முறையான,முழுமையான காப்பீட்டுத்திட்டம்.... posted bykavimagan (dubai)[12 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5925
முதலில் பதிவு செய்ய வேண்டிய விஷயம், இஷ்டம் போல
சலுகைகளை அறிவித்துவிட்டு 2G யிலும், 3G யிலும் கைவைக்க ஜெயலலிதா ஒன்றும்,கருனாநிதியைப்போல
நிர்வாகத்திறன் அற்றவர் அல்ல.கடந்த இரண்டுமுறை
ஆட்சியைவிட்டு அகற்றப்படும்போது, அரசுகஜானாவில்
கொஞ்சமேனும் பணத்தை மிச்சம் வைத்துவிட்டு சென்றவர்
ஜெயலலிதா.ஆனால்,இரண்டுமுறை ஆட்சியை இழந்தபோது
பல லட்சம் கோடிகளுக்கு தமிழக மக்களை கடனாளியாக்கி
சென்றவர் கருணாநிதி.
ஏற்கனவே இருந்த கலைஞர் காப்பீட்டுத்திட்டம் கருணாவிற்கு
வேண்டிய தனியார் மருத்துவமனைகள் வளம்பெறுவதற்காக
திட்டமிடப்பட்ட சதி.தற்போதைய திட்டமோ,அரசு மருத்துவ
மனைகள் மேம்பாடு அடைவதோடு,பச்சிளம்குழந்தை முதல்
முதியவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள்வரை அனைவரும்
பயன்பெற ஏதுவாக அமைக்கப்பட்ட மக்கள்நலத் திட்டம்.
இதன் முழுவிவரமும் அனைத்து பத்திரிகைகளிலும் இன்று
வெளியாகி இருக்கிறது.இந்தக்கருத்து விவாதம் ஒருவேளை
தொடருமேயானால், இன்னும் ஆழமாகச்சென்று, விளக்கமாக
எழுத வேண்டியது வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross