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சாபம்!
posted by kavimagan kader (dubai) [22 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5540

உதயகுமார் முதல் முத்துகுமார் வரை ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கண்ணீருக்குக் காரணமான கலைஞரே! ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? புரட்சித் தலைவர் அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தீவிர சிகிச்சைக்கு உட்பட்டிருந்த நேரம்,நாற்பதாண்டுகால நண்பர் என்று கூட எண்ணாமல்,அவர் உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டார் என்று சொன்னீர்களே! கோடிக்கணக்கான தமிழ் மக்கள் அன்று வடித்த கண்ணீரின் சாபம்,புரட்சித் தலைவர் அவர்கள் இறந்தும் வாழுகின்றார்.நீங்கள் இருந்தும் இறந்து விட்டீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வினை விதைத்தவன் வினை அறுப்பான்
posted by Cnash (Makkah) [22 June 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5542

எங்களுக்கும் இதை பாக்கும்போது தாரை தாரையா கண்ணீர் வருது!! ஆனந்த கண்ணீர்!!!!

இப்டி எத்தனை நாள் கோயபுத்தூர் கலவரத்தில் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி மக்களை வருஷம் 12 உள்ள வச்சபோது அவங்க குடும்பமும் மக்களும் அழுது இருப்பாங்க!!! அவங்க ஒன்னும் உங்களை மாறி ஊரை அடிச்சி உளைலே போட்டுக்கிட்டு ஜெயிலுக்கு வர வில்லை ...அடுத்தவேளை ஒரு வயிறு கஞ்சிக்கு காசு இல்லாதவங்க உள்ளே இருந்தங்கா!!

இப்போ கூட நீர் செஞ்ச குற்றதை நெனச்சி வருந்தி அழுது இருந்தா அனுதாப படலாம்....ஆனா இப்போ ஆத்திரம் தான் வருது!

உப்பை திண்டவன் தண்ணி குடிச்சி தான் ஆவணும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நீதியை கொன்ற நிதி = கருணாநிதி
posted by Niyaz (Riyadh) [22 June 2011]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 5545

கருணாநிதியே ஊழல் பண்ணும் போது இனிக்கும் இப்ப கசக்குதோ நீழிகண்ணீர் வடித்து பிரயோஜனம் இல்லை. அனுபவி ராஜா அனுபவி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. KALAINJAR
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [22 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5551

யாராக இருந்தாலும் ஒருவர் கலங்கி நிற்கும் நேரத்தில் அவருக்கு ஆதரவாக இல்லாட்டாலும் பரவில்லை ஆனா இப்படி அவருடைய பழைய காலத்து தவறுகளை சுற்றி காட்டுவது தவறு. இன்னும் ஒருவர் இவரை கீழ்தனமாக காட்ட நினைத்து MGR அவர்களை AWLIYA லிஸ்ட்லே சேர்த்தது ரெம்ப ஜாஸ்தி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. புரிந்தும் புரியாமலும்!
posted by kavimagan kader (dubai) [22 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5555

ஒரு சில நண்பர்கள் யதார்த்த வார்த்தைகளை,மார்க்கத்தோடு இணைத்து தாங்களும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி, குட்டையில் மீன் பிடிக்க நினைக்கின்றார்கள்.

இறந்தும் வாழுகின்றார் என்பது,இன்னும் மக்கள் மனதில் நல்லவர் என்னும் தகுதியுடன் இருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள சாதாரண தமிழறிவே போதுமானது. மருத்துவர் காப்பாற்றினார் என்று சொன்னதும், மருத்துவரை அல்லாஹ் ஆக்கிவிட்டதாக கூறுமிவர்கள், கருத்தை கருத்தால் சந்திக்கமுடியாதவர்கள்.

சுகமாக இருக்கின்றீர்களா என்று கேட்டால் வெள்ளிக்கிழமை என்று பதில் சொல்பவர்கள் புரிந்தவர்களா? புரியாதவர்களா? புரிந்தும் புரியாதவர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. சாளை ஜியா காக்கா
posted by Kaleel (Chennai) [22 June 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 5557

சாளை ஜியா காக்கா , நான் பிறக்கும் முன்னாடி நடந்த சம்பவங்களை பதிவு செய்தமைக்கு நன்றி!!!

எப்படி இருந்த கலைஞர் இப்படி மாறிட்டார் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. உன்னே சொல்லி குற்றமில்லை ...உன் பெண்ணே சொல்லி குற்றமில்லை....
posted by Cnash (Makkah ) [23 June 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5564

உன்னே சொல்லி குற்றமில்லை ...உன் பெண்ணே சொல்லி குற்றமில்லை.... காலம் செய்ய கோலமடி...காங்கிரஸ் செய்த குற்றமடி................

அவர் அன்று அண்ணா மறைவுக்கு எழுதிய கவிதை ...இன்று அவருக்கே பொருத்தமா இருக்குது!!!

எம் அண்ணா..........................இதயமன்னா............................

உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?

கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் . . .
இன்று கம்பிக்குள் மூடிக்கொண்டு உன்னைப் பார்க்காமல்
தடுப்பாதென்ன கொடுமை
கொடுமைக்கு முடிவி கண்டாய், எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

அழுத பிள்ளை பால் குடிக்கும் அது பழமொழி ..இன்று அழுதவர் பிள்ளை கூழ் குடிக்குது

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ ..உங்க பேரன் தயாநிதியும் கொஞ்ச நாளில் உள்ளே போறமாறி தான் இருக்கார்.. அப்புறம் ஹோட்டல் சரவணா பவன் Branch திஹார்லே ஆரம்பிக்க சொல்லி மகள், பேரன், ராஜா, சரத், எல்லோருக்கும் full Meal ஆர்டர் கொடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. MGR ன் சிறப்பும் கருணாநிதியின் திறமையும்
posted by Nazeem (Chennai) [23 June 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5570

கவிமகன் அவர்களே, தங்கள் கருத்துக்களில் எம்.ஜி.ஆரை நல்லவர் போல் காட்டும் முயற்சி தெரிகிறது. கருணாநிதியை விட நல்லவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். இறந்தும் வாழ்கிறார் என்றெல்லாம் சிலாகிக்கும் அளவுக்கு அவர் உயர்ந்தவர் அல்ல (மனங்களில் வாழ்கிறார் என்று எடுத்துக் கொண்டால் கூட). அவருடைய ரசிகர்கள் அல்லது அறியாதவர்கள் அவ்வாறு கூறலாம் ஆனால் உங்களைப் போன்றோரிடம் இருந்து இப்படி கருத்து வருவது சரியல்ல.

சாளை ஜியா: கனிமொழி பிறந்த போது கருணாநிதி உள்ளாட்சி அமைச்சர் என்றும் அண்ணா கண்டித்ததால் ஒத்து கொண்டதாகவும் கேள்விபட்டதாக நினைவு. முதல்வராக இருந்திருந்தால் இந்த செய்தி வெளியே வந்திருக்காதே? கருணாநிதியின் திறமையை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் :)

செம்மொழி, கனிமொழி - Good one


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ஜெயா எழுதிய லெட்டர்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [23 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5573

அன்று எம் ஜி ஆர் அவர்கள் அமெரிக்கவில் மிக மோசமான நிலையில் இருந்த பொது, ஜெயா தான் எம் ஜி ஆர் இனி திரும்பி வரமாற்றார், உடனே, என்னை முதல்அமைசராக்குங்கள் என்று அன்றைய பிரதமருக்கு லெட்டர் எழுதியதையும் நாங்கள் இன்னும் மறக்கவில்லை. சிலர் அதை மறந்து விட்டார்கள் போல் தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வரலாற்று உண்மை!
posted by kavimagan kader (dubai) [23 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5577

அன்பு சகோதரர் நஜீம் அவர்களே!

ஒரு காலத்தில், நானும் உங்களுடைய கருத்தில்தான் இருந்தேன். ஐந்தாண்டு காலம் துறைமுகப்பகுதி தி.மு.க. மாணவர் அணியில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றி கட்சிக்காக சிறைசென்ற காலங்களில் என்னைவிட அதிகம் MGR என்ற மாமனிதரை அதிகம் வெறுத்தவர் இருக்கமுடியாது. அதன் பின்னர் இரண்டாண்டு காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த சமயத்தில்தான் அவரது உண்மையான வரலாற்றை அறிந்துகொண்டேன். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஜெயா MGR பற்றி கடிதம் எழுதியதாக கருணாநிதியைத் தவிர வேறு யாரும் சொல்லவும் இல்லை. அப்படி ஒரு கடிதம் எழுதியதாக இவர் சொன்ன குற்றச்சாட்டை, பிரதமர் அலுவலகமே மறுத்துவிட்டதை சிலர் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை. அவர் வெளியிட்ட கடிதம் போலியானது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கிழித்து எடுத்ததை எப்படி மறக்க முடியும்?

அதுசரி! ஜெயா கடிதம் எழுதியதற்கும்,கருணாநிதி கண்ணீர் விட்டு அழுவதற்கும் என்ன சம்பந்தம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. காவிரி ஆறே கஞ்சியா ஆனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கனும். .
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [23 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5580

பழம் அதிகமா பழுத்தால் அழுகிவிடும்.. அதிலும் நீங்கள் பழுத்த பழம் அல்லவா ஊழலில் அதுனால் அழுது விட்டீர்களோ என்னவோ....

காவிரி ஆறே கஞ்சியா ஆனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கனும். அதிமாதிரி தான் யாராகா இருந்தாலும் தன் மகள் சிறையில் இருப்பதை பார்க்கும் பொழுது கண்களில் ஏற்படும் கண்ணீர் இயற்கையானதே..

இதை ஒரு செய்தியாக போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் தன் மகள் சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கைகளுக்கு “கனிமொழிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். சரத்குமார், சிறையில் பலவீனமாக காணப்பட்டார். கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர் “என்று ஒரு பேட்டி கொடுத்தீர்களே அதை தான் என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

இப்பொழுதுதான் உங்களுக்கு இது மனிதாபிமானமற்ற செயலாக தெரிகிறதா..?? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் என் சமுதாய சகோதரர்களை விசாரணை கைதிகளாகவே பல வருடம் வைத்தீர்களே அப்பாழுது அவர்கள் குடும்பம் வடித்த கண்ணீரை பார்க்கும் பொழுது உங்களுக்கு மனிதாபிமானமற்ற செயலாக தெரியவில்லையா..?

கடைசியா ஒன்னு சொல்றேன் “என்னதான் பத்து LIFE BOY சோப்பு குளிச்சாலும் காக்கை வெள்ளை ஆவாது அது மாதிரி தான் இனி நீங்க என்னதான் அழுது புரண்டாலும் இனி இந்த ஊர் உங்கள நம்பாது “.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [23 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5584

ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி, இலவச நாடகம் நடத்தி, அதே மக்களிடம் (இலவசம்) பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் மற்றும் மக்கள் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் எந்தப் பணத்தை நம்பிநீர்களோ அது தான் இன்று உங்கள் காலையும் மற்றும் கழக காலையும் வாரி விட்டு இருக்கிறது.

அன்புடன்.... ஐந்தாவது முறையாவது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த.. தமிழர். முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. சூரியனை பார்த்து நாய் குலைப்பது போல.....
posted by zubair (riyadh) [23 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5590

கருணாநிதி கண்கலங்கியது மகள் பாசம் மட்டுமல்ல... தான் தன் மகளை கலைஞர் டிவி க்கு சேர் சேர வற்புறுத்தியதால் தான்.... இன்று மகள் அனுபவிக்கிறாள் என்ற பொது குற்ற உணர்வால்தான். இது யாராக இருந்தாலும் ஏற்படுவது இயற்க்கை. கள்ள கேசுகளை கையாளுவதில் தி மு க விற்கு ஒன்றும் கடினமும், புதினமும் அல்ல. லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும் என்ற குண்டை இப்பம் தான் போட்டுள்ளது. மாட்டின் வாலில் தீ கொடுக்க பட்டுள்ளது தலை, வால் தெரியாமல் ஓட போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.

கோவை குண்டுவெடிப்பை ஒரு சிலர் செய்து விட்டு அரசாங்கத்தை (கருணாநிதியை) குறை கூறுகிறார்கள். நம் (பாவப்பட்ட) சகோதரர்கள் தான் தண்டிக்க படுவார்கள் என்பதும், தேச துரோகம் என்பதும் தெரியாதா இவர்களுக்கு... இதில் குளிர் காய்ந்தவர்கள் யார் என்பது கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு இப்பம் சரியாக வரும்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. கவனம்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [23 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5592

சகோ.முத்து இஸ்மாயில் அவர்களே,

ஐயா அவர்கள் ஐந்து முறை முதல்வராக இருந்து முடித்து விட்டார்களே. பழைய நியூஸ் பேப்பரை எடுத்து படித்த மாதிரி இருந்தது உங்களின் பதிவு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. அன்பு சகோதரர்களே!
posted by kavimagan kader (dubai) [23 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5594

நண்பர்களே! செய்தியோடு தொடர்புடைய ஆரோக்கியமான விவாதத்தைத் தொடர்வதில் தவறில்லை! அதற்காக நம்மை நாமே காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை!

கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லை வீசினால் நஷ்டம் நமக்குத்தான். நாம் விவாதிப்பது, நாட்டு நடப்பை அலசுவதன் மூலம், பரஸ்பரம் ஒரு புரிதலை ஏற்படுத்த மாத்திரமே! இதில் வெற்றி, தோல்வி என்று ஏதும் இல்லை.

ஏற்கனவே அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும், பல்வேறு பிற்போக்கு சக்திகளாலும் திட்டமிட்டு நம்மீது நடத்தப்படும் இட்டுக்கட்டப்பட்ட பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நாம் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்.

நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்பதையும், ஒரேமண்ணின் மைந்தர்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved