செய்தி: சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011: படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள்! இறுதியில் நீங்களே வெல்லுங்கள்!! கலந்துரையாடலின்போது மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா கருத்து!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சமூக otthulaippu posted byvsm ali (kangxi, Jiangmen , China)[07 July 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 5813
சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியில் எமதூர் மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தளித்த சகோதரி ரேகா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
தாயின் அக்கறை , டியூசன் இல்லாத படிப்பு , நண்பர்கள் வட்டத்தை குறைத்துக்கொல்லுதல் , இவைகள் தவிர " சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாணவர்கள் பரீட்சைக்கு படிக்கும் நேரத்தில் , பொது நிகழ்ச்சிகளுக்காக தெருவெல்லாம் ஒலி பெருக்கி வைத்து அவர்களின் கவனத்தை சிதறடிப்பது நியாயமா ? சென்ற முறை நான் ஊர் வந்தபோது + 2 மாணவர்களுக்கான model exam நடந்து கொண்டிருந்த சமயம்.. எனது தெருவாசி ஒருவர் , அவர் தலைமையில் நடக்கும் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு donation கேட்டார். நானோ , நீங்கள் ஒலி பெருக்கிகளை உங்கள் compound உள்ளேயே வைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள். வேண்டுமானால் , cable TV காரர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் ஊர் முழுவதும் ஒலிபரப்பு செய்வார்களே என்றேன். அதற்க்கான செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். ஆனால் அவரோ , தன்னுடைய கொள்கையில் இருந்து சற்றும் மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டார். காலங்கள் மாற , மாற நாமும் சற்று மாறினால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை . இனிமேலாவது , சமூகம் மாணவர்களின் படிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross