செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘... posted byShameemul Islam SKS (Chennai)[20 July 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 6217
விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
எமது அகவை அவரது சேவையின் வயது.
தீனை துன்யாவுக்காக என்றும் விற்காதவர்.
அறிமுகங்களை சுயநலத்திற்கு விலை பேசாதவர்.
பலரை நெறிப்படுத்தியவர்.
தம் உடையிலும் உள்ளத்திலும் தூய்மை மாறாதவர்.
பாரபட்சம் இவரது அகராதியில் இல்லை.
அவரது குடும்பத்து பிள்ளைகள் தவறிழைத்தால் அனைவர் முன்பும் அவர்களுக்கே செம அடி கிடைக்கும்.
இவர் கொடுத்த பிரம்படிகள் பலரது உயர்வுக்கு வித்திட்ட முதல் படிகள்.
அடித்த வலி மாறும் முன்பே அடிபட்டவர் முகத்தில் சிரிப்பையும் வரவழைப்பார்.
வகுப்புகளில் இவர் ஏதோ சுவாரஸ்யமான கதை சொல்வது போல் இருக்கும். ஆனால் பெல் அடிக்கையில் அன்றைய பாடம் முடிந்திருக்கும்.
ஒவ்வொரு அசெம்ப்ளியிலும் fundamental education என்ற அடிப்படைக் கல்வி என மார்க்கக்கல்வி பற்றி சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார். அஃது இல்லாமல் கொடுக்கப்படும் துன்யாவின் கல்வியினால்தானே இன்று எத்தனை எத்தனை பிரச்னைகள்.
இவரை நான் புகழவில்லை. அது என் வேலையுமில்லை.
ஒரு பயம், ஒரு கவலை, இந்த மார்க்கம் இப்படியே துன்யாவின் மோகத்தில் கரைந்து போய் விடுமோ என மனம் புழுங்கிய வேளையில் சேவைக்கான விருது என்று மார்க்கத்தை முன்னிறுத்தி ஒரு பரிசளிப்பு.
بدالإسلام غريبا وسيعود كما بدافطوبى للغرباء
இது ஒரு நபி மொழி.
இஸ்லாம் விநோதமாகவே தோன்றியது, மேலும் அது தோன்றியது போன்றே (வினோதமாக) திரும்பி விடும், அக்காலத்தில் (உண்மை முஸ்லிம்களாக) வாழ்பவர்களுக்கு சோபனமே.
இந்த GURABAA வைப்பற்றி அவர் விருது வாங்கும் வேளையில் என்னால் சில விஷயங்களை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. தவறிருந்தால் அல்லாஹ் என்னைப் பொருத்தருளட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross