கவலை மட்டுமே மிஞ்சுகிறது posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[16 July 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6048
வழமை போல நல்ல கலக்கலாக நடத்துங்க...அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
பெற்றோர்களே, இந்த வெளிநாடு வாழ் பிள்ளைகளை வீட்டிலே அடைத்து, கேம்ஸ் விளையாட சொல்லாமல், வெளியில் அனுப்பி விளையாட சொல்லுங்கள். ஊர் பிள்ளைகளிடம் ஒன்றாக கலந்து விளையாட சொல்லுங்க. சொந்தங்கள், நண்பர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள்...
மாமா யார், மச்சான் யார், பெரியப்பா, சாச்சப்பா யார் என்றே தெரிவில்லை...அனைவர்களும் "அங்கிள்" தான்.
மாமி யார், சாச்சி யார்,பெறுமா யார்..ஊஹூம்... ஒன்றும் அறியவில்லை இந்த குழந்தைகள்..அனைவர்களும் ஆன்டி தான்...சில சமயம் கம்மாவை கூட 'ஓல்ட் ஆன்டி' என்று ஒரே போடாக போட்டு விடுகிறார்கள்.
ஆகவே பிள்ளைகளுக்கு நல்ல சுதந்திரம் கொடுத்து கண்காணிப்புடன் வெளியில் அனுப்புங்க... நன்றாக புழுதி மண்ணில் விளையாடட்டும், மாங்காய், ஐஸ், புளியங்காய் எல்லாம் சாப்பிட்டு பழகட்டும்..
இப்படி என் குடும்பத்து பையன் ஒருவன்,அவனுக்கு டஸ்ட் அலர்ஜி, கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரோ, தயிரோ சாப்பிட்டால் அவ்வளவுதான். இந்த பையன் நான் ஊரில் இருந்த சமயம் வந்த போது அவனை தினமும் புழுதி மணலில் விளையாட விட்டு விடுவேன்,ரோட்டில் வரும் ஐஸ், புளித்த மாங்காய் அது இது என்று அனைத்தையும் வாங்கி கொடுப்பேன். அவன் தாயாரோ லப்போ திப்போ என்று ஒரே குதி தான்.
என்ன ஆச்சு.. ஒரு நாள் மட்டும் தொண்டை கட்டியது..பின்பு அனைத்தும் போயிவிட்டது, ALL GONE , ஸல்லேகியா, குல்லு ரூஹ்...
எல்லாம் உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாமல், AC வீடு,AC பள்ளிக்கூடம் என்று வளர்ந்து, பிராய்லர் கோழி மாதிரி தான் இருக்கிறார்கள். அவர்களை நாட்டுக்கோழி, நாட்டு சேவல் மாதிரி மாத்துங்க..
அப்படி தான் என் தங்கை உடைய மகனை நான் மாத்தினேன்...ஊர் பசங்களை பார்த்து பயந்த அவன், தற்போது ஊர் பசங்க இவனை பார்த்து பயப்படுகிறார்கள்...
ஆனாலும் இவர்களுடைய இங்கிலீஷ் நம் பிள்ளைகளிடம் இல்லையே என்ற கவலை மட்டுமே மிஞ்சுகிறது, என்னிடம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross