Re:ரமழான் 1432: நோன்புக் கஞ்... posted byvsm ali (Kangxi, Jiangmen, China)[17 July 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 6064
எந்த ஒரு திட்டத்திற்கும் , அரசு கஜானாவில் இருந்துதான் பணம் எடுக்கப்படுகிறது. அரசுக்கு பல வகையில் வருவாய் வருகிறது. டாஸ்மாக்கில் வந்த பணம் இந்த திட்டத்திற்கு , சொத்து வருவாய் அந்த திட்டத்திற்கு என்று குறிப்பிட்டு செலவிடப்படுவதில்லை. அரிசிக்கான பணம் டாஸ்மாக்கில் கிடைத்த இலாபம் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை . தவறு என்று தெரிந்தால் திருத்திக்கொள்வது நல்லதுதான். அதற்காக அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் பணம் எப்படி வருகிறது என்று ஆராய்ந்துகொண்டிருந்தால் , நாம் எந்த ஒரு நலத்திட்டத்தையும் ஏற்கக்கூடாது . அரசின் ஹஜ் சர்வீஸ் மூலம் ஹஜ் செய்யக்கூடாது. அரசு வாகனங்களில் பயணிக்கக்கூடாது. அரசு பள்ளிகள் , கல்லூரிகளில் படிக்கக்கூடாது . ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக்கூடாது . அரசு போட்ட ரோடுகளில் நடப்பதே தவறு . நான் முன்பே சொன்ன மாதிரி , நாமெல்லாம் அரசுக்கு கடன் காரர்கள். ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் சில ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. Ibrahim Ibn Nowshad , நீங்கள் மரணம் எய்துவதற்கு முன் , அரசுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து விட்டு , நீங்கள் நல்ல ஒரு முஹ்மின் என்று உலகிற்கு பறைசாற்றுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross