Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ... posted byjamal (colombo)[24 July 2011] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6337
எஸ்.கே. சாலிஹ் அவர்கள் சொன்னது சரி. நான் இந்த இயக்கம் நடத்தும் மீலாது விழாக்களில் பெரும்பாலும் ஊரில் இருந்திருக்கிறேன். அவர்கள் ரோட்டை முழுவதுமாக மறைத்து மேடை போடுவதில்லை. இதைக் கண்கூடாக கண்டிருக்கிறேன்.
ஆனால் ஒரு நல்ல விசயம் நடக்கும்போது சில அசௌகரியங்களை நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். அப்படியில்லையென்றால், இவ்வுலகத்தில் எதுவும் நடக்காது.
பொதுவாக வீடு உடைத்துக் கட்டும்போது உடைசல்களையும், மண், ஜல்லி போன்றவற்றையும் நடுரோட்டில் நீண்ட நாட்களாக போட்டு வைப்பது பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை. அதே போல் திருமணம் நடத்துவது என்பது குறிப்பிட்ட தனிநபர், குடும்பத்தின் விசயம். அச்சமயத்தில் ரோட்டை அடைப்பது பற்றி ஒன்றுமே இவர்கள் பேசுவதில்லை. ஏன் என்றால் சொந்தபந்தங்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமோ? என்னவோ?
ஆனால் நபிகளாரின் புகழ் பாடுவதுடன் அவர்கள் சொன்னபடி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைத்து மேடை போட்டால் இவர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏன்? என்று தெரியவில்லை. இதுதான் இவர்கள் சமுதாயத்தின் மீது கொண்ட பாசம் போலும்!
தான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் நல்லா இருக்கணும் என்று எண்ணி இந்த விழாக்களின் மூலமாக உதவி செய்திடும் இந்த இயக்கத்திற்கு எமது வாழ்த்துக்கள். இவர்கள் பணி தொடர நாம் அனைவரும் உறுதுணை நிற்போம். வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலியைத் தந்தருள்வானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross