மார்க்க விஷயங்களில் கருத்துக்கள் posted byJaved Nazeem (Chennai)[05 July 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 5765
சகோதரர் இப்ராஹிம் இப்னு நௌஷாத், உங்கள் தனிப்பட்ட கருத்திற்கான பதில் பதிவு இது.
சில மார்க்க விஷயங்களில் பல்வேறு கருத்துக்கள் நிலவ வாய்ப்பு உள்ளது. யதார்த்தமாக ஒருவர் கூறும் கருத்து கூட தவறாக புரிந்து கொள்ளப் பட்டு, சர்ச்சைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். இத்தகைய சூழ்நிலையில் இது போன்ற தளங்களில் அமைதி காப்பது நல்லது.
கருத்துப் பரிமாற்றங்கள் தேவை தானே என்பது நியாயமான கேள்வி. ஆனால் அவற்றில் ஈடு பட சில தன்மைகள் வேண்டும் என எண்ணுகிறேன். நேரமிருந்தால் மேலே படியுங்கள்.
ஈசா நபியுடைய படைப்பில் இரண்டு நேர் எதிர் கருத்துக்கள் தோன்றின. அவரவர் சிந்தனையோட்டம் மற்றும் ஆளுமை கொண்டு, தவறானது என்றும் தெய்வ குழந்தை என்றும் தீவிரமான கருத்துக்களை பரப்பினார்கள். உண்மையை உணர விரும்புவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
1. விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகி இருக்க வேண்டும்.
2. உண்மையை உணர இறை பொருத்தத்தை மனதிற் கொண்டு முயற்சி செய்திருக்க வேண்டும்
3. உண்மை தெரியாமலே தீவிரமான கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும், பரப்புவதும் இறைவனிடம் தண்டனையை பெற்றுத் தரும் என்ற எண்ணத்தில் செயல் பட்டிருக்க வேண்டும்
இன்னும் ஆழமாக சிந்தித்தோமானால் ஈசா நபியின் படைப்பு மனிதனுக்கு வைக்கப்பட்ட ஒரு சோதனை என்பதை புரிந்து கொள்ள முடியும். நாம் முஸ்லிமாக இருப்பதால் ஈசா நபி விஷயத்தில் தெளிவான நிலையை அறிந்திருக்கிறோம்.
அதே நேரத்தில், இன்னும் தெளிவில்லாதது போல் தோற்றம் அளிக்கும் சில விஷயங்களையும் நாம் காணலாம். பிறை முடிவு செய்வதை கூட எடுத்துக் கொள்ளலாம். இது போன்று தெளிவற்று காட்சி அளிப்பவை நமக்கு வைக்கப்படும் பரிசோதனைகள் தான் என்பது உணரப்படாமல், பிரச்சினைக்குரிய கருவிகளாக மாற்றப்படுகின்றன.
இது போன்ற விஷயங்களில் நான் மேலே சொன்ன தன்மைகளை அடிப்படையாக வைத்து விவாதிக்க முன் வரலாம். ஆனால் இத்தகைய தன்மைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross