இன்றைய நவீன விஞ்ஞான உலகம் கிப்லா திசையினை மிகத்துல்லியமாக அறியும் அறிவை பெற்றிருப்பதை அறிந்து நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆம் ! ஆனால் இந்த அறிவுகளை நமது அரபிக்கல்லூரிகளில் (மௌலவி ஆலிம் ) கோர்ஸ்களில் பாடத்திட்டங்களில் வைத்துள்ளார்கள். அதனை (பன்னுல்மீகாத்) என்று சொல்லப்படும். அதனை கற்று தேர்ச்சி பெற்றவர்கள் தான் பிறகு "கிப்லா ஹழ்ரத்" என அறியப்பட்டார்கள்.
இந்த அறிவுக்கு "இல்முல் கஸ்பி" என சொல்லப்படும். அதாவது கற்றுத தேர்வதாகும்.இதனையே அல்லாஹ் சில தனது நல்லடியார்களுக்கு தனது வெகுமதியாக அளிக்கிறான். அதனை "இல்முல் லதுன்னி" என அறியப்படும். அதாவது இறைவனால் மனிதனின் எந்த முயற்சியும் இல்லாமல் முழுக்க, முழுக்க இறை நன்கொடையாகவே வழங்கப்படும். இதற்கு நமது மார்க்கத்தில் எத்தனையோ ஆதாரங்கள் உள்ளது.
எடுத்துக்காட்டுக்காக ஒன்றை சொல்லலாம். நமதூரில் மறைந்து வாழும் மகான் "அஸ்ஸைக் சுலைமான் ஒலியுல்லாஹ் (ரலி ) அவர்கள் தனது மகனான "அஸ்ஸைக் சதக்கத்துல்லாஹ்" (ரலி) அவர்களை நமதூரில் "ஐனுல் கிப்லா" அதாவது புனித கஹ்பாவுக்கு மிகத்துல்லியமாக அமைக்கப்பட்ட பள்ளி என புகழ்பெற்ற "கடைப்பள்ளியில்" கிப்லா வைப்பதற்காக தனது மகனை வைத்தே அப்பள்ளியின் கிப்லா திசையை மிகச்சரியாக கணக்கிட்டார்கள் என்பது காயலின் சரித்திரத் சான்றாகும்.
ஆகவே விஞ்ஞானத்தையும் மிஞ்சும் மெஞ்ஞானமே! நமது சன்மார்க்க அறிவு பெட்டகம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross