அதனதன் வேலை! posted bykavimagan (dubai)[09 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5846
அன்பு சகோதரர் நவாஸ் அவர்களே!
பூரணமாக தடை செய்யப்பட காரியங்களை, தடையில்லா
செயல்களோடு ஒப்புமைப்படுத்துவது தவறு என்று தங்களுக்கு
தோன்ற வில்லையா? வறியவர்களின் கண்ணீர் துடைக்கப்பட
வேண்டும் என்ற தங்களது கருத்திலிருந்து நான் கிஞ்சிற்றும்
மாறுபடவில்லை.அதற்கான களப்பணி ஆற்றுவதற்கெனவே
வெளிநாட்டு மன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை
தனது பணியை திறம்படச் செய்து வருகிறது.
உதாரணத்திற்காக, USC , KSC போன்ற அமைப்புகள்,
விளையாட்டில் நம்மவர்கள் திறனை வளர்ப்பதற்காக
உண்டாக்கப்பட்ட அமைப்புகள்.அவர்களிடம் போய், ஏன்
செலவு செய்து போட்டி எல்லாம் நடத்துகின்றீர்கள்? அதற்கு
செய்யும் செலவை ஏழைக்குமர்களுக்காக செய்யலாமே என்று
சொன்னால் அது நியாயமான வாதமாகுமா?
ஒவ்வொரு அமைப்புக்கும் வேறுபட்ட சமூக நோக்கங்கள்
இருக்கிறது.அவைகள் தத்தம் பணியினை திறம்பட செய்கிறதா? அப்படி செய்வது மார்க்கத்திற்கு எதிரானதா?
என்பதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அறிஞர்கள் கூடும் இடத்தில் எளிமை வேண்டும் என்பது
உண்மைதான்.அதே நேரத்தில் அது மக்களை சென்றடைய
செலவு செய்வது அத்தியாவசியமானது.
அழைப்பதற்கு விளம்பரமும்,வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து நம் தாயகத்திற்கு வருபவர்களை
வரவேற்கும் வளைவுகளும்,வெயில் தெரியாத பந்தலும்,
இருப்பதற்கு இருக்கைகளும்,நிகழ்வுகளின் செய்திகள் உலகம்
முழுவதும் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களை சென்று
அடைவதற்கான ஊடக கேந்திரங்கள் இதற்கான செலவு
எல்லாம், மது வட்டி போண்டவற்றோடு ஒப்புமைப்படுத்த
எப்படி மனம் வந்தது உங்களுக்கு?
தினமணி படிப்பது என்பது வேறு! பாடப்புத்தகம் என்பது வேறு! எல்லாவற்றையும் போட்டுக்குழப்பினால் குழப்பம்தான்
மிஞ்சும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross