முகவரி இழந்தவர்கள்! posted bykavimagan m.s.abdul kader (dubai)[12 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5929
மொழியை இழந்தவன் தன் சொந்த முகவரியை இழந்தவன் என்பது நமக்கு வரலாறு கற்றுத்தரும் பாடம். அதனால்தான் நமது முன்னோர்கள் " இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி " என்ற பொன்மொழியை முன்னிறுத்தி, கல்வி,வணிகம்,
மருத்துவம், சமூகனலத் திட்டங்கள், மார்க்க ஞானக்கல்வி இவற்றோடு இணைந்து மொழி மற்றும் அதுசார்ந்த கலாச்சார வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டினர்.
நுனிப்புல் மேய்பவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு என்பது அகிலம் முழுதும் வாழ்கின்ற தமிழ் பேசும் முஸ்லிம்களது ஒன்றிணைந்த மாநாடு. இது ஒன்றும் தனிப்பட்ட காயல்பட்டணத்தின் வளர்ச்சிக்கான
மாநாடு கிடையாது. அதே நேரத்தில் இந்த மாநாடு வெற்றிபெற முழுமையாக உழைத்து ஒத்துழைத்தவர்கள் யார் யார் தெரியுமா?
நகர வாலிபர்கள்...
தொழில் துவங்க உதவி செய்து விளம்பரம் தேடாதவர்கள்...
மருத்துவம் பார்க்க முடியாத பலருக்கு அறுவை சிகிச்சை வரையிலான செலவிற்காக, அல்லாஹ் ரசூலுக்கு அஞ்சி இன்றளவும் உதவி புரிந்து வரும் அதே நேரத்தில் தம்பட்டம் அடிக்காதவர்கள்.
கிட்டத்தட்ட இருநூறு காயல் மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்ட முன்மாதிரி மனிதர்கள்.
இக்ராவை உருவாக்கி, அதன் செயல்பாடுகளில் இன்றளவும் இரத்தமாக, இதயமாக விளங்குபவர்கள்.
இறை இல்லக் கொடையாளிகள்.
தமிழ் தெரியாத காந்திதாத்தாவை நேசிக்கும் தேசாபிமானிகள்.
இந்து அறநிலையத் துறை மந்திரி வரவில்லையே என்று கவலைப்படாத இஸ்லாமிய இலக்கியவாதிகள்.
1978 ஆம் ஆண்டு காயலில் மாபெரும் மாநாட்டை நடத்தி, இஸ்லாமிய இலக்கிய நூற்கள் பலவற்றை, பல்கலைக் கழக பாடங்களில் இடம்பெறச் செய்தவர்கள்.
நமது ஊரின் புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து போர்டு அலுவலகம், பொது நூலகம், மற்றும் மக்கள் நலம்பேணும் பல்வேறு திட்டங்களுக்காக சொந்த நிலத்தை தானம் வழங்கியவர்கள்.
தமிழ் இலக்கியத்தால் பல்லாயிரக் கணக்கானோரை இஸ்லாத்தின்பால் ஈர்த்திட்ட நமது மண்ணுக்கே மணம் சேர்த்த ஞானமாமணிகள்
செயகுனாப்புலவர்,
வரகவி காசிம்புலவர்,
நூஹு வலியுல்லாஹ்,
உமர் வலி நாயகம்,
மாமேதை ஷாம் சிஹாப்தீன் வலியுல்லாஹ்
இன்னும் இஸ்லாத்திற்காக இன்னுயிர்நீத்த கண்மணிகளை நேசிக்கத் தெரிந்தவர்கள்.
தமிழ் இலக்கியத்தின் மூலம் மத நல்லிணக்கம் வளர்ப்பவர்கள்.
இந்த மாநாடு, காயல்பட்டனத்து மக்களை, தாய்மொழியை நேசிக்கின்ற மக்களாக உலகத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. பல்வேறு துறையில் சேவையாற்றிய
பெருமக்களுக்கு, விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.
பல்வேறு சமூக அமைப்புகள் பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி சேவையாற்றி வருகிறது. அதில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விளையாட்டு, சமூக நலத்திட்டங்கள் என்பனபோன்று.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், தமிழ் இலக்கிய வளர்ச்சி, ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் சமுதாயம் காண்பது. அது இறைவனருளால் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.
இந்த மாநாடு நடக்கவில்லையெனில், காயலின் அனைத்து பிரச்சனையும் ஏகநேரத்தில் தீர்ந்துவிடும் என நம்புகின்றவர்கள் மாத்திரமே, எதிர் கருத்தை விதைப்பவர்கள். இந்த
மாநாடு வெற்றிபெற உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும், எல்லாம் வல்ல இறைவன் தன் மேலான அருளைப் பொழிந்திட,உலகெங்கிலும் இருந்து துஆ செய்யும் இலட்சக்
கணக்கானோருடன் என்னிரு கரத்தினையும் இணைக்கின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross