வரலாற்றை மறுப்பவர் ? posted bykavimagan (dubai)[13 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5955
சகோதரர் CNASH அவர்களது கருத்து ஓர் ஆரோக்கியமான
விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது. முதலில்,பலநூறு
கோடி மக்கள் பணத்தில், தகுதியுள்ள பல தமிழர்களை
அழைக்காமல்,தமிழ் செம்மொழி ஆகுதற்காக பாடுபட்ட
அறிஞர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டு, தனது
ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையில்,தன்னை
புகழ்வதற்கென்றே கவியரங்கமும் ,பாட்டரங்கமும்
நடத்தப்பட்ட,கனிமொழி விழாவைத்தான், எல்லோரும்
எதிர்த்தார்களேயன்றி, செம்மொழிக்கு ஏற்படும் அருமை,
பெருமைகளை யாரும் எதிர்க்கவில்லை.ஆக,பொருந்தாத
உவமையுடன் துவங்கிய நண்பரின் வாதம்,தொடர்ந்து
தவறான திசையிலேயே பயணித்து, இஸ்லாம் வளர
இலக்கியம்,மொழி ஆகியன ஒரு காரணியாக இருக்கவில்லை
என்ற தவறான தகவலுடன் தடம் புரண்டு நிற்கிறது.
அடுத்து மாற்றுமத அறிஞர்களை நோக்கி திரும்புகின்ற அவரது
பேனா,தாழ்த்தப்பட்டவர்களையும்,ஒடுக்கப்பட்டவர்களையும்
இஸ்லாத்தின்பால் சுண்டி இழுத்த சர்.பி.டி.தியாகராயர்,
சவுந்திரபாண்டியனார்,தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,
முத்தமிழறிஞர் கலைஞர்,வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்,
பேராசிரியர் பெரியார் தாசன் ( தற்போது அப்துல்லாஹ் ),
இன்னும் ஏராளமான பெருமக்கள், இனவிடுதலைக்கு இஸ்லாம்
ஒன்றே வழி என்று எழுதியதையும், முழங்கியதையும் அதன்
மூலம் ஆயிரக்கணக்கான தலித் இளைஞர்கள் சத்தியத்தை
உணர்ந்து விடுதலை பெற்ற வரலாற்றை அறிந்திருக்கவில்லை.
அடுத்து இந்தமாநாட்டில், ஆயிரக்கணக்கான இறை வசனங்கள்
மற்றும் நபிமொழிகள் மேற்கோள் காட்டப்பட்டதை,அறிந்தே
குற்றம் சாட்டுகின்றாரா? அல்லது,அறியாமல் ஆத்திரப்படுகின்றாரா
என்பதை சகோதரர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
தொடர்ந்து சீறாப்புராணத்தையும் அதன் ஆசிரியரையும்,எடுத்தேன்
கவிழ்த்தேன் என்ற ரீதியில் விமர்சிக்கத்துவங்குகிற நண்பர்,தனக்கு
வசதியாக முன்னுரையை மறந்து விடுகின்றார். சற்று விளக்கமாக
காண்பது இங்கே அவசியம் ஆகிறது.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என்ற ஐவகை நிலங்களாக
இந்தப் பூமிப்பந்து பிரிக்கப்பட்டதற்கான காரணமே, நிலத்தின் அடிப்படையில்
மனிதனின் வாழ்க்கை முறையும்,கலாச்சார பழக்கவழக்கங்களும்தான்.
ரசூல் நபி ( ஸல் ) அவர்கள் பிறந்து,வாழ்ந்து இப்போதும் மரணத்திற்குப்பின்
பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பது பாலைநிலவெளியில்.ஆக,
பாலை நிலத்தில் நிகழ்ந்த ஒருவரது வாழ்க்கையை,முல்லை மற்றும்
மருதம் நிலத்தில் வாழும்,பலகடவுளை வணங்கும் மக்களுக்கு அறிமுகப்படுத்த,
ரசூலையும் இஸ்லாத்தையும் அவர்கள் எளிமையாக விளங்கிக்கொள்ளும்
வகையில், பாலை நில முறையில் இருந்து,முல்லை மற்றும் மருத
நிலத்திற்கேற்றார்போல்,புதிய கலாச்சாரவடிவில், ஏக இறையை முற்றிலும்
மறுத்தவர்கள் நெஞ்சத்தில் , இனிப்பு சேர்த்த மருந்து போல,ஏகத்துவத்தை
உணர்த்துவதற்காக அவர் செய்த உபாயம் என்று அவரே ஒத்துக்கொள்கிற
ஒரு விஷயம், இஸ்லாத்திற்கு எதிரானது என்று முடிவு செய்ய நாம் யார்?
தூய்மை,நேர்மை,இறைபக்தியால் வாழ்ந்த முன்னோர்களின் தியாகத்தால்
மார்க்கம் பரவியது. அதை அதிக அளவில் மக்களிடம் எடுத்துச்சென்றது
எது ? அன்றைய கவிதைகள்,பாடல்கள்,இலக்கியப்பதிவுகள் இல்லாமல்
வேறேது ? பன்முகத்தன்மையுடன் வாழும் ஒருநாட்டின் இறையாண்மை,
ஒற்றுமை உணர்வு, தேசப்பற்று பாதுகாக்கப்பட, மொழி மற்றும் அதன்
தொன்மையான கலாச்சார அடையாளங்கள் மற்றும் இலக்கிய பரிமாற்றங்கள்
அவசியம் இல்லையா? ஒன்றுபட்ட சமூகம் உருவாக இஸ்லாம் வலியுறுத்த
வில்லையா ? சாம் வலி நாயகத்தின் இலக்கியத்தின் தாக்கம் கேரளத்தின்
எல்லைவரை இஸ்லாத்தை எடுத்து சென்றது வரலாறு இல்லையா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross