Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ... posted bykavimagan (dubai)[16 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6024
அன்புச் சகோதரர்கள் CNASH ,சித்தீக்,முத்துவாப்பா மற்றும் இவ்விவாதத்தில் பங்குகொண்டோர் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும்!
இந்தவிவாதம் இதுபோன்ற மாநாடுகள் தேவையா என்ற கேள்வியுடன் சகோதரர் சாளை நவாஸ் அவர்களால் துவக்கப்பட்டு, சீறாப்புராணம் தேவையா என்ற இன்னொரு தலைப்புக்குள் CNASH அவர்களால் திருப்பி விடப்பட்டு மிகநீண்ட விவாதம் நடந்து முடிந்திருக்கின்றது.
CNASH அவர்களது சீறாப்புராணம் குறித்த கேள்விகளுக்கு, நம்மிடம் தகுந்த பதில் இல்லை அல்லது அது குறித்த சரியான ஞானம் இல்லை என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதுமில்லை. காரணம் விவாதம் என்பது உண்மை நிலைகளை புரிந்து ஏற்றுக்கொள்ளத்தானே அன்றி, வீண் விவாதம் செய்து வெற்றி பெறுவதற்காக அல்ல!
அதே நேரத்தில், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, ஒருவேளை ஒரு சீறாப்புராணத்தில் தவறு இருப்பதால் ஒட்டுமொத்த இஸ்லாமிய இலக்கியங்களும் தவறு ஆகிவிடாது. இலக்கிய மாநாடுகள் நடத்துவது தவறு இல்லை என்றும் பொய்யில்லாத, இனைவைக்கப்படாத கவிதைகள் இரசூல் நபியின் அங்கீகாரம் பெற்றதுதான் என்பதனை CNASH (இயற்பெயர்
தெரிந்தால் இன்னும் நல்லது) அவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.
மற்றபடி வீண்செலவு, ஆடம்பரம் அப்படி இப்படி என்று எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுவிட்டது. இஸ்லாம் வளர்வதற்கு அதன் தூய கொள்கைகள்தான் காரணம் என்றாலும் அதை மக்கள் மத்தியில் பரப்பி, முழுமையான வெற்றியைத் தேடித் தந்ததில் மொழி இலக்கியங்களின் பங்களிப்பு மகத்தானது.
நல்லவற்றை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம்! நண்பரின்
சீறாப்புராணம் குறித்த கருத்துக்களை நான் இப்போதுதான் ஆய்வு செய்யத் துவங்கி இருக்கிறேன். இன்ஷாஅல்லாஹ், இதே வலைதளத்தில் இதுகுறித்த விரிவான கட்டுரை ஒன்றும் எழுதவிருக்கிறேன். அட்மின் அவர்கள் அனுமதித்தால்.
இந்த விவாதத்தில் எனது கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross