செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்றோ கிடைத்து இருக்க வேண்டிய விருது இன்றே கிடைத்து இருக்கின்றது. அல்ஹம்து லில்லாஹ். பொதுநலத்தையே தன்னலமாக்கிய செம்மல் என்றும் விளம்பரம் தேடியதில்லை.
எல்லோரும் முதல்வர் என்று அழைத்தாலும், அவர்களோ நான் இந்த சபையின் ஒரு சன்மார்க்க கடைநிலை வூழியன் என்றே சபைநிகழ்ச்சிகள் அனைத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.
இந்த "சேவை செம்மல்" விருதைக் கூட சபை நிர்வாகிகள், அபிமானிகள், பொறுப்பாளர்கள்,ஆசிரியர்கள் மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டது நாள்தான் அதற்கு இசைந்தார்கள் என அறிகிறேன்.
1971 முதல் 2011 வரை தனது நாற்பது ஆண்டு காலத்தை இந்த சன்மார்க்கப் பணிக்கே அர்ப்பணம் செய்தவர்கள். காயல் நகரில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எத்திசை நோக்கினாலும் அங்கு ஒரு ஹாமிதியாவின் மாணவர் இருப்பார். அல்லது ஹாமிதியாவின் ஒரு ஹாபிள் இருப்பார் என்பது அதனை நிரூபிக்கும். இன்று நகரில் பல்வேறு மார்க்க மதரசா கூடங்கள் இருந்தாலும் அதற்கெல்லாம் முதலும், முன்னோடியான மதரசா ஹாமிதியா என்றால் அதற்கு வித்திட்டவர்கள் அவர்களே!
ஹாமிதியா பைதுஸ் சபா, ஹாமிதியா மார்க்கல்வி நிறுவனம், ஹாமிதியா குர்'ஆன் ஹிப்ளு மதரஸா என அதன் பரிணாம வளர்ச்சியை பரிமளக்க செய்தவர்கள் அவர்கள்.
அன்று நானும், இன்று எனது மகனும், இன்ஷா அல்லாஹ் நாளை எங்கள் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறைகளைகளுக்கு சண்மார்க்க ஞானத்தை வூட்டிடும் கல்வித்தந்தை எனது ஆசானும், மாமாவுமாகிய அல்ஹாஜ் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி "சேவை செம்மல்" என அறியும்போது மற்றில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களை ஹாபிலீன்களாக, ஆலிம்களாக, பேச்சாற்றல் மிக்கவர்களாக ஆக்கியது அவர்களின் தூண்டுதலும், வலிகாட்டுதல்கலுமே காரணம். ஏன் உங்கள் மக்கள் ஒரு ஹாபிலாக ஆகக் கூடாது? ஒரு ஹாபிள் டாக்டர், ஒரு இஞ்சினீர் ஹாபிள் என ஏன் ஆகக் கூடாது என அவர்கள் கேட்பது இன்னும் எங்களில் காதுகளில் ரீங்காரம் பண்ணிக் கொண்டே இருக்கிறது.
இப்படி எத்தனையோ சிறப்புக்களை வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம். விருது கிடைக்காதா என ஏங்கும் இந்த காலத்தில் அந்த விருதே அவர்களை தேடி வந்து இருக்கிறது. இந்த விருது அவர்களின் சேவைக்கு இறைவனால் மக்கள் மூலம் கிடைத்த ஒரு சிறு துளியே! இதைவித எண்ணிலடங்கா, கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் விருது இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் சேவைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையையும், குறைவற்ற செல்வத்தையும், ஈருலக சகல சௌபாக்கியங்களையும் வழங்குவானாக! ஆமீன்!
அன்புடன்
அவர்களின் மாணவன், மருமகன்
எம். எஸ். காஜா மஹ்லரி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross