Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்... posted byvsm ali (kangxi, Jiangmen , China)[15 July 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 6008
நண்பர் ibrahim ibn nowshad ,
இந்த திட்டம் இன்றோ நேற்றோ முடிவு செய்யப்பட்டு , உடனே நடைமுறை படுத்தியது அல்ல. சென்ற ஆட்சியில் புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டு , இப்போது நடைமுறை படுத்தும் திட்டமாக கூட இருக்கலாம். இது ஒருபுறம் இருக்க , அரசின் எந்த ஒரு திட்டமும் , நடைமுறைக்கு வரும்போது , இதற்கு வரும் பணம் ஹலாலா , ஹராமா என்றெல்லாம் , சாதாரண குடிமக்களாகிய நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இன்றைய சூழ்நிலையில் , நம் இந்திய குடிமக்கள் அனைவரும் அரசுக்கு கடன்காரர்களே ! நமக்காக , நம் மத்திய அரசு , மாநில அரசு , பல்வேறு திட்டங்களுக்காக , உலக வங்கி மற்றும் பல இடங்களில் இருந்தும் கடனாக பல கோடி ரூபாய்களை கடனாக பெற்றிருக்கிறது . அதுபோல நாமும் பல நாடுகளுக்கு கடனாக கொடுத்திருக்கிறோம். இதற்க்கெல்லாம் , பல கோடி ரூபாய்களை வட்டியாக கொடுக்கிறோம் , வட்டியாக வாங்குகிறோம். அரசுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் வருகிறது . தயாரிப்பு பொருட்களின் மீது வரி , வருமான வரி , சொத்து வரி , கடன் கொடுத்ததின் பேரில் வரும் வட்டி , இது போன்று பல. இதையெல்லாம் வைத்துதான் அரசு ஊழியருக்கு சம்பளம், மற்றும் குடி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் , அரசு தரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெரும் நீங்கள் ஹலாலானவரா அல்லது ஹராமானவரா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross