புரிந்துகொள்வோம்! posted bySK Salih (Kayalpatnam)[13 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5959
இப்பகுதியில் கருத்து தெரிவிக்கும் வெகுசிலர், மனதில் ஏற்கனவே ஒரு கருத்தை ஆழ விதைத்து வைத்துக்கொண்டு உரையாடுவதாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த சின்ன அம்சத்தைக் கூட அவர்கள் புரிந்துகொள்ள ஆயத்தமாக இல்லை.
கஸ்வாவின் இந்த பாராட்டு நிகழ்ச்சி விழாவாக நடத்தப்பட்டதல்ல...
இதற்கென அழைப்பிதழ் அடிக்கவில்லை... பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வினியோகிக்கப்படவில்லை... சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை...
எல்.கே.மேனிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் நகரளவில் முதலிடம் பெற்றுள்ளதால், அப்பள்ளியின் அனுதினமும் நடத்தப்படும் மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ப்ளி) நிகழ்த்தப்பட்ட ஒரு சிறு இணைப்பு மட்டுமே இது!
இது கஸ்வா அமைப்பினரால் ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது என்பதை, நான் கண்ணால் கண்ட பின்புதான் புரிந்துகொள்வேன் என்று எண்ணினால், ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் மற்ற பள்ளி மாணவ-மாணவியர் முதலிடம் வந்தபோது, இதுபோன்று அவ்வமைப்பினர் பரிசு வழங்கிய விபரங்களைக் கேட்டறிந்துகொள்ளலாம்.
ஒரு பைசா செலவின்றி நடைபெறும் இந்நிகழ்ச்சியை, அனைவருடனும் சேர்ந்து, செலவழித்து பிரம்மாண்டமாய் நடத்துவது என்பதை அவர்களுக்கு ஆலோசனையாக வைக்கலாமே தவிர, Useful, Useless என்றெல்லாம் விமர்சிக்கும் உரிமையை நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதே என் கருத்து!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross