நண்பர்களின் கவனத்திற்கு! posted bykavimagan m.s.abdul kader (dubai)[21 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6225
அஸ்ஸலாமுஅலைக்கும்!
நண்பர் MH .ஸாலிஹ் : நான் இந்தப்பகுதியில் வரைந்துள்ள
கருத்து தங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.காரணம்,நான்
எழுதியமுறை அந்தமாதிரி. அது புரியவேண்டியவர்களுக்கு
புரிந்திருக்கும். இதில் உங்கள் தவறு ஏதும் இல்லை.
VALUE ADDED TAX எனப்படும் VAT வரி ஜெயலலிதாவால்
கொண்டு வரப் பட்டதல்ல. அது 14 % என்பது பொதுவானதும்
அல்ல. இது உங்கள் மேலான கவனத்திற்கு மாத்திரம்.
மறுப்பு இருந்தால் எழுதுங்கள்.விவாதிப்போம்.
சகோதரர் IKRAM : உயர்நீதி மன்றத்தில் ஒருவரது தரப்பு
நிராகரிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்வது நீதிக்கு எதிரானதா? தயவுசெய்து விளக்கவும்.
சகோதரர் தைமியாஹ்: சமச்சீர் புத்தகத்தில் இருந்து
கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்களது தாகம் என்ற கவிதை
நீக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நாற்பதாண்டு
காலம் சினிமா சாராத, சிறப்பான பல கவிதைகளைத்
தந்த ஒரு சிறுபான்மைக் கவிஞனின்,அரசியல் சார்பற்ற கவிதையை
குரோத மனப்பான்மையுடன் நீக்கி இருப்பது, காழ்ப்புணர்ச்சியே
அன்றி வேறென்ன? அந்தக் கவிதையின் தரத்தைக் குறித்து
மாறுபட்ட கருத்து இருந்தால் எழுதுங்கள்.விவாதிப்போம்.
அனைவருக்கும் நன்றி!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross