Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ... posted bykavimagan (dubai)[13 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5970
அன்புநண்பர் CNASH அவர்களுக்கு!
அறிவுபூர்வமாக அதேநேரத்தில் நிதானமாக, தெளிவாக விவாதிக்கும் தங்களது ஆற்றலுக்கு எனது பாராட்டுக்கள்! உங்களுடன் தொடர்ந்து விவாதிப்பதால், எனக்கும் நேயர்களுக்கும் நல்லபல செய்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றேன்.
மனிதனை, மனிதன் அறிந்துகொள்வதற்காக பல மொழிகளை இறைவன் படைத்தான் என்பதுதான் என்னுடைய கருத்தும். நீங்கள் கருதுவது போல யாருக்கும் புரியாமல் எழுதுவதுதான் இலக்கியம் என்பது தவறு.
மொழியின் பதிவு செய்யப்படுகின்ற பல்வேறு வடிவங்கள்தான்
இலக்கியம். அது பேச்சாகவோ, எழுத்தாகவோ, கவிதையாகவோ,
தாலாட்டாகவோ, இன்னும் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும்
இருக்கலாம்.
பெரியார் முதல் வீரமணி வரை வெறும் வாய்ச்சொல்லில்தான்
முழங்குகிறார்கள் என்னும் நீங்கள், அவர்களின் உள்மனதை எப்படி
அறிந்து கொண்டீர்கள்? இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்கு, அவர்கள் ஒன்றும் தேர்தல் அரசியல் நடத்த வில்லையே! தேர்தலில் பங்குபெறாத சமூக இயக்கம் திராவிடர் கழகம்.
சீறாப்புராணம் பற்றிய தங்களது அனைத்து விமர்சனங்களுக்கும்
ஏற்கனவே எழுதிய எனது கருத்தில் பதில் இருக்கிறது. அதில் நிலவெளி மாற்றமும், கலாச்சார மருவலும் இருப்பதை அதன் ஆசிரியரே ஒத்துக்கொண்டு அதற்கான காரணமும் விளக்கப்பட்டபின்னரும் மா, பலா, வாழை மதீனாவில்
எங்கிருந்து வந்தது என்று கேட்டால் அது அர்த்தமுள்ள கேள்வியாகுமா?
இலக்கிய மாநாடு குறித்து துவங்கிய வாதத்தை மிக சாமர்த்தியமாக சீறாப்புராணத்தை நோக்கி திருப்பி இருக்கின்றீர்கள். உங்கள் விவாதப்படியே, பலவீனமான சில விஷயங்களால் பலமானது எல்லாம் அடிபட்டு போகுமா?
சீறாப்புராணம் தவறு என்றே இருக்கட்டும். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியமும் இஸ்லாத்திற்கு எதிராக திரும்பி விடுமா?
நீங்கள் குறிப்பிடுவது போன்று நல்லபல நூல்கள், உண்மையான வரலாறுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதுதானே இந்த மாநாட்டின் முக்கிய தீர்மானம்.
நிறைவாக நான் சொல்ல வருவது, அல்லவைகளை
சுட்டிக்காட்டுங்கள். நல்லவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு பெரிய குறிக்கோளை நோக்கி பயணிக்கும்போது, பாதையில் ஏற்படும் கசப்புகளை மறந்து, அந்த இடத்தை அடையும்போது கிடைக்கும் நன்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பூதக்கண்ணாடி கொண்டு, எதிர்மறையாகப் பார்த்தால் எல்லாமே தவறாகத்தான் தோன்றும். நன்றி நண்பரே!
இந்த நிமிடம் மற்றொரு நண்பரது கருதுப்பதிவையும் பார்க்கிறேன். மிகவும் குறைந்த செலவில், அதிகபட்ச விளம்பரம் இல்லாமல், சாப்பாடு விருந்து என்ற தடபுடல் விருந்து இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்த ஒரு இலக்கிய மாநாட்டை குறைகூறுபவர்கள், லைட், பந்தல், இருக்கை, கலந்துகொள்பவர்களுக்கு தேநீர், ஒலிபெருக்கி, அழைப்பிதழ், இனிப்பு, பண்டம் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டு விழாக்களையும் எளிமையாக நடத்துவார்கள் என்று எண்ணுகிறேன். அதற்கு ஆகும் செலவினை சமூக நல காரியங்களுக்கு ஒப்படைத்து விடுவார்கள் என்றும் நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross