Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:37:00 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6776
#KOTW6776
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 22, 2011
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா! இன்றும், நாளையும் நடைபெறுகிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 10480 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (74) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 21)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளிவாசலுக்கருகில் செயல்பட்டு வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் மீலாது விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சன்மார்க்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகிறது.

அத்துடன், நகரில் நடைபெறும் மீலாது விழாக்களிலிருந்து சற்று மாறுபட்டு, விழாவையொட்டி கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பணிகளுக்காகவும் இவ்விழாவில் அனுசரணைகள் செய்யப்பட்டு வருகிறது.

சன்மார்க்கப் போட்டிகள்:
நடப்பாண்டின் மீலாது விழா வரும் ஜூலை மாதம் 22, 23 தேதிகளில் (இன்றும், நாளையும்) குத்துக்கல் தெருவில் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி ஏழை சிறுவர்களுக்கு கத்னா எனும் சுன்னத் வைபவம் நடத்தப்படவுள்ளது.

விழாவில் மாணவர்களின் திறனறியும் திருக்குர்ஆன் மனனப் போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கல்வி உதவித்தொகை:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டாண்டுகளில் வழங்கப்பட்டது போன்று இவ்வாண்டு முதல் 4 மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு அனுசரணையும் வழங்கப்படவுள்ளது.

அனைத்துலக கா.ந.மன்றங்களுக்கு பாராட்டு விழா:
விழாவின் துவக்க நாளான இன்று, உலக காயல் நல மன்றங்களின் நகர்நலப் பணிகளைப் பாராட்டி சிறப்பு நிகழ்ச்சி வழமை போன்று நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்துலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அப்துல் ஹமீத் பாக்கவீ, தொல்.திருமாவளவன் சிறப்புரை:
இன்றிரவு நிகழ்ச்சியில், வேலூரைச் சார்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ எம்.அப்துல் ஹமீத் ஃபாழில் பாக்கவீ சொற்பொழிவாற்றுகிறார்.

நாளை இரண்டாம் நாள் இரவு நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தகவல்:
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில்,
சட்னி செய்யித் மீரான்,
மகுதூம் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by jamal (colombo) [22 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6246

தங்கள் செய்தியில் நகரில் நடக்கும் மீலாது விழாக்களுக்கு சற்று மாறுபட்டு என்ற வாசகம் மிக வருத்தத்திற்குரிய வாசகம். மீலாது விழா என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது. அவர்களின் புகழைப் பாடுவது போன்ற நன்நிகழ்வுகளைக் கொண்டதாகும். இதில் ஊரில் நடக்கின்ற மீலாது விழாக்கள் எந்த வகையிலும் இதற்கு மாறுபட்டு நடக்கவில்லை. இந்த மீலாது விழாவில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்படுவது மிக நல்ல காரியம்தான். அதற்காக மற்ற விழாக்களை குறைவுபடுத்துவது ஏன்?

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எழுச்சி தமிழரின் பேருரையை கேட்க வாரீர்.... விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்..
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [22 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6247

இந்த உலகில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் எந்த ஒரு நாடும் என் தாய் நாடு - அதன் மக்கள் யாவரும் என் சகோதர சகோதரிகளே.... ! உத்தம நபிகளின் பிறந்த தின மீலாது விழாவிற்கு வருகை தந்து விழா பேருரை ஆற்ற வரும் சமச்சீர் கல்விக்கு துணை நின்ற... சமூக நல்லிணக்க நாயகர் எழுச்சி தமிழர் திரு - தொல் திருமாவளவன் MP அவர்களே வருக வருக மேலும் இவ்விழாவினை சிறப்பித்து தருக...

அனைவரும் வாரீர் வாரீர் எழுச்சி தமிழரின் பேருரையை கேட்க வாரீர்.... விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்..

நட்புடன் - தமிழர் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மீலாது விழா
posted by K.A.FAIZAL (madurai) [22 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6251

அஸ்ஸலாமு அலைக்கும்.விழா நிகழ்சிகளை இணையத்தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Zubair Rahman (Bengaluru) [22 July 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6255

ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின்.

சிறப்பான சமுதாய நலத்துடன் கூடிய விழாவை வல்ல அல்லாஹ் வெற்றி ஆக்கித்தருவானகவும் ஆமின்.

"தங்களின் சமுதாய பணி நீடூழி தொடர என் அகம் கனிந்த வாழ்த்துக்கள்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பாலைநிலத்து பால்மழை!
posted by kavimagan (dubai) [22 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6257

ஒரு பாலகனின் வருகை
பாலைநிலமெங்கும் பால்மழை!

ஆரம்பநிலை கல்வியைக்கூட
அறியாத ஒருவர்
அகிலத்திற்கே பல்கலைக்கழகமான
அல்லாஹ்வின் அதிசயம்!

நீலவானம் குடைபிடிக்கும்
நிமலவனின் அருட்கொடை!

இம்மை மறுமை
இடர்மாற்றும் மாத்திரை.
இருபத்து மூன்று ஆண்டுகளில்
இவர் பெற்றுத்தந்த மாமறை!

மனங்களை அடிமைப்படுத்தி
மனித குலத்திற்கே விடுதலை தந்த
மதீனத்துப் போராளி!

கேடுதரும் நரகில் கிடக்கும்
கொடியவன் ஒருவன் தாகம்
தணிந்திட தண்ணீர் பெற்றான்.
திண்டாடியவனுக்கு சலுகை
நபிவரவைக் கொண்டாடியதால்!

காலமெல்லாம் கண்மணியே
காருண்ய நபிகளாரே!
உம்வரவைக் கொண்டாடி
உம்வழியில் நின்றேக
படைத்தவனை வேண்டிடுவோம்
பயத்தோடு மன்றாடி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Attn: சகோ.ஜமால் (கொழும்பு)
posted by Moderator (Kayalpatnam) [22 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6262

அன்புச் சகோதரர் ஜமால் அவர்களே!

இச்செய்தியிலுள்ள, ”நகரில் நடைபெறும் மீலாது விழாக்களிலிருந்து சற்று மாறுபட்டு” என்ற வாசகம், கூடுதலாக இவ்விழாவில் செய்யப்படும் ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் செய்தியாளரின் பார்வை மட்டுமே!

ஒன்றைக் குறைத்து, பிரிதொன்றை உயர்த்தும் வகையில் எந்த வாசகமும் நமது காயல்பட்டணம்.காம் தளத்தில் இடம்பெறாமல் இயன்றளவு முழு கவனத்துடன் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே, அப்படி ஒரு மாற்றுக்கருத்தை தாங்கள் கொள்ளத் தேவையில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சகோதரர் ஜமால் அவர்களே ! அஸ்ஸலாமு அழைக்கும்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [22 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6268

நகரில் நடைபெறும் மீலாது விழாக்களிலிருந்து சற்று மாறுபட்டு, விழாவையொட்டி கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பணிகளுக்காகவும் இவ்விழாவில் அனுசரணைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாசகத்தில் என்ன தவறு, குறை இருக்கு? எனக்கு புரியவில்லை! சகோதரர் ஜமால் அவர்களே! சற்று மாறுபட்டு என்கிற வாசகத்தை தவறாக அர்த்தம் கொள்ளாதீர்...
வஸ்ஸலாம் - நட்புடன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by m.s.k. sulthan (deira dubai) [22 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6269

அஸ்ஸலாமு அலைக்கும்
ரஹ்மத்துல் லில் ஆலமீன் மீலாது விழா சிறப்புடன் நடைபெற எனது வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by s,e,m, abdul cader (bahrain) [22 July 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 6275

அஸ்ஸலாமு அல்லாகும்
தங்கள் அனைவர்க்கும் எனது அன்பர்த வாழ்த்துகள். எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் தங்கள் அனைவர்க்கும் ரஹ்மத் சொரிவனஹா.

வஸ்ஸலாம்
s.e.m. அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வாழ்துக்கள் !
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [22 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6279

ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா! மற்றும் பொதுநலப் பணிகள் யாவும் நனிசிற ப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக ! வாழ்துக்கள் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்
posted by K.M.T Shaikna Lebbai (Singapore) [23 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6282

சன்மார்க்க போட்டிகள்,கல்வி உதவித்தொகை மற்றும் இதர பொதுச்சேவை ஆற்றிடும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியதிர்க்க் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களுடைய பொது சேவைகள் தொடர வல்ல அல்லாஹ் துணை புரிவானாக,ஆமீன்

குறிப்பாக சட்னி செய்து மீரான் காக்காவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by vsm ali (kayalpatnam) [23 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6283

உங்களது விழாவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் விழாவுக்காக 3 நாட்களுக்கு ரோட்டை அடைத்து, மேடை போட்டு வைத்துள்ளார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படாதா? அவசர நோயாளிகள், உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று சேர முடியுமா?

நகராட்சி நிர்வாகம், 3 நாட்களுக்கு இப்படி ரோட்டை அடைத்து, விழா நடத்த எப்படி அனுமதி கொடுக்கலாம்? இது மட்டுமா? நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைக்காடு. சமூக ஆர்வலர்கள் ஒருமுறை central school to panchaayat office வரை நடந்து சென்று பார்த்தால் தெரியும், நிர்வாகம் எப்படி வேலை செய்கிறது என்று? அந்த அளவுக்கு குப்பைகள். (ஊரின் மற்ற பகுதிகளை நான் இன்னும் சென்று பார்க்கவில்லை) அந்தந்த பகுதிகளின் வார்டு மெம்பர்கள் தயவு செய்து இதை கொஞ்சம் கவனியுங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by sak md omar oli (jeddha) [23 July 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6285

ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா! மற்றும் பொதுநலப் பணிகள் யாவும் நனிசிற ப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக ! வாழ்துக்கள் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by jamal (colombo) [23 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6291

மூன்று நாட்களாக ரோட்டை அடைத்திருக்கிறார்கள் என்று சகோதரர் குறைபட்டுக் கொண்டார். தங்களுக்கு இந்த மீலாது விழாதான் கண்ணுக் தெரிந்ததா? எத்தனை திருமணங்களில் ரோட்டை அடைத்து சாப்பாடு வைக்கிறார்கள், அழைப்பு வைக்கிறார்கள், பெண்ணை சோடனை செய்து வைக்கிறார்கள். அப்போதெல்லாம் உங்கள் கண்ணுக்குப் படவில்லை இந்த ரோடு அடைப்பு.

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! இந்த மீலாது விழா ரோட்டை முழுமையாக அடைத்து மேடை போட்டு நடத்தப்படுவதில்லை. ஒரு பகுதி வாகனங்கள் செல்வதற்கு தோதாகத்தான் மேடை போடப்பட்டிருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by vsm ali (kayalpatnam) [23 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6306

கொழும்பு நண்பர் குறிப்பிட்ட அத்தனை விசயங்களை பற்றியும் நான் முன்பே இந்த kayalpatnam.com இல் பலமுறை எழுதி இருக்கிறேன். ஒருவர் தவறு செய்கிறார் அதற்காக நானும் இதை செய்வேன், கண்டுகொள்ளாதீர்கள் என்று "விடாக்கண்டன், கொடாக்கண்டன்" மாதிரி பேசினால் அது நியாயமா?

மேலும் கொழும்பு நண்பர், இங்கு நடப்பதை அங்கிருந்து எப்படித்தான் பார்த்தாரோ தெரியவில்லை? அவர் சொன்னது போல, வாகனங்கள் செல்வதற்காக ஒரு பகுதி திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் பொய். ஒரு சைக்கிள் போகும் அளவுக்கு சிறிய gap . அவ்வளவுதான். இதுகூட "போக்குவரத்துக்கு" என்ற எண்ணத்தில் இல்லை. மேடைக்கு பின் புறத்தில் இருப்பவர்களும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

நண்பர் என்னுடைய கருத்துக்களை பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். விழா நடத்துவதைப்பற்றி நான் குறை சொல்லவில்லை. அதை பள்ளி வாசலிலோ, திருமண மண்டபங்களிலோ வைத்து, அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துங்கள் என்றுதான் சொல்கிறேன்.

(எங்களுக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவம். சென்ற வருடம், இதே மீலாது மேடை... என்னுடைய சாச்ச்சப்பா நாட்டிக்கு மூச்சு திணறல் ஏற்ப்பட்டு உடனடியாக KMTக்கு கொண்டு செல்ல ambulance வர சொல்லி, அவர்களும் முஹ்யிதீன் பள்ளி வரை வந்து, சரியான spot க்கு வரமுடியாமல், நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. ஆட்டோ செல்லுமளவுக்கு இடமுள்ளது!
posted by SK Salih (Kayalpatnam) [23 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6308

அன்புச் சகோதரர்களே...! இங்கு நடக்கும் விவாதத்தில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை... அதே நேரத்தில் நான் பார்த்த ஒன்றை இங்கு தெரிவிப்பது எனது கடமையெனக் கருதுகிறேன்.

இன்று காலையில் நான் அந்த மேடை உள்ள இடத்திற்குச் சென்று வந்தேன். ஆட்டோக்கள் சாதாரணமாக அந்த இடைவெளி வழியே சென்றுகொண்டும், வந்துகொண்டும்தான் உள்ளன. இதை தகவலாக மட்டும் தந்துள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [23 July 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6310

அஸ்ஸலாமு அழைக்கும்...

இங்கு கருத்து பரிமாறும் சகோதரர்கள், எதன் அடிப்படையில் கருத்து கூறுகிறார்கள் என்று தெரியவில்லை...

(1 ) மீலாது நபி கூடும்/கூடாது என்று கருத்து கூறுகின்றனரா?
(2 ) இல்லை தெருவில் பந்தல் போடவேண்டும்/போடகூடாது என்று கருத்து கூறுகின்றனரா?

என் முதலாவது கேள்விக்கு நான் வரவில்லை..... இதில் பலருக்கும் பல கருத்துகள்.

பந்தல் விடயத்தில், சகோ. எஸ்.கே. ஸாலிஹ் அவர்கள் கூறியது போல் வசதி செய்யபட்டிருந்தால் அது தவறு இல்லை. மேலும் திருமணங்களின் போது தெருவில் போடப்படும் பந்தல் தவிர்க்க முடியாத ஒன்று....

நமதூரில் திருமண மண்டபம் ஒன்றுதான் இருக்கின்றது, மற்றபடி மைதான அமைப்பில் உள்ள இடங்கள், ரெட் ஸ்டார் மற்றும் ஐக்கிய விளையாட்டு சங்கம்,

பொதுவாக ஐக்கிய விளையாட்டு சங்க திடலில் திருமணம் நடத்த வசதிகள் இல்லை, பள்ளிவாசலில் நிக்காஹ் நடத்தலாம், ஆனால் வலீமா? அதுக்கு பந்தல் தேவை தானே?

தைக்கா தெரு மற்றும் அதை சுற்றி உள்ளவர்களுக்கு மண்டப வசதி கிடையாது.... சாஹிப் அப்பா தைக்கா இருகின்றதே என்று தாங்கள் கூறலாம். ஆனால், மாற்று கொள்கை உடையவர்களுக்கு அங்கு அனுமதி கிடையாது.....

அக ஒரே வழி தெருவில் பந்தல் போடுவதுதான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by KADERSHAMUNA (SHENZHEN - CHINA) [23 July 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 6311

சன்மார்க்க போட்டிகள், கல்வி உதவித்தொகை மற்றும் இதர பொதுச்சேவை ஆற்றிடும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியதிர்க்க் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுடைய பொது சேவைகள் தொடர வல்ல அல்லாஹ் துணை புரிவானாக,ஆமீன்

குறிப்பாக சட்னி செய்து மீரான் மம்னாகர் SEYED MD / ZA மற்றும் காக்காவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by vsm ali (kayalpatnam) [23 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6319

இன்று காலையில் நானும் ஒரு ஆட்டோவில் அமர்ந்து, பிரதான வீதிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னபோது, இந்த வழியாக செல்ல முடியாது என்று மறுத்து விட்டார், ஆனால், இந்த வழியாக சைக்கிள் மூலம் சென்றவர்களை பார்க்க முடிந்தது. salih kaka வின் தகவலை பார்த்தால், ஆட்டோக்கு மட்டும் இடத்தை விட்டு, எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் ரோட்டை அடைக்கலாம். அப்படித்தானே?

நகராட்சி நிர்வாகம்தான் இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Abu Misbah (KSA) [23 July 2011]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6320

கவிமகன் அவர்களின் கவிதை மிக அருமை. அதிலும் கீழே உள்ள வரிகள் சிந்திக்க தூண்டிய வரிகள்.

"கேடுதரும் நரகில் கிடக்கும்
கொடியவன் ஒருவன் தாகம்
தணிந்திட தண்ணீர் பெற்றான்.
திண்டாடியவனுக்கு சலுகை
நபிவரவைக் கொண்டாடியதால்!"

நண்பர் கவிமகன் அவர்களுக்கு சிறு விளக்கம்.
"ஆரம்பநிலை கல்வியைக்கூட
அறியாத ஒருவர்"

இந்த வரியில் அறியாத என்ற வார்த்தைக்கு பதிலாக கற்காத என்று இருந்தால் மிகச்சரியாக இருக்கும். அவர்களுக்கு கற்பிக்கும் தகுதி எந்த ஆசிரியருக்கும் இல்லாததால் அவர்கள் கற்க வில்லையே தவிர அவர்கள் எல்லாவற்றையும் அறிந்து இருந்தார்கள்.

குளம் அஹமது முஹியதீன்
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by kavimagan (dubai) [23 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6322

சகோதரர் அஹமத் முஹைதீன் அவர்களே! உங்களது பாராட்டுக்கு நன்றி!

நீங்கள் சொல்வதுதான் சரி! அகிலத்திற்கே கற்பித்த அண்ணல் நபிகளாருக்கு கற்றுக்கொடுக்கும் சக்தி அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இருந்திருக்க முடியாது. மேலும்,அவர்கள் அறியாத எதுவும் இல்லவே இல்லை. ஆகவே, கற்காத என்ற வார்த்தைதான் மிகவும் சரியானது.

அட்மின் சார்! கவிதையில் அறியாத என்ற வார்த்தையை நீக்கிவிட்டு கற்காத என்ற வார்த்தையை சேர்க்குமாறு, உங்களை இந்த பதிவின் மூலம் வேண்டுகிறேன்.

சுட்டிக்காட்டியமைக்கு மிகமிக நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [24 July 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6333

{மீலாது நபி வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சயையை இங்கு வைக்க விரும்பவில்லை. ஆனால்} ஒரு ஈ எறும்புக்கு கூட சிரமம் கொடுக்காமல் வாழ்ந்த உத்தம நபி, இவ்உலக வாழ்வில் ஒழுக்கத்தை ஒவ்வருவருக்கும் உணர்த்திய உன்னத சீலரின் உதயதின விழாவை மூன்று நாட்கள் கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் தெருவை அடைத்து, வாகனங்கள் செல்ல முடியாத சிரமங்களை கொடுப்பது சிறப்புக்குரிய செயலா?

எல்லா கல்யாண வீட்டிலும் கூட தெருவை அடைக்கிரர்களே, நாங்கள் அடைத்தால் தப்பா என்ற பதிலை சொல்லி நியாயப்படுத்த நீங்கள் நினைத்தால் ஒரு அறியாமையின் காரணமாக் நான் இதை எழுதியதற்கு மனம் வருந்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by jamal (colombo) [24 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6337

எஸ்.கே. சாலிஹ் அவர்கள் சொன்னது சரி. நான் இந்த இயக்கம் நடத்தும் மீலாது விழாக்களில் பெரும்பாலும் ஊரில் இருந்திருக்கிறேன். அவர்கள் ரோட்டை முழுவதுமாக மறைத்து மேடை போடுவதில்லை. இதைக் கண்கூடாக கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு நல்ல விசயம் நடக்கும்போது சில அசௌகரியங்களை நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். அப்படியில்லையென்றால், இவ்வுலகத்தில் எதுவும் நடக்காது.

பொதுவாக வீடு உடைத்துக் கட்டும்போது உடைசல்களையும், மண், ஜல்லி போன்றவற்றையும் நடுரோட்டில் நீண்ட நாட்களாக போட்டு வைப்பது பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை. அதே போல் திருமணம் நடத்துவது என்பது குறிப்பிட்ட தனிநபர், குடும்பத்தின் விசயம். அச்சமயத்தில் ரோட்டை அடைப்பது பற்றி ஒன்றுமே இவர்கள் பேசுவதில்லை. ஏன் என்றால் சொந்தபந்தங்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமோ? என்னவோ?

ஆனால் நபிகளாரின் புகழ் பாடுவதுடன் அவர்கள் சொன்னபடி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைத்து மேடை போட்டால் இவர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏன்? என்று தெரியவில்லை. இதுதான் இவர்கள் சமுதாயத்தின் மீது கொண்ட பாசம் போலும்!

தான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் நல்லா இருக்கணும் என்று எண்ணி இந்த விழாக்களின் மூலமாக உதவி செய்திடும் இந்த இயக்கத்திற்கு எமது வாழ்த்துக்கள். இவர்கள் பணி தொடர நாம் அனைவரும் உறுதுணை நிற்போம். வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலியைத் தந்தருள்வானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Salai Sheikh Saleem (Dubai) [24 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6340

கூட்டங்கள், கச்சேரிகள், கல்யாணம், வீடு கட்டுவது போன்ற காரியங்களுக்கு தெருக்களை அடைத்துதான் ஆக வேண்டிய சூழ்நிலைதான் நமதூரின் நிதர்சனமான நிலைமை.

இது இப்படி இருக்க, தெருக்களை அடைய்ப்பதா வேண்டாமா என்று விவாதிக்காமல், ஏதோ நல்லது நடக்கிறது - சொல்லி வந்தால் உள்ளே - இல்லை என்றால் வெளியே, மனசுக்கு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள் இல்லா விட்டாலும் வாழ்த்துங்கள்.. வாழ்த்துவதால் நீங்கள் தான் உயருகிரீர்கள்.

நமதூரின் அமைப்பே நாம் ஒரு தெருவை அடைத்திருந்தால் மற்ற தெருவின் வழியாய் இலகுவில் தங்குதடை இன்றி பிரயாணிக்க முடியும் என்று இருக்கும் போது, ஓரிரு நாட்கள் பேச்சுக்குதனே? நாம் நினைத்தால் கொஞ்சம் பொறுத்துக்கொள முடியாதா ???? ஒருவர் பொறை இருவர் நட்பல்லவா??????? என்ன யாரும் இப்படி யோசிக்க வில்லையே என்று மனசில் படுகிறதா ??? இதுதான் உண்மையான மனசாட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by kavimagan (dubai) [24 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6341

மீலாதுன் நபி விழா வேண்டாம் என்று நேரிடையாக சொல்லாமல், ரோட்டை அடைத்து விட்டார்கள், பூட்டை உடைத்து விட்டார்கள் என்று ஏதேதோ எழுதும் தோழர்கள் கொழும்பு சகோதரர் ஜமால் அவர்கள் கேட்கும் யதார்த்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

இன்னொரு நண்பர் மீலாது என்ற போர்வையில் என்ற வாசகத்தை கையாண்டுள்ளார். மீலாது என்ற போர்வையில் அங்கு என்னதான் நடக்கிறது? முன்னும், பின்னும் மாற்றுவழி உள்ள குத்துக்கல்தெரு என்ன பிரச்சனையை சந்தித்து விட்டது?

மீலாதுவிழா கூடாது என்றால், நேரிடையாக அந்தக் கருத்தை வலியுறுத்துங்கள். அப்போதுதான் அதைக்குறித்து விளக்கம் பெற வசதியாக இருக்கும். அதைவிட்டு, ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கும்போது ஏற்படும் சிறுசிறு சிரமங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பதுதான் நாகரீகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. மனதில் இடம் இருந்தாலே...... போதும்.
posted by zubair (riyadh) [24 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6346

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே..... இப்படி அடைப்பதால் கார் போக வழி இல்லை, ஆட்டோ போக வழி இல்லை, சைக்கிள்தான் போகுது இதெல்லாம் என்ன.....?

நாட்டு நடப்பையும், ஊரின் நடப்பையும் பார்க்கவும். எல்லாத்திலும் நாங்கள் வேறுபட்டு காட்டனும் என்று நினைக்காதீர்கள். நாம் ஒன்றை சுட்டிக்காட்டும் போது மீதி மூன்று விரல்கள் நம்மை சுட்டிக்காட்டுகிறது என்பதை உணருங்கள்.

தாங்களின் மனதில் நாம் சகோதர - சகோதரிகள். மாமா - மச்சன்மார்கள், ஊர் ஒற்றுமை, நல்லவருக்கு பெய்யும் மழையே... எல்லோருக்கும் என்று என்னும் அளவுக்கு சின்ன இதயத்தில் ஒரு ஓரத்தில் இடம் இருந்தாலே... போதும் இந்த குழப்பம்கள் வராது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Ahamed Meera Saahib (Mumbai Seepz) [24 July 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 6349

கவிமகன் அவர்களே !

தாங்கள் கவிதை என்று கொடுத்த கீழ் உள்ள வரிகளுக்கு நபிகளாரின் ஹதீதுகளில் ஆதாரம் தர முடியுமா ? அல்லாஹ்வே அபூ லஹபை சாடி அவன் கை நாசமாகட்டும் என்று குர்ஆனில் ஒரு அத்தியாயத்தையே இறக்கி இருக்கும்போது எப்படி அவனுக்கு நரகில் தாகத்திற்கு நீர்? நரகம் என்பது எப்படி இருக்கும் அங்கே இருப்பவர்களுக்கு எது தாகம் தீர்க்க கொடுக்கப்படும் என்பது தங்களுக்கு தெரியாதா?

"கேடுதரும் நரகில் கிடக்கும்
கொடியவன் ஒருவன் தாகம்
தணிந்திட தண்ணீர் பெற்றான்.
திண்டாடியவனுக்கு சலுகை
நபிவரவைக் கொண்டாடியதால்!"

அட்மின்,
குரானின் வசனங்களுக்கு மாற்றமாக இந்த வரிகள் இருப்பதால் தான் இந்த கேள்வி. இதற்கும் கத்திரி போட்டுவிடுவீர்கலானால், உண்மையை உரைக்க வேறு வெப்தளங்களை தேடி செல்ல வேண்டி இருக்கும். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. உள்ளத்தின் அழுக்கு.........
posted by zubair (riyadh) [24 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6350

அஸ்ஸலாமு அலைக்கும். vsm அலி அவர்களே......... என்ன இது. உங்களின் உள்ளத்தில்? நீங்கள் முன்பு பதித்தவை இதோ....

கொழும்பு நண்பர் குறிப்பிட்ட அத்தனை விசயங்களை பற்றியும் நான் முன்பே இந்த kayalpatnam.com இல் பலமுறை எழுதி இருக்கிறேன். ஒருவர் தவறு செய்கிறார் அதற்காக நானும் இதை செய்வேன், கண்டுகொள்ளாதீர்கள் என்று "விடாக்கண்டன், கொடாக்கண்டன்" மாதிரி பேசினால் அது நியாயமா?

மேலும் கொழும்பு நண்பர், இங்கு நடப்பதை அங்கிருந்து எப்படித்தான் பார்த்தாரோ தெரியவில்லை? அவர் சொன்னது போல, வாகனங்கள் செல்வதற்காக ஒரு பகுதி திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் பொய். ஒரு சைக்கிள் போகும் அளவுக்கு சிறிய gap. அவ்வளவுதான். இதுகூட "போக்குவரத்துக்கு" என்ற எண்ணத்தில் இல்லை. மேடைக்கு பின் புறத்தில் இருப்பவர்களும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான்

ஹலோ..... அலி அவர்களே..... நண்பர் s.k ஸாலிஹ் பதிப்பையும் பார்த்தோம். ஏன் இப்படிலாம் எழுதுகிறீர்கள்?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [24 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6355

என்னங்க.. இந்த பதிவுக்கு இவ்வளவு கமெண்ட்ஸ், இவ்வளவு சச்சரவு.. ஆரோக்யமாக முடிவுக்கு வாங்க.

அப்புறம்.. சகோ. அஹ்மத் மீரா சாஹிப் அவர்களே, இதற்க்கு எல்லாம் ஆதாரம் வைத்து இருப்பார்கள். சீறாப்புராணத்திலோ, மஸ்தான் சாஹிப் பாடலிலோ இருக்கும். அருமையாக பதில் வரும் பாருங்க..

" நமது அறிவு மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடிய அளவில் சரியாக ஆய்வு செய்து எழுத வேண்டும். நமது நேயர்கள் அறிவாளிகள். வார்த்தை ஜாலங்களால் எதையும் சாதிக்கலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. நான் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம் ஏனோதானோவென்று எழுதி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகவேண்டாம் என்பதை மட்டும்தான்". எங்கயோ கேட்டது.. சுட்டது. இந்த வரிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR) [25 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6359

ASSALAAMU ALAIKKUM.தற்போதுதான் இந்த விவாத களத்தை நான் பார்த்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இவர்கள்...!

ஒரு சகோதரர் சொல்லி இருப்பது போல் அவரது உறவினருக்கு ஆம்புலன்ஸ் வர முடியாமல் அவர்கள் தவித்த விஷயம் எல்லாம் நம் ஊர் அமைப்பை பொறுத்த வரை நம்ப முடியாத கற்பனை.(அல்லது அவர்களது இயலாமை) ஏனென்றால் சில ஊர் அமைப்புகளை போன்று நம் ஊரில் dead end ஆக இருக்கும் தெரு என்று எதுவும் இல்லை. அந்த நண்பர் ஆம்புலன்சுக்கு போன் செய்யும் போதே குத்துக்கல் தெரு வழியாக வராமல் சதுக்கை தெரு வழியாக வருமாறு வேண்டி இருந்தால் சிரமம் தவிர்க்க பற்றிருக்கும். எனவே - அவரது வாதம் ஏதோ உள்நோக்கம் கொண்டதாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.

மற்றபடி ஒரு முக்கிய குறிப்பு: பொதுவாக எந்த விழாவாக இருந்தாலும் மேடை அமைக்கும் போது ஜனாசாவை தூக்கி கொண்டு செல்லும் அளவு இடம் வசதி செய்து கொள்வது மிக முக்கியம். ஏனென்றால் ஜனாஸாவை நீண்ட தூரம் அலைக்கழிப்பது சிறந்ததல்ல.

மீலாதை என்றும் போற்றுவோம் - மேலான இன்பம் பெறுவோம்.... நபிகள் பிறந்த நாளை கொண்டாடவில்லை என்றால் இன்னொரு திருநாள் நமக்கேது வாழ்வில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:அகத்தின் அழகு கருத்தில் தெரியும்...?
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [25 July 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 6360

உன் நண்பனை சொல் நான் உன்னை பற்றி தெரிந்து கொள்கிறேன் (இப்படி ஒரு பழைய சொல்.) உன் கருத்தை சொல் உன் இதயத்தை (மனதை) தெரிந்து கொல்கிறேன் (இது புதிய சொல்.)

இங்கு பதியும் கருத்துக்கள் மூலம் அந்த நபரை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளலாம். விட்டுகொடுத்த்வர் கேட்டு போனது இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [25 July 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6364

நீங்கள் உண்மையை உரைத்தீர்கள் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்களே.

மீலாது விழாவை சிறப்பாக கொண்டாடும் எனதருமை சகோதர சகோதரிகளே சற்று சிந்தித்து பார்க்க வேண்டியது நபிகளார் இறந்த தினமும் அதே ரபியுல் அவ்வல் 12 ஆம் நாள் தான். மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.

துக்கம் மூன்று நாட்களுக்கு மேல் அனுசரிக்க கூடாது என ஹதீஸ் எல்லாம் காட்டாதீர்கள். பிறந்த நாள் விழா கொண்டாட ஹதீஸ் எங்கே என கேட்போம்.

சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
சற்று சீர் தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே

என்ன ஜியா காக்கா இந்த பாடல் வரிகள் அவர்களுக்கு போதும். அட நம்ம நாகூர் ஹனிபா என நினைக்கிறேன். நமக்கு இந்த கவிதை எல்லாம் எழுத தெரியாது கொஞ்சம் எடக்கு மடக்கா கேள்வி மட்டும் கேட்க தெரியும். பதில் தெரியவில்லை எனில் வாய் மூடி மௌவனமாக இருப்போம்.

அட்மின் அவர்களே இந்த கமெண்ட்டையும் சுட்டு விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [25 July 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6366

முக்கியமாக காலம் தாழ்த்தி இரவு நேரங்களில் ஒலி மாசு செய்யபடுகிறது வட பக்கத்தில். மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் செயல்கள் செய்ய வேண்டாம் என்பதும் நபிமொழி. நபிகளார் இஷாவுக்கு பின் தூங்க சென்று விடுவார்கள் என்று தீனியாதில் கற்ற ஞாபகம்.

இது ஒரு நபிமொழி. இரண்டு சகோதரர்களில் ஒருவர் எப்பொழுதும் பள்ளிவாயிலில் அமர்ந்து தொழுகை இபாதத்து என இருக்க மற்றொருவரோ தொழுகையை முடித்து விட்டு தன் குடும்பத்திற்கும் தன் சகோதரன் குடும்பத்திற்கும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்தாராம். இதை பற்றி ஒருநாள் நம் கண்மணி நாயகம் ஒரு சஹாபியிடம் வினவ அவர் உள்ளதை உள்ளபடி கூற. இரண்டாமானவர் இவர்களில் சிறந்தவர் என பதில் வந்தது. நாம் இவர்களில் எவர் என சிந்திப்போம்.

அதற்காக நாங்கள் என்ன உழைக்கவில்லையா? தொழுகவில்லையா? என நினைக்க வேண்டாம். நான் தாழ்ந்தவன் நீ உயர்ந்தவன் எனவும் கூறவில்லை. இது நபிகளாரின் இறுதி பேருரையின் எச்சரிக்கை. நீங்கள் செய்வதை செய்யுங்கள் அது உங்களும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ளது. சூராஹ் அல்காபிரூன் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் ஒலிபெருக்கியின் சப்தத்தை குறைத்து கொள்வது நலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. முற்றும்!
posted by Moderator (Kayalpatnam) [25 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6369

இச்செய்திக்கான பார்வையாளர் கருத்துப்பதிவு இத்துடன் நிறுத்தப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Cnash (Makkah ) [25 July 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6379

ஆரோக்கியமான ஒரு விவாதம் தானே, அவர் கவிதைக்கு ஆதாரம் கேட்டு இருக்கிறார்.. முடிந்தால் கவிதை எழுதியவர் கொடுப்பார்... இல்லை என்றால் மக்களுக்கு தெரியட்டும்... அதில் உள்ள கருத்து கட்டுகதை என்று... எதற்காக நிறுத்த வேண்டும்.... அப்படி என்றால் அது போன்ற கவிதைகளை போடுவதை நிறுத்துங்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by kavimagan m.s.abdul kader (dubai) [25 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6400

அன்பு சகோதரர் அஹ்மத் மீரா சாஹிப் , CNASH மற்றும் உண்மையை அறிந்துகொள்ள உண்மையான ஆர்வம் காட்டும் தோழர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

மிகப்பெரிய உலமாக்களின் பிரசங்கத்தில் எல்லாம் நான் செவியுற்றது தவறாகிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், இந்தக் கவிதையின் வரிகள் நபிமொழிக்கு எதிரானதுபோல சித்தரிக்கப்பட்டது.

எப்போதும் எதையாவது உளறித்தள்ளி, தப்பு தப்பாய் எழுதி நேயர்களிடம் மாட்டிக்கொண்டு, அங்கிருந்து ஓடி ஒளிந்து, இன்னொரு பதிவுக்கு வந்து, அங்கேயும் கூட்டத்தோடு கூட்டமாக மீண்டும் உளறிவிட்டு செல்கின்ற அறிவுஜீவிகளைக் குறித்து எனக்கு கவலையில்லை.

ஆனால் உங்களைப் போல் அறிவுசால் ஆர்வலர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நாளை மறுமையில் இறைவனுக்கும் பதிலளிக்கும் கடமை எனக்கிருக்கிறது.

மிகுந்த வேலைப்பளுக்கிடையில், நான் திரட்டிய ஆதாரங்களின் பாகம் மற்றும் குறியீடுகளை நான் இங்கு தருகிறேன். மொத்தத்தையும் டைப் செய்ய நேரம் இல்லாத காரணத்தினால், மேலதிக முழு விபரங்களை, இன்ஷாஅல்லாஹ் விரைவில் பூரணமாக அனுப்பி வைக்கிறேன்.

நூல் : புஹாரி. பாகம்: திருமணம் எண்: 5101
அறிவிப்பாளர்: உம்முஹபீபா பின்த் அபீ சுப்யான்( ரழி).
இந்த ஹதீஸில், அபூ லஹபிற்கு, நரகத்தில் இருவிரல் வழியாக எப்படி, ஏன் தண்ணீர் கிடைத்தது என்ற விவரம் இருக்கிறது. தயவுசெய்து பார்க்கவும்.

இந்த குறிப்பிட்ட ஹதீஸைக் குறித்த மேலதிக விபரங்களுக்கு, இப்னு ஹஜ்ருல் அஸ்கலாணி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பத்ஹுள் புஹாரியில் சிலாகித்து எழுதி இருப்பதையும், அறிஞர் அப்துல் ரஜாக் அவர்கள் எழுதிய முசன்னத் கிதாப்: பாகம்: ஏழு, பக்கம்; 478,
பகவி அவர்கள் எழுதிய கிதாப் தரகுச்சுன்னா, பாகம்; ஐந்து, பக்கம்;192,
பேரறிஞர் ஆமிரி அவர்கள் எழுதிய பகுஜத்துள் மகாபிழ், பாகம் ஒன்று, பக்கம்:41,
இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் எழுதிய அல்ஹிதாயா வான் நிஹாயா என்ற கிதாபில் பாகம்: ஒன்று, பக்கம்:224,
தைபவுத்தைபானி அவர்கள் எழுதிய ஹிதாயத்துல் அன்வார் என்ற கிதாபில் பாகம்: ஒன்று பக்கம் எண்: 134ஐ திறந்த மனதோடு பார்வையிடுக.

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக, வேறு எதை விடவும், எவரை விடவும் அண்ணலெம் பெருமானார் ( ஸல் ) அவர்கள் மீது அன்பு செலுத்துபவனாகவும் இருக்கிறான்.

இன்ஷாஅல்லாஹ், இதே தலைப்பில் மீண்டும் வருவேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Cnash (MAKKAH ) [25 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6410

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த கருத்தை போட மாட்டீங்க என்று ஒரு புறம் நினைத்தாலும், இந்த கவிதையில் வந்த குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான கருத்தை அனுமதித்து இருப்பதால் மறுக்க வேண்டியது எங்கள் கடமை என்ற அடிப்படையில் post பண்ணுறேன். அவர் சொன்ன கவிதையை கூட ஒரு மேலோட்டமாகத்தான் பார்த்தோம், ஆனால் சகோ. அஹ்மது முஹையத்தீன் சிந்திக்க தூண்டிய வரிகள் என்று சொன்னபிறகு அப்படி என்ன இருக்கு சிந்திக்க என்று பார்த்தல் அபத்தங்கள் தான் மிஞ்சுகிறது!!

கவிதை வரிகளை சிந்திக்கும் முன் நரகம் பற்றி அல்லாஹ்வின் வேதம் சொல்லும் சில வரிகளை பாப்போம்.

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டு இருக்கும், அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டு (அதிலே) உறுதியாக நின்றவையுமாகும் கொழுந்து விட்டு எறியும் நெருப்பிற்க்கே அவை புகும்...கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு) நீர் புகட்டபடும் (88 : 2 -5 )

அவர்கள் அதில்(நரகில்) குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்: கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர (78 :24 /25 ).

இங்கே நரகத்தில் திண்டடியவனுக்கு தண்ணீர் என்று சொல்ல வருவது அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு இரு கரங்களும் நாசமாகட்டும் அவன் நரகம் புகுவான் என்று சொல்லப்பட்ட அபுலஹப், தான் தம்பி மகன் பிறந்த செய்தியை கொண்டாடும் விதமாக தன சுட்டு விரலை காட்டி ஒரு அடிமை பெண்ணை விடுதலை செய்தான் அந்த விரலை நரகம் தீண்டாது அதில் இருந்து சுரக்கும் நீரில் நரக தாகம் தீர்த்து கொள்வான் என்று நபியை புகழ்கிறோம் என்ற பேரில் கட்டு கதைகளை பல மேடையில் பேச கண்டுஇருக்கிறோம்..அதற்கு ஆதாரமாக புஹாரி யில் இடம் பெற்று எல்லா ஹதீத்கலை அறிஞர்களாலும் நிராகரிக்கப்பட்ட குர்ஆனுக்கு முரண்பட்ட கீழ்கண்ட ஹதீஸை சொல்லுவார்கள் (புஹாரி 5101 ).

இதுவும் கூட நபி சொன்னதாக இல்லாமல் உர்வா என்பவர் யாரோ ஒரு நபியின் குடும்பத்தினர் இவ்வாறு கனவில் கண்டதாக கூறப்படும்.. இந்த ஹதீஸ் பல்வேறு காரணங்களுக்காக அறிஞர்களால் நிராகரிக்க படுகிறது... உர்வா என்பவர் நபி தோழர் இல்லை.. அவர் காலத்தில் வாழ்ந்தவரும் இல்லை. இரண்டாவது யாரோ ஒருவர் கண்ட கனவு இறை வேதம் அல்ல.. நபி வழியும் இல்லை... கனவில் கண்டதுபோல் நடக்கணும் என்ற சட்டமும் இல்லை..... இவற்றுக்கெல்லாம் மேலாக நபியின் அங்கீகாரமோ..அல்லது நபிக்கு அறிவிக்கப்பட்ட சம்பவமும் இல்லை என்று எல்லோரும் ஒருமித்து நிராகதித்ததை கவிதை என்ற பேரிலும் மார்க்க பயான் என்ற பேரிலும் உளறல்களாக நபியை போற்றுகிறோம் என்று அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக சொல்லிக்கொண்டு இருகிறார்கள்.

எத்தனையோ எதிரிகள் நபிகளாருக்கு இருந்தும் இவனை மட்டும் அல்லாஹ் குறிப்பிட்டு சாபம் இட்டு... ஆயத்தை இறக்கி இருக்கிறான்.. ஆனால் நபியின் பிறப்பை போற்றுகிறோம் என்ற பேரில் நரகத்தில் எரிபொருளாக அல்லாஹ்வால் சொல்லப்பட்ட அபுலஹபை சங்கை செய்கிறார்கள்.

அவன் நபி பிறந்தார் என்று கொண்டாடவில்லை. நபி அவர்கள் பிறக்கும் போதே நபியாகவும் பிறக்க வில்லை... அவன் தனக்கு மகன் பிறந்தான் என்ற செய்தி கேட்டுதான் கொண்டாடினான்.. அடிமையை விடுதலை செய்தான்... என்றைக்கு நபி என்று தெரிந்ததோ எப்போது அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று (உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக 26 ;214)... என்ற அல்லாஹ்வின் வசனம் இறங்கிய பொது SAFA மலையில் தன் சொந்தகாரர்களை எல்லாம் அழைத்து இந்த ஓர் இறை கொள்கையை சொன்னார்களோ அன்றைக்கே மண்ணை வாரி வீசி, நீ நாசமாக போவாய்...என்று சொல்லி அல்லாஹ்வின் சாபத்தையும் பெற்றான். கவிதை கதை என்ற பேரில் அவனை சங்கை செய்கிறீர்களா, அல்லாஹ்வின் சொல்லுக்கு மாறாக?

இன்னொரு சம்பவமும் எந்த இறை வசனத்தில் அற்புதமாய் ..ஒரு முன் அறிவிப்பாக அல்லாஹ் தந்திற்கிறான்..இந்த குர்ஆன் வசனத்தை ஆராய்ந்த Dr .கேரி மில்லர் (Dr . Gary Miller ) என்ற கனடாவை சேர்ந்த கிறிஸ்துவ அறிஞர்... அதில் உள்ள அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்றார்.. அவர் செய்த ஆய்வின் படி, இது அல்லாஹ்வின் வார்த்தைதான் இல்லை என்றால்...எத்தனையோ கபீர்கள் அவனுடன் சேர்ந்து நபியை எதிர்த்தவர்கள் எல்லாம் பிற்கலத்தில் இஸ்லாத்தை தழுவி நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடி கொண்டனர். ..இவன் எந்த வசனம் இறங்கி 10 வருட காலம் வாழ்தும்..இஸ்லாத்தை ஏற்க வில்லை.. அல்லாஹ் கூறியபடி நரகவாதியாகவே இறந்தான்..அவன் மட்டும் நினைந்து இருந்தால் அந்த நபியையும் அவர் சொன்ன இறை வழியையும் பொய்யாக்க நினைத்து இருந்தால்...பேருக்காக இஸ்லாத்தை ஏற்று... முஸ்லிமாக தன்னை அடையாளம் காட்டி இருந்தால்... நபியின் பிரசாரத்தை அப்பவே பொய் என்றும் இறை வேதத்தை பொய் என்றும் நிருபித்து இருக்க முடியும்..அதற்கான எவ்வளவோ சூழ்சிகளை செய்த எதிரிகள் அபு லஹபை தூண்டி அவனை இஸ்லாத்தை ஏற்க சொல்லி செய்து இருந்தால் அன்றே எல்லா பிரசாரமும் பொய்த்து பொய் இருக்கும்.. அதற்கான எந்த வழியும் எண்ணத்தையும் கொடுக்காமல் அல்லாஹ் தன வேதத்தையும் தன் தூதர் சொன்னதையும் உண்மை என்று காட்டி விட்டான்.. இதுவே அவன் வேதம் என்பதற்கு சான்று என்று ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்றார்.

இப்படி எல்லாம் சம்பவங்கள் இருக்க இல்லாத ஒன்றை குர்ஆனுக்கு முரணான ஒன்றை கூறி அதனை சிந்திக்க வேண்டும் என்றும் தூண்டி இஸ்லாத்தின் பால் வருகின்றவரையும் திருப்பி விடாதிர்கள் என்பது தான் எங்கள் தாழ்மையான வேண்டுகோள்... இது பற்றி மேலும் விளக்கம் ஆதாரங்கள் வேண்டும் என்றல் கேளுங்கள் தருகிறோம்... மறுப்பு இருந்தால் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கொண்டு சொல்லுகள்.. உண்மையாக இருக்கும் பட்சத்தில் தவறுகளை திருத்தி கொள்கிறோம். மேலும் நபி அவர்களுக்கு தெரியாது ஒன்றும் இல்லை.. என்பது போலவும் சில ஆட்சேபனை குரிய வரிகள் எங்க சொல்லப்பட்டு இருக்கிறது... அதையும் வாய்ப்பு தந்தா விளக்கம் சொல்ல்லலாம்.. அல்லாஹ் மிக அறிந்தவன்..

Admin : தவறனா கவி வரிகள் இருந்தது. மார்க்கத்தில் இல்லாதது பரப்ப படலாம் என்று ஆதாரத்துடன் மறுத்து சொல்லிர்கிறோம்.. இதில் எந்த குழப்பத்திற்கும் பிரச்சனைக்கும் இடம் இல்லை... எங்கள் கடமை சுட்டி கட்டி விட்டோம்.. எங்கள் கருத்தில் தவறு இருந்தால் அவர்க்கும் மறுப்பு சொல்லலாம்.. ஆரோக்கியமான விதத்தில்.. எங்கள் கடமையே நான் செய்து விட்டோம்... இதை போஸ்ட் செய்தால் உங்கள் கடமையை நீங்க செய்தவர்களாக ஆவீர்கள்...... எதற்காகவோ பிரசுரம் பண்ணாமல் recycle bin லே போடுறதும் உங்க முடிவை பொருத்தது ....

நம்பிக்கையுடன், வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by vsm ali (kayalpatnam) [26 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6413

Reply to comment 30.

Ambulance சேவை என்பதே, விரைவாக வந்து உயிரை காப்பாற்றத்தான். நீங்கள் கூறுவதுபோல, அப்படி வந்திருக்கலாமே? இப்படி வந்திருக்கலாமே? என்று ஆம்புலன்ஸ் வருவதை அலைக்கழித்து, காலதாமதத்தால் அந்த உயிரை காப்பாற்ற முடியாமல் போகவும் வாய்ப்பு உண்டு.

நான் குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்த அன்று, இரவு 2 மணி. காலதாமதம் எற்ப்பட்ட்போது, KMTஐ தொடர்புகொண்டு கேட்டோம். அதற்க்கு அவர்கள், எங்கள் வீட்டுக்கு அருகில் மேடை ஒன்று போட்டிருப்பதாகவும், ஆம்புலன்ஸ் முஹ்யிதீன் பள்ளிவரை வந்து, சரியான spotக்கு வரமுடியாமல் திரும்பி விட்டதாகவும், தற்போது சதுக்கை தெரு, மற்றும் முத்தாரம்மன் கோவில் வழியாக வந்துகொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

இதனால் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதம் ஏற்ப்பட்டது. இந்த 30 நிமிடங்கள் நாங்கள் பட்ட துயரம் சொல்லி மாளாது. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்.

இது போன்ற துயரங்கள் யாருக்கும் வரக்கூடாது. ஆகையால்தான் இதுபோன்ற விழாக்களை, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல், சமுதாய நலக்கூடங்கள், பள்ளிவாசல்களில் நடத்துங்கள் என்று கூறுகிறோம். இதுபோன்ற விழாக்களே வேண்டாம் என்று ஒருபோதும் சொல்லவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. எதிர்பார்த்த ஒன்றுதான்!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [26 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6423

இறைமறையுடன் நபிமொழியும், நபிமொழியுடன் இறைமறையும் மோதிக்கொள்வதாக கூறி, நூற்றுக்கணக்கான பலமான ஆதாரம் உள்ள ஹதீசுகளை ,சஹாபாக்கள்,இமாம்கள், சன்மார்க்க அறிஞர்கள் தரும் விளக்கங்களை எல்லாம் ஆராயாமல், தமது அரைகுறை புத்தியால் ஆய்வு செய்து, தள்ளுபடி செய்துவிட்ட மேதைகள் மற்றும் நவீன அறிஞர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்.

இப்போது நான் ஒரே ஒரு கேள்வியை மாத்திரம் முன்வைக்கிறேன். அருமை நாயகம் ( ஸல் ) அவர்கள், தமது பெரிய தந்தையான அபூ தாலிப் அவர்களுக்கு, நரகவேதனை இலேசாக்கப்படும் என்று சொன்ன ஹதீஸை நம்புகின்றீர்களா? இல்லை அதனையும் சீறாப்புராணம், மஸ்தான் சாஹிப் பாடல்களுடன் சேர்த்து விட்டீர்களா? என்பதை சொல்லவேண்டும். உங்கள் பதிலின் அடிப்படையில், இன்ஷா அல்லாஹ் விவாதத்தை தொடர்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. இஸ்லாத்தின் பெயரால் கட்டுக்கதைகள்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [26 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6424

அல்குர்ஆனில் அபுலஹபின் கையே நாசமாகட்டும் என்று சொன்னபிறகு, அதில் ஒரு பாகமாகிய விரலில் மட்டும் தண்ணீர் வரும் என்று கூறுவது அல்லாஹ்வின் சொல் தவறு என்று வந்து விடாதா. (அல்லாஹ் அனைவர்களையும் மன்னிக்கட்டும்) இது எல்லாம் கற்பனைக் கதைகள்.

அதிக விபரம் தேவை என்றால், கீழ் உள்ள சுட்டியை பார்க்கவும்... இஸ்லாத்தின் பெயரால் கட்டுக்கதைகள் என்ற தலைப்பில் பாகம் 7 - நரகம் தீண்டாத அபுலகஹபின் விரல் என்ற பாகத்தை படிக்கவும்.

http://onlinepj.com/books/islathin-peyaral-karpanai-kathaikal/

வல்ல ரஹ்மான் அனைத்தையும் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. கொடுமையிலும் கொடுமை!
posted by kavimagan (dubai) [26 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6425

தன் வாழ்நாள் முழுமையும் நபிமொழி குறித்த ஆய்விற்காக செலவழித்து உருவாக்கிய புஹாரி என்னும் மாபெரும் பொக்கிஷத்தின், பல்வேறு நபிமொழிகளை மறுப்பவர்கள், திருமறையுடன் நபிமொழி ஒருபோதும் மோதுவதில்லை என்ற கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து இந்த ஹதீசுகளின் சரியான விளக்கத்தை தந்திருக்கும் ஆய்வாளர்களையும் மறுத்து விட்டு, கடைசியில் ஆன்லைன் பிஜேவை ஆதாரமாக காட்டுவது கொடுமையிலும் கொடுமை.

நீங்கள் வேண்டுமானால்,சஹாபாக்களையும், இமாம்களையும், ஸஹிஹ் புஹாரியையும் மறுத்துவிட்டு, இவரைப் போன்றவர்களின் ஆய்வை பின் பற்றுங்கள், எங்களைப் பொறுத்தவரை திருமறை சரியானது. நபிமொழி நேரானது. அதன்படியே வாழ்ந்து மறைந்த நபித் தோழர்களின் வாழ்வு புனிதமானது. இமாம்களின் ஆய்வு நேர்மையானது. அதன்படியே வாழ்வோம்! இன்ஷாஅல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோம்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Ansari (Kowloon) [27 July 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 6428

என்ன சகோதரர் சாளை S.I.ஜியாவுதீன், நூறாண்டுகள் முன் வந்த மஸ்தான் சாஹிப் அப்பா அவர்கள் சொல்லுவதை ஏற்கக்கூடாது என்று சொல்லி விட்டு நேற்று வந்த பீ ஜே உடைய வெப்சைட்டில் ஆதாரம் சொல்லி இருகின்றீர்கள்.. அவர் ஆதாரம் காட்டுவதையும், சொல்லுவதையும் மட்டும் நீங்கள் ஏப்படி ஆராய்ந்தீர்கள் என்று சொன்னால் நல்லது..

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத ஒன்றை பிதுஅத என்று கூறும் உங்களை போன்ற கூட்டங்கள், புஹாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் மட்டும் எந்த காலத்தில் வந்ததாம். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்களா.. எனக்கு பிறகு புஹாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் போன்ற கிரந்தம் வரும் அதை பின்பற்றுங்கள் என்று..

பிதுஅத் என்றால் இதுவும் பித்அத்தான்! நான் இப்படி கூறியதும் அது அப்படி இது அப்படி என்று சொல்லக்கூடாது.. என்னுடைய வினா.. "புஹாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் போன்ற கிரந்தத்தை பின்பற்ற சொல்லி நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஆதார பூர்வமாக நிருபியுங்கள்? அல்லது பீ ஜே உடைய வெப்சைட்டில் ஆதாரம் யெடுக்க வேண்டுமா? போன்ற கேள்விக்கு பதில் தாருங்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Mogdoom (Kolkata) [27 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6429

அஸ்ஸலாமு அலைக்கும் ஜியாவுதீன் காக்கா நீங்கள் யாரையும் தக்லீது செய்ய தேவையில்லை என்ற கொள்கையில் இருப்பவர்கள் ஆனால் நீங்கள் குறிப்பிட்டதை போன்று மேலதிக விபரத்திற்கு எதோ ஒரு வெப்சைட் தேவை இல்லை நீங்கள் சொல்வது போல் குரான் மற்றும் ஹதீதை நீங்களாக படித்து ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டியது.

அப்படி இல்லாமல் யாருடைய விளக்கத்தையும் கேட்கவேண்டாம். அப்படி கேட்பதாக இருந்தால் சங்கைக்குரிய இமாம்களின் விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by A.W.S. (Abdul Wahid) (Kayalpatnam) [27 July 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6431

I do not drag myself into this controversial argument. But one thing I like to remind all. Allay says in Al-Quran (36-69) that "We have not instructed the (Prophet) in Poetry, nor is it meet for him: this is no less than a Message and a Qur'an making things clear" . The translation goes like this "We have not taught him poems nor it is necessary for him (Prophet)...........".

More over in other place He says "Those who follow Poets are idlers (வீணர்கள்)".

Kavigar Vairamuth himself said . "கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு". Poems/Poetry are full of lies Whether in Arabic or Tamil or in any other language for that matter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Salai Sheikh Saleem (Dubai) [27 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6435

தம்பி ஜியாவுதீன் அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.

கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாமா? கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒருவர் அதற்க்குண்டான விளக்கம் தரும் வரை பொருத்து இருப்பதுதான் சரியான முறை. அதற்குள் அவர்சரப்பட்டு சீறாப்புராணம் மஸ்தான் சாஹிப் பாடல்கள் என்று பரிகாசம் செய்வது ஒரு முறையான விவாதமாகாது. காரணம் நீங்கள் தனி நபரை கேலி செய்ய நினைத்து அது நபிமொழிக்கு எதிராக நீங்கள் அறிந்தோ அறியாமலோ திரும்பிவிடக்கூடாது என்பதுதான் எனது ஆதங்கம்.

நூற்றுக்கணக்கான பலமான ஆதாரம் உள்ள ஹதீசுகளை, சஹாபாக்கள், இமாம்கள், சன்மார்க்க அறிஞர்கள் தரும் விளக்கங்களை எல்லாம் நம்பாமல் ஜனாப் PJ அவர்கள் தரும் ஆதாரங்கள் மட்டுமே நம்பகரமானது என்று நினைக்கும் உங்கள் அறியாமையை கண்டு வியக்கிறேன்.

இஸ்லாத்தில் பகுத்தறிவு என்பது ஒரு எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். காரணம் நாம் எல்லோரும் ஓர் இறை நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக ஈமான் கொண்டுள்ளோம். க'பாவை சுற்றி தவாப் ஏழு முறை ஏன் செய்யவேண்டும் என்றால் அது அப்படித்தான் செய்யும்படி இறைவன் கூறி உள்ளான் அதன்படி நாம் செய்கிறோம்.

அதே போலே இறை வாசகங்களே பலமுறை புனித குர்ஆனிலேயே ஓர் இடத்தினின்றும் மற்றொரு இடத்தில முரண்பாடாக தோன்றலாம். காரணம் குர்ஆன் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனிடம் இருந்து இறங்கிய வாசகங்களே. "நீங்கள் மது அருந்தி இருக்கும் பொது தொழுகையின் பக்கம் வராதீர்கள்" என்ற இறை வாசகத்திற்கு "அப்படியானால் மது அருந்தலாம் - அருந்தி விட்டு தொழ மட்டும் கூடாது என்றால்" ,, இப்படி எத்தனையோ வாதங்களை நாம் முன் வைக்கலாம் - இப்படிப்பட்ட வாசகங்களை மட்டுமே மூலதானமாய் வைத்து முரண்பாடான விவாதங்கள் செய்யும் கூட்டத்தாரை அல்லாஹ் கவனித்துகொள்ளட்டும்.

அதேபோலே, தம்பி ஜியா சொல்வதுபோலே குர்ஆனில் அல்லாஹ் அபுலஹபின் கையே நாசமாகட்டும் என்று சொல்லி இருப்பது சரிதான். எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு அந்த கரிந்த கையின் விரலிலிருந்து தண்ணீர் வரவழைக்க முடியுமா அல்லது இல்லை! சொன்னது சொன்னதுதான்! அவனால் அதுவும் முடியாது என்று வாதிக்கிரீர்களா?

ஜனாப் Cnash அவர்களே, எப்படி ரசூல் (ஸல்) அவர்கள் பெரியதந்தை அபுதாலிபிற்கு நரகமோ அப்படிதான் அபூ லஹபிர்க்கும் என்பதில் எந்த விவாதங்களும் இல்லை. அல்லாஹ்வின் இறைதூதரின் மீலாதை கௌரவித்து ஒரு அடிமையை விடுதலை செய்ததற்காக - ஒரு நல்ல அமல் செய்ததற்காக அவருக்குண்டான நற்கூலியை அவர் நரகத்திலும் பெற்றுக்கொண்டார். என்பதுதான் வாதம்.

அபூலஹப் அவர் மகனிற்காக அவர் ஒரு நபி என்று தெரியாத பட்சத்தில் செய்து இருந்தாலும் - அவர் அறியாமல் செய்த ஒரு நல அமலுக்கு அல்லாஹ் இடத்தில கண்டிப்பாக நற்கூலி கிடைக்கும் என்பதில் உங்களுக்கு எதுவும் சந்தேகம் உண்டா? யாரோ DR. GARY MILLAR உடைய கருத்தை ரசிக்க தெரிந்த உங்களுக்கு இஸ்லாத்தின் மிக புனித கிரந்தங்களில் ஒன்றாகிய புஹாரியில் பதிவு செய்திருக்கும் ஹதீஸ்கள் ஆதாரங்கள் அற்றவை என்று சிலர் கூறுவதை எப்படி ஜீரணம் செய்ய முடிகிறது?

இப்படியே அதோடு இது இதோடு அது மோதுகிறது என்ற கோணத்தில் பார்க்காமல் இறைமறையும் நபிமொழியும் ஒரு போதும் மோதுவது இல்லை என்ற கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தால் நன்மையே கிடைக்கும்.

அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by jamal (colombo) [27 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6436

புனித மக்கா நகரிலிருந்தும், அல்கோபர் நகரிலிருந்தும் இருவரும், காயல்பட்டணத்திலிருந்து ஒருவரும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் உண்மைக்கு மாறானதை எழுதியிருப்பதற்கு மறுப்பாக எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இத்துடன் விவாதம் முடிவடைந்துவிட்டது என்று மாடரேட்டர் எழுதிய பிறகும் இந்த மூவரின் கருத்துக்கள் பதியப்பட்டு இருக்கிறது. ஆதலால் இதையும் தாங்கள் பதிவீர்கள், தங்கள் நடுநிலைமையான தன்மையை நிரூபிப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

ஹலோ வி.எஸ்.எம். அலி அவர்களே!
நீங்கள் ஆம்புலன்ஸுக்கு சொல்லும்போதே எங்கள் வீட்டின் முன் மேடை இருக்கிறது. ஆம்புலன்ஸ் வர சிரமமாகும் என்று சொல்லியிருப்பின், ஆம்புலன்ஸ்காரரும் மாற்று வழியில் வந்திருப்பார். நீங்கள் அதைச் செய்யவில்லை. மேலும் குத்துக்கல் தெருவிலிருந்து சதுக்கைத் தெரு சுற்றிவர அரை மணி நேரமாகி விட்டது என்று கூறும் கூற்று நகைப்பிற்குரியது. ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

போக்குவரத்திற்கு முற்றிலும் இடையூறு பண்ணி நமது ஊரில் ரோட்டை அடைத்து கல்யாணம், மற்ற விசேஷங்கள் நடத்துகிறார்கள் என்று நமது இணையதளம் செய்தி வெளியிட்டபோது நீங்கள் இந்த மாதிரி கருத்துக்கள் எழுதியிருப்பின் அது உங்களின் சமுதாய மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கும். ஆனால் மீலாது விழா என்று வரும்போது மட்டும் இதை எழுதுவது உங்களின் மார்க்க வெறுப்பையே காட்டுகிறது.

அது சரி தற்போது உங்கள் சொந்தத்தில் நடைபெற்ற திருமணத்தில் ரோட்டில் பந்தல் போட்டு அடைத்தார்களே! அப்போதாவது சொன்னீர்களா? ஏன் உங்கள் சொந்தமாச்சே! சொல்லியிருக்க மாட்டீர்கள்.

அடுத்து சாளை ஜியாவுத்தீன், மற்றும் உயளொ க்கு, ஆரம்பத்தில் இஸ்லாத்தில் குர்ஆனுக்கு அடுத்தபடியான நம்பிக்கையான கிதாபு என்பது புஹாரி ஷரீபு என்பது அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இன்றுவரை இதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால் தற்போது, புஹாரி ஷரீபில் வந்திருக்கும் அபுலஹப் நரகத்தில் படும் வேதனையைப் பற்றியுள்ள ஹதீது பற்றி விவாதப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் புஹாரி ஷரீபில் உள்ள அனைத்தும் நம்பகத்தகுந்தவை எனும்போது, இந்த ஹதீதை மட்டும் இந்த இருவரும் மறுக்கிறார்கள், கட்டுக்கதை என்கிறார்கள், எல்லோர்களாலும் ஒருமித்து மறுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். யார் மறுத்தார்கள்? ஹதீதுக்கலை நிபுணர்களா? மகான்களா? ஆதாரம் தரவில்லையே! பலவீனமான, பலமான ஹதீதுகள் என்று பிரிப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? அல்லாஹ்வா? ரஸூலா? ஏன் இப்படி மாறுபட்டு மக்களை குழப்புகிறீர்கள்?

எதற்கும் ஹதீது, ஆயத்துக்களை ஆதாரம் காட்டச் சொல்லும் இவர்கள் ஆதாரம் காட்டுவதோ பி.ஜே. என்பவர் எழுதிய கற்பனைகளைத்தான். ஏன் இவர்கள் ஹதீது, ஆயத்துக்களை ஆதாரமாக எடுத்துத்தர முன்வரவில்லை? இவர்களிடம் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என்பதுதான் அதற்கு அர்த்தம்.

எத்தனையோ குர்ஆன் ஆயத்துக்கள் ஒன்றிற்கு மற்றொன்று முரணாக இருப்பது போலவும், அதேபோல் ஹதீதுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டது போலவும் தோன்றும். ஆனால் அல்லாஹ் சொன்ன, நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிமுறை எவ்வகையிலும் முரண்பட்டது இல்லை என்பதே ஈமானின் உறுதியான நிலை. அப்படியிருக்கும்போது, இவர்கள் இவ்வாறு சொல்வது ஈமான் உறுதியாக இல்லாதவர்கள் சொல்லும் சொல்லாக அல்லவா தெரிகிறது.

கனவுகள் மார்க்கமாகாது என்று சொல்கிறீர்கள்? தற்போது நாம் சொல்லிக் கொண்டிருக்கும் பாங்கு எதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது?

அல்லாஹ் நமது இறுதி நபியை தனது ஹபீபாக தேர்ந்தெடுத்து, இவ்வுலகிற்கு அனுப்புகிறான். அவர்களின் மீலாது (பிறந்த) தின விழாவைக் கொண்டாடும் முகமாகத்தான் அல்லாஹ் அதற்காக ஒரு அடிமையை விடுவித்த அபுலஹப் நரகவாதியாக இருப்பினும் அதற்காக சிறிய சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறான் என்றால் அவன் தன் ஹபீபின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறான் என்பது இதன்மூலம் ஆதாரமாகிறது அல்லவா?

ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதும், ஏற்காததும் அல்லாஹ்வுடைய திருச்சித்தம். அவனுடைய செயல்பாடுகளில் இதை அவன் ஏன் செய்யவில்லை? இதை அவன் ஏன் செய்தான்? என்று குறுக்கீடு செய்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? ஏன் நீங்கள் அந்த படைத்த நாயனுடன் போட்டிப் போடுகிறீர்களா? நீங்கள் மனம் போன போக்கில் சொல்லுவதெல்லாம் இஸ்லாம் என்று சொன்னால் அதை நம்பி இஸ்லாத்திற்கு வருபர்கள் கதி அதோகதிதான்!

அல்லாஹ் நினைத்திருந்தால்.... என்று அடுக்கிக் கொண்டே போய் இறுதியில் எங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகம் செய்த பிரச்சாரத்தை பொய்....(நவூது பில்லாஹி மின்ஹா)... என்ன வார்த்தைகள் இது? இதுதான் நீங்கள் அல்லாஹ், ரஸூல் மீது கொண்ட நம்பிக்கையா?

எதற்கும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமெனில் எங்களிடம் கேளுங்கள் நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம். அதுவும் ஆயத்து, ஹதீதுகளிலிருந்துதான் தருவோம். சிலர் சொன்ன தான்தோன்றித்தனமாக சொல்லிலிருந்து அல்ல.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Niyaz (Niyaz) [27 July 2011]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 6439

I APPRICIATE YOUR COMMENT MR.A.W.S.Abdul Wahid.

SITHAN NIYAZ,PFIZER INC.
RIYADH,SAUDI ARABIA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. படித்ததில் பிடித்தது / சிறந்தது
posted by mauroof (Dubai) [27 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6440

எனது கருத்து அனுப்பப்படும் வரை பதிவு செய்யப்பட்டுள்ள 46 கருத்துக்களில் 32-வது கருத்தே சிறந்தது. சத்தியத்தை சொல்கிறோம் என்ற போர்வையில் தங்களை தாங்களே அறியாமல் இப்படியே சண்டை பிடித்து கொண்டு இருங்கள். தனி மனித வாழ்வும் சமுதாயமும் வளம் பெரும்???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by shahul Hameed (Abudhabi) [27 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6443

அப்துல் வாஹித், புனித குரானை நன்றாக படித்து விட்டு எழுதுங்கள்

26:224. இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.

26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?

26:226. இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள.

26:227. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.

அடுத்த ஆயத்தே விளக்கமாக அமைகிறது,காபிர் களுக்கு உண்டான ஆயத்தே முமீன்கலுக்கு சொல்லாதீர்கள். எத்தனை ஹதீஸ் வேண்டும் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. வாழ்க வளமுடன்
posted by ahmed meera thamby (makkah) [27 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6445

மாஷா அல்லாஹ்
நமதூரில் எத்தனை மார்க்க அறிஞ்சர்ஹல்? வால்ஹ வளமுடன் நமதூர் ஒற்றுமை ஓங்கட்டும்,

கொள்கை அவரவர் உரிமை. ப்ளீஸ் நாம் ஒற்றுமையா இருப்போமே வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் பாது காப்பனாஹா ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

அன்புடன்
நாம் தமிழன்__நாம் காயலான்
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. கவிதையும் பொய்யும்
posted by Salai Sheikh Saleem (Dubai) [27 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6446

சகோதரர் எனது பால்ய நண்பர் அப்துல் வாஹித் அவர்களே!

அருள்மறை திருக்குர்ஆனே ஓர் இலக்கிய கவிதைக் களஞ்சியம்தான். நீங்கள் எடுத்துக்காட்டிய திருமறை வசனம் சரியானது. ஆனால், அர்த்தத்தைத்தான் உங்கள் தேவைக்கேற்றவாறு எழுதி உள்ளீர்கள்.

இந்த வசனம் மூலமாக, இறைவன் சொல்லவருவது, இலக்கிய நயமிக்க இந்த குர்ஆன் தன்னால் வழங்கப்பட்டது. இது முஹம்மத் நபி அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை உணர்த்தும் முகமாக, நபி அவர்களுக்கு தான் கவிதையைக் கற்றுத்தரவில்லை என்றும் அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லை என்றும், தனது ஆளுமைத் தன்மையை பறைசாற்றுகின்றான்.

மேலும், இதற்கு மாறுபாடான கவிஞர்களைக் குறித்தே, அவர்களை பின்பற்றுபவர்கள் வீணர்கள் என்றும் கூறுகிறான். இறைமறையின் வசனங்கள் கடல் ஆழத்தையும் மிஞ்சும் அளவிற்கு கருத்தாளம் மிக்கவை அவற்றை எப்படியும் நமது இஷ்டப்படி வளைத்துகொள்ளலாம் என்பது மோசக்கரர்களின் யுக்தி.

எனக்குள்ள மனவேதனை எல்லாம், எத்தனையோ நல்ல பல கவிஞர்கள், நாயகம் (ஸல் ),உமர் ( ரழி ), மற்றும் நபித்தோழர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்கள் தெளிவாக இருக்கும்போது, பொத்தாம்பொதுவாக எல்லா கவிஞர்களையும் பொய்யர்கள் என்று தாங்கள் சித்தரித்து இருப்பதுதான்.

ஸஹிஹ் பஹாரி மறுக்கப்பட்டு, இப்போது வைரமுத்து வந்திருப்பது பற்றி என்ன எழுதுவது?
கவிதைக்குப் பொய்யழகு என்று எவனோ சொன்னான் என்றால் அவர்கள் பொய்யர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையின் நிழலில் நாம் அனைவரும் வாழ்வதற்கு வல்ல நாயன் துணை புரிவானாக! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. வாஹித் காக்கா இது நியாயமா?
posted by kavimagan m.s.abdul kader (dubai) [27 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6447

நான் மிகவும் மதிக்கின்ற அப்துல் வாஹித் காக்கா அவர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

கவிதை மற்றும் கவிஞர்களைக் குறித்த இறைவசனத்தை தாங்கள் மொழிபெயர்த்த அல்லது முனைந்த விதம்கண்டு பலத்த அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் அந்த வசனத்தின் பொருளாக சொல்லவந்தது சரிதானா என்பதை உங்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

அடுத்து வைரமுத்து அவர்களை மேற்கோள் காட்டி, எந்த மொழியில் எழுதினாலும், கவிதை பொய், கவிஞர்கள் பொய்யர்கள் என்று எழுதி இருந்தீர்கள்.
தங்களின் மேலான பார்வைக்காக, எங்கேயும், எதோடும் மோதாத சில புஹாரியின் ஹதீஸ் எண்களை இங்கே குறிப்பிடுகிறேன். தயவுசெய்து, அவற்றையெல்லாம் படித்து பார்த்துவிட்டு தங்களது மனசாட்சியின் (இருந்தால்) குரலை இதே வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஸஹிஹ் புஹாரி எண்கள் : 453, 1008, 1009, 1155, 1889, 2530, 3213, 3531, 3841, 3906, 3926, 3973, 4032, 4141, 4145, 4196, 4756, 5654, 5677, 6148, 6152, 6153, 6891, 7231, 6145.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார். ) [27 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6449

அல்லாஹ்வின் நல் அடியார்களே.. இந்த விவாதத்தை கொஞ்சம் விரிவாக அலசினால் தான் நல்லது.. முதலில் இருந்து வரிசையாக வரலாம்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மௌனமாகக் கலைந்து செல்ல, அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமின்றி "இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ!" என்று சொன்னான்.

நூல் : புகாரி 4770, 4801, 4971, 4972,4801, 4971, 4972 இதை கண்டித்துதான் வல்ல ரஹ்மான் அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும் அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது. (அல்குர்ஆன் 111 )

இந்த வசனங்களை இறக்கினான். இதில் வல்ல அல்லாஹ் நெருப்பில் அவனும்(அபூலஹபை) அவனுடைய மனைவியும் கருகுவார்கள் என்று கிளியர் ஆக உள்ளது.

இதுவரை யாருக்கும் முரண்பாடு இல்லை தானே. அடுத்த பல்வேறு வசனங்களை பார்க்கலாம்..

1 . (ஏக இறைவனை) மறுத்து மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் (2:161,162)

2 .அவர்கள் தாம் மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:86)

3 .அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் (3:88,89)

இந்த வசனங்கள் எல்லாம் வெறும் சாதாரண காபிர்களை பற்றிய வசனங்களும், எச்சரிக்கைகளும். இதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

சாதாரண இறைமறுப்பாளர்களுக்கே வல்ல ரஹ்மான் நரகத்தில் எந்த சலுகையும் கிடையாது என்று கூறிய பிறகு, மிகக்கொடியவனான, இவனை சபித்து வல்ல இறைவனே ஒரு அத்தியாயத்தையே இறக்கி, இறுதி நாள்வரை அனைவர்களும் இதை ஓதி,ஓதி சபிக்கும் அளவிற்கு மோசமானவனான அபுலஹபுக்கு சலுகை கிடைக்கும், கைவிரலில் தண்ணீர் சுரக்கும் என்று கூறுவது உண்மையான செய்தியாக இருக்குமா?

சரிங்க சகோதரர்களே.. இனி இந்த ஹதீஸை பாருங்கள்..

சுவைபா என்பவர் அபூலஹபின் அடிமையாக இருந்தார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தான். சுவைபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டியிருக்கிறார். அபூலஹப் மரணித்த பின் அவனது குடும்பத்தில் ஒருவரின் கனவில் மோசமான நிலையில் அவன் காட்டப்பட்டான். "நீ சந்தித்தது என்ன'' என்று அவர் அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "சுவைபாவை நான் விடுதலை செய்ததால் இதில் நீர் புகட்டப்படுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சந்திக்கவில்லை'' என்று கூறினான். நூல் : புகாரி 5101
இந்த ஹதீஸ் புகாரியில் உள்ள ஹதீஸ் தான்.

இதை அறிவிப்பவர் உர்வா என்பவர். இவர் அந்த கால கட்டத்தில் பிறந்தவரா? இல்லை.. நபித்தோழரா, அதுவும் இல்லை. எந்த காலத்திலும் அல்குர்ஆனும், நபி மொழியான ஹதீஸும் முரண்படுமா? கண்டிப்பாக முரண்படாது. நோ சான்ஸ். ஆனால் இங்கு அது மாதிரி தோற்றம் தெரிகிறதே..

வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில், திரும்ப திரும்ப "சிந்தியுங்கள்" , "சிந்தியுங்கள்" என்று கூறி, அப்படி சிந்திப்பவர்களுக்கு நேரான வழியுண்டு கூறுகிறானே.. ஆகவே சிந்தித்து பாருங்கள், கண்டிப்பாக அல்குர்ஆனில் பிழை இருக்காது.

எங்கு, எதில் சிறுபிழை உள்ளது என்று தாங்களே சிந்தித்து முடிவு எடுத்துக்கொள்ளுங்கள். யாரையும் குறைத்து மதிப்பிடுவதோ, மனதை புண்படுத்துவதோ என்னுடைய நோக்கம் அல்ல. நானும் நன்றாக இருக்கனும், மற்றவர்களும் என்னை விட நன்றாக இருக்கனும் என்ற ஆவல்தான் அதிகம் உண்டு.

வல்ல ரஹ்மான் அனைவர்களுக்கும் நல்ல, நேரான வழியை காட்டி, நம் அனைவர்களையும் சுவனத்தில் ஒன்று கூட செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by vsm ali (kayalpatnam) [27 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6450

கொழும்பு ஜமால் காக்கா , நீங்கள் , நான் எழுதியவற்றை சரியாக படிக்கவில்லை என்று எண்ணுகிறேன். சரியான இலக்கை அடையமுடியாமல் ஆம்புலன்ஸ் திரும்பி விட்டது என்று சொன்னேன். ஆனால் நீங்களோ , அதை நம்ப முடியவில்லை , இதை நம்ப முடியவில்லை என்று விதண்டாவாதம் பண்ணுகிறீர்கள். சம்பவம் நடந்தது இரவு இரண்டு மணி. மேடை , அன்று இரவில்தான் போட்டு இருக்கிறார்கள் , அது எங்களுக்கு தெரியாது . மேலும் , தெருவை அடைத்து திருமண காரியங்கள் நடத்துவதை பற்றி பலமுறை , பல விவாதங்களில் சொல்லி இருக்கிறேன். தெருவில் பந்தல் போடுவது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் தெருவை அடைத்து , மணிக்கணக்கில், நாட்கணக்கில் போக்குவரத்துக்கு இடையூறு பண்ணுகிறார்களே ! அதுதான் வேண்டாம் என்று சொல்கிறேன். நீங்கள் தொடர்ந்து இந்த kayal .com செய்திகளை படித்து வருபவராக இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது , நீங்கள் இந்த இணைய தளத்திற்கு புதியவர்போல தெரிகிறது. மேலும் நான் மார்க்கத்திற்கு புறம்பானவன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். நம்முடைய மார்க்கமும், பிற மதங்களும் அடுத்தவருக்கு இடையூறு பண்ணுங்கள் என்று ஒருபோதும் சொல்லியது இல்லை. ஆனால் ஊரில் இருக்கும் ஒருசில " adamants and orthodoxies " இப்படி அடுத்தவருக்கு இடையூறு பண்ணிக்கொண்டு , தாங்கள்தான் சிறந்த மார்க்கவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவலியும் , காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள் . என் உறவினருக்கு நேர்ந்த அந்த துயர சம்பவம் , உங்களுக்கு நேர்ந்திருந்தால் நீங்கள் இப்படி பேசுவீர்களா ? ஆகையால் உங்கள் எண்ணங்களைத்தான் சற்று மாற்றிக்கொள்ள வேண்டும் . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by kavimagan m.s.abdul kader (dubai) [27 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6451

அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

பதிவு எண்:39 ல் என்னால் கேட்கப்பட்ட கேள்வி,பதில் சொல்லப்படாமலேயே இருக்கிறது. அதை மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து விட்டு பதில் சொல்வார்கள் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அபூலஹப் குறித்த திருமறையின் எந்தக்கூற்றையும் நாம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. அதே நேரத்தில் நபிமொழியையும் புறந்தள்ளாமல் பொருத்தி பார்ப்பது என்பது நமது சிற்றறிவால் முடியாத ஒன்று.அதனால்தான் இதைப்பற்றி காலம் காலமாய் ஆய்வு செய்த அறிஞர்களின் கிதாபுகளும்,அதன் பாகம் முதல் பக்கம் வரை ஆதாரமாக தரப்பட்டுள்ளது.

சஹாபாக்களையும்,இமாம்களையும் கூட ஏற்கமறுக்கும் நீங்கள் சொல்லும் விளக்கத்தை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?

எதற்கெடுத்தாலும்,பித்அத், பித்அத் என்று முழக்கமிட்டு, பித்அத் எல்லாம் வழிகேடே! வழிகேடு எல்லாம் நரகத்திற்கே என்று கூறும் நீங்கள், இரட்டை குத்பா மற்றும் முத்தலாக் விஷயத்தில்,சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட உமர்(ரழி) அவர்களையும், உதுமான்(ரழி) அவர்களையும் பித்அத் வாதிகள் ஆக்கிய இவர்கள், அந்த இரு கலீபாக்களால் அறிவிக்கப்பட்ட,சாட்சியம் பகரப்பட்ட ஹதீசுகளை எல்லாம் புறம் தள்ளி விடுவார்களா? இப்படியே நீக்கிக் கொண்டே போனால் இது எதில் போய் முடியும்?

இமாம்கள்,சஹாபாக்கள்,நபிமொழிகள் மறுக்கப்பட்டு, திருமறையின் வசனங்கள் ஒன்றோடொன்று மோதுகிறது என்று நமது சிற்றறிவுக்கு ஏற்றார்போல் சிந்தித்துக் கொண்டே போனால் மனிதன் நாத்திகனாக மாறிவிட மாட்டானா? அல்லாஹ்தான் அந்த நிலைக்கு தள்ளப்படாமல் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by A.W.S. (Kayalpatnam) [27 July 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6452

We people fail to understand the fact that Imam Buhary did not know many hadiths what we knew today. That applies to Imam Muslim, Imam Thirmithi et al. Just because we have the collections of those respectable Imam’s great works (efforts).

Even though Islamic believes are based on Holy Quran and Authentic hadiths, we simply can not equate Quran with hadiths. We can’t seek parity with the two. Quran is the word of Allah.He is the author of It. He has authenticated It. He has promised to safe guard It from corruption, additions and deletions till eternal. But that is not the case with the hadiths. Hadiths are neither authenticated by Allah nor by His Prophet (sal). Prophet (sal) was not the author of the Hadiths. Hadiths are passed on to next generation by oral tradition. They were written almost if not at least a century after the demise of the Prophet (sal). Therefore they were not authenticated nor approved by Prophet (sal). Above all Allah never promised to safe guard them. Thus there bound to be additions and deletions, sometimes corruptions.

As far Imam Buhary’s collection is concern, it is called ‘Shaheehul Buhary”. But he never named it such. It was named later by someone (unknown). He even doubted some of the hadiths authenticity.

Let me come to the point. A person cannot be called as a Muslim if he/she doubted even an iota of Holy Quran. But that is not the case with hadiths, in case he/she refuses to believe a hadiths to be true just because he/she believed it contradicts Quran.

If there is any contradiction (or appear to contradict) between the Quran and Hadiths, we must fine tune the hadiths accordance with the Quran. Not the other way around. People specially in this page are fine tuning the Quran according to a hadiths in order to justfy a Hadiths which is believed to be weak.

Allah knows the best.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. சட்டி சுட்டதடா.... கை விட்டதடா.....
posted by zubair (riyadh) [27 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6454

அஸ்ஸலாமு அலைக்கும். அட்மின் அவர்களே..... எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயத்தை தருவானாக நாங்கள் படித்து பார்க்காத பலதும் நீங்கள் படித்து இருக்கிறீர்கள் தலை சுற்றி இருக்கும். ஏற்கனவே... இரண்டு நாள் கழித்து தான் சைட்டை பார்த்து இருக்கிறீர்கள் இனியும் இரண்டு நாள் லீவு போட்டு விடாதீர்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Abu Misbah (KSA) [27 July 2011]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6455

மாஷாஅல்லாஹ் நமது மக்கள் புஹாரி இமாம் அவர்களுக்கே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன நம் முன்னோர்கள் எல்லாம் மௌலூது ஓதியதாலும் மீலாது கொண்டாடியதாலும் பித்அத் செய்து மரணித்து விட்டார்கள். என்ன செய்வது 1200௦௦ வருடங்களுக்கு முன் வந்த இமாம்களுக்கு தெரியாதது நமக்கு தெரிந்து விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Cnash (Makkah ) [28 July 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6456

இந்த விவாதத்தில் எதிர் கருத்து சொன்ன சகோதரர்கள். சலீம், ஜமால், அன்பு நண்பர் கவிமகன் எல்லோரும் ஏதோ புஹாரி ஹதீஸ் சந்தேக பட்டுவிட்டீர்கள்.. நேற்று வந்த PJ சொன்னது வேதம் போலவும்.. அதை நாங்க பிடித்து கொண்டு அலைவது போலவும் சொன்னீர்கள் அதை விட ஒரு படி மேல போய் சலீம் காக்க எவனோ ஒரு Garry Miller நம்புற நீ புஹாரி யை நம்ம இல்லையா என்று கேட்டீர்கள்..(எவனோ ஒரு Garry Miller கூட அறிவு சார்ந்து இந்த குர்ஆனை ஆராய்ச்சி செய்து இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டு விட்டார்... நாம் ஏன் இன்னும் மார்க்கம் முன்னோர் என்ற பெயரில் இதயத்தை பூட்டி வைத்து கொண்டு இருக்கிறோம்?)

சரி..Br . ஜியாவுதீன் சுட்டி கட்டிய PJ யின் ஹதீஸ் சம்பந்த பட்ட கருத்துக்கு வானத்திற்கும் பூமிக்கும் குதித்த நீங்க... அதே கருத்தை சொல்லி இருக்கும் எங்களை விட நீங்க அதிகமாக போற்றும் இமாம்கள் அறிஞர்கள் சொல்லும் கருத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

நம்முடைய மத்ஹாப் பின் இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ...

ஒரு ஹதீஸ் சரியானது என்பதற்கான நிபந்தனைகள் நிறைவாகி விட்டால் அதை குர்ஆன் உடன் ஒப்பிடுவது கட்டயமா? கட்டாயம் இல்லை. ஏன் என்றால் அது குர்ஆன் உடன் முரண்படாமல் இருக்கும்போதுதான் நிபந்தனையே பூர்த்தியாகிறது...(இமாம் ஷாபி ..அல்மஹ்சூல் பக்கம் 4 : 438 )

இமாம் இப்னு கய்யூம்...இட்டு கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆன் உடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டு இருக்கும் (அல்மனாருல் முனீப் பக்கம் 80 )

இமாம் குர்துபி....ஒரு ஹதீஸ் அல்லாஹ் உடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயன் படுத்த கூடாது! (தப்சீர் அல் குர்துபி 12 :213 )

இமாம் ஜுர்ஜானி: ஆதாரபூர்வமான ஹதீஸ் எது வென்றால் அதில் மட்டமான கருத்துக்கள் இருக்காது அது குர்ஆன் வசனத்துடன் மோதாமல் இருக்கும் (அல் தஹ்ரீபாத் 1 : 113 )

அதை போல் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் புஹாரி இல் வரும் 1854 வது ஹதீஸ் தள்ளாத வயதில் ஹஜ் கடமை பற்றி வரும் அபு ஹுரைரா (ral) அவர்கள் அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் குர்ஆன் உடைய வசனத்திற்கு முரண் படுவதால் மறுக்கிறார்.... (புஹாரி 1854 )

இது போல இப்னு தைமியாஹ் (ரஹ்) அவர்கள் வானம் பூமி சனிக்கிழமை படைக்க ஆரம்பிக்க பட்டு வெள்ளி கிழமை ஆதம் (அலை) அவர்களை அசரில் படைத்தது முடித்தான் என்று வரும் ஹதீஸ் (முஸ்லிம் 4997 ) 7 நாட்கள் என்று வருவதால் அல்லா குர்அன் நில் சொல்லும் 6 நாள் என்பதற்கு முரணாக இருப்பதால் நிராகரிகிறார்கள் ....

அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக உமர் (ரலி) அவர்கள் சொல்லி அவர் தோழர் ஷுஹைப் (இல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் அக முஸ்லிம் இல் இடம் பெற்று இருக்கும் (1694 )... இறந்தவருக்காக அவர்கள் குடும்பத்தினர் அழுவதால் அந்த ஜனாஸா வேதனை செய்ய படும் என்று சொன்ன ஹதீஸ் அப்போதே ஆய்ஷா (ரலி) அவர்களால் நிராகரிக்கப்பட்டு.... சொன்னவரும் பொய் சொல்லுபவர் அல்ல கேட்டவரும் பொய் பேசுபவர் அல்லா மனிதர் என்ற முறையில் விளங்குவதில் தவறு இருக்கும் என்று சொல்லி அது குர்அன் முரண்படுவதாக சொல்லி நிரகரிதாரே அதற்க்கு உங்கள் பதில் என்ன!

அது போல புஹாரியில் இடம் பெற்ற ஆதார பூர்வமான ஹதீஸ் (3849 ) ...கீழ் கண்ட சம்பவம் ஆமிர் பின் மைமூன் அவர்கள் அறிவிக்கிறார் ..

.அறியாமை காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கு ஒன்றை மற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து கல்லால் அடிப்பதை நான் கண்டேன்... நானும் அவைகளுடன் சேர்ந்து அடித்தேன்.....

இதை அறிவு உள்ள யாரவது ஏற்று கொள்வார்களா... குரங்குக்கு திருமணம் சட்டம் உண்டா., சட்டத்தை நிறைவேற்றும் அறிவை அல்லா கொடுத்து இருக்கிறானா... இது குர்அன் உடனும் அறிவு உடனும் மோதுவதாக தானே அறிஞர்கள் நிரகரிகிரர்கள்... இதை யும் புஹாரியில் இடம் பெற்று இருக்கு என்று ஏற்று கொள்ளவா

மூஸா நபி தன் உயிரை வாங்க வந்த வானவரை கண் பிதுங்கி பார்வை இழக்கும் அளவுக்கு அடித்து திருப்பி அனுப்பினர் என்ற செய்தி புஹாரி இல் 1339 , முஸ்லிம் இல் 4375 போன்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் களில் இடம் பெற்று இருக்கே... இது அல்லாஹ்வின் வேத வரிகளுடன் மோதுவதாக சொல்லி இமாம் கஜ்ஜாலி போன்ற அறிகர்கள் ஏற்க வில்லையே அவர்கள் எல்லாம் குழப்ப வாதிகளா? இவைகள் எல்லாம் மீளாது மேடை களில் இருட்டடிப்பு செய்ய படும்...

அல்லாவின் தூதர் பல்லியை கொல்லும் படி உத்தரவிட்டார்கள் ஏன் என்றல் அது இப்ராகிம் நபிக்கு நெருப்பு குண்டத்தை ஊதி பரவசெய்தது என்று புஹாரி (3319 ) இப்னு மாஜா (3222 ) முஸ்னத் அஹ்மத் (23339 ) போன்ற ஹதீஸ் அறிவிற்கும் குர்அன்கும் மற்ற ஒரு ஹதீஸ் (புஹாரி 1831) மாற்றமாக வந்த கருத்து என்று சொல்லி மேல் சொன்ன அறிஞ்சர்கள் நிராகரிகிரார்களே..அவர்கள் குழப்ப வாதிகளா ..இல்லை சலீம் காக்கா நீங்க இதை அளவு கோலாக கொண்டு பல்லியை தேடி தேடி அடிக்க போறீர்களா!!

இது போன்று இன்னும் பல உள்ளது இதை சுட்டி காட்ட நேரம் இல்லை... இவை எல்லாம் நேற்று வந்த PJ சொன்னது இல்லை... நீங்கள் பின்பற்றும் இமாம்களும், அறிஞர்களும் சொன்னதுதானே இதையாவது மனம் திறந்து ஏற்று கொள்வீர்கள... இல்லை இமாம்களுடன் மோதுவீர்களா?

அதே வரிசையில்தான் எங்கே விவாதிக்கபடும் அபுலஹப் பற்றிய ஹதீஸ் உம் நிராகரிக்க படுகிறது அபுலஹாப் உடன் அபுதலிப் ஒப்பிட பட கூடியவர் இல்லை.. அவன் அல்லாவால் சபிக்க பட்டவன்..

, ”அல்லாஹ்வின் மீதாணை யாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போதுதான், ”இணைவைப்போருக் காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும், இறைநம்பிக்கையாளர் களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருüனான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ”(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர் வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருüனான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: புகாரி( 4772)

இன்னும் ஒரு நண்பர் ...கனவு பற்றி சொல்லும் பொது சொன்னார்...பாங்கு .அது கனவில் தானே வந்தது என்று ...பாங்கு பற்றி வரும் ஹதீஸ் கொஞ்சம் ஒழுங்கா பார்து விட்டு வந்து சொல்லுங்கள்.. தொழுகைக்காக அழைப்பு பற்றிய ஆலோசனை வரும் பொது சில தோழர்கள் மணி அடிக்கலாம் என்றும், கொடி ஏற்றலாம் என்றும், சொல்லும் பொது உமர் ரலி அவர்கள் பங்கு அழைப்பு சொன்னதாக (அபூதாவூத் 2:507 ) லும், அப்துல்லாஹ் பின் ஜைது அவர்கள் கனவில் கண்டதாக பங்கின் வரிகளை சொல்லும் போது அல்லாஹ்வின் தூதர் அங்கீகாரம் செய்ததாகவும் (2 : 498 ) வருகிறது... அதற்க்கும் அபு லஹாப் சம்பவத்தில் வரும் கனவு யாரோ ஒருவர் கண்டதாக உர்வா என்றவர் சொல்லுவதற்கும், அது பற்றிய சம்பவமே அல்லாவின் தூதர்க்கு எடுத்து சொல்லபடவோ அங்கீகாரமோ இல்லை என்று சொல்லுவதற்கும் என்ன இருக்கு?

சிந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் கருத்துக்களை பாருங்கள் ...அல்லா நம் யாவருக்கும் நேர் வழி காட்டுவான் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by A.W.S. (Kayalpatnam) [28 July 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6457

Are we not deviating from the subject. The subject here is not about the authenticity of a particular hadiths which appears in "Shaheehul Buhary". It is about celebrating the birthday of the Prophet(sal). Time and again certain people are accusing others saying "You people do not respect Shahabaas, Imamas and you do not follow them". I would like to end this subject by asking these people who claimed to be followers of those great people

Which companion of the Prophet (sal) has celebrated the birthday of the Prophet(Sal)?
Which of the four Imams has celebrated or asked his followers to celebrate the birthday of the prophets?
Did Buhary Imam ever celebrate the birthday?

If those people are true to their claim, they should come up with the answer.

I believe celebrating birthday is not an Islamic culture, it is copied from others. Christians celebrate Prophet Jesus (PBUH) birthday. Buddhists celebrate Buddha birthday. Guru Nank's birthday is celebrated by Sikhs.

Is not we ape other's culture?. Praising somebody is not about celebrating his/her birthday, but following his words and practice it in his/her life.

I would like to end my statement by quoting one of the Sayings of the Prophet (sal). "Those who follow the culture/custom of the others (non-believers) are not belongs to us". (I do not remember the hadiths book or its number).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Noohu (Hong Kong) [28 July 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 6458

சரி இதோடு இந்த விவாதத்தை முடியுங்கள் அல்லது.. என்னுடைய வினாவிற்கு பதில் சொல்லி விட்டு தொடருங்கள்..

உங்களில் யார் சுவர்க்கம் போக தகுதியானவர்? உறுதியாக த்ரிந்த்தவர் மட்டும் இந்த விவாதத்தை தொடரலாம்.

இதற்கு ஒரு முடிவு வர போவதும் இல்லை...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Shafeeq (Hong Kong) [28 July 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 6459

I like the comments number 61 and 42.

தெளிவாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தயவு செய்து விவாதத்தை தொடரலாம் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் . வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
63. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by mohammed ikram (SAUDI ARABIA) [28 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6460

சமீப காலங்களில் நமது ஊரிலும் சரி, நமது நண்பர்கள் இடையிலும் சரி இந்த மாதிரியான கொள்கை பிரச்னைகள், சண்டைகள் இல்லாமல் அமைதியான முறையில் இருந்தது. இப்போது இந்த பிரச்சனை மீண்டும் ஆரம்பமாஹி விட்டது போல் தெரிகிறது.

இது நாம் பல முறை இரு தரப்பு ஆலிம்கள் மூலம் விவாதித்த ஒன்று தான். இதை மீண்டும் மீண்டும் ஊதி பெரிதாக ஆக்கி விட வேண்டாம் . இந்த மாதிரி யான கருத்துக்களை இந்த இணைய தளங்களில் பதிஊ செய்வதை தவிர்த்தல் நமக்கு நல்லது என்று எனது தனிப்பட்ட கருத்து. அல்லாஹு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க அருள் பிரிவனாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
64. திருத்தமும் வருத்தமும்
posted by mauroof (Dubai) [28 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6461

தவறாக 32 என்று type ஆகிவிட்டது. எனது கருத்து அனுப்பப்படும் வரை பதிவு செய்யப்பட்டுள்ள 46 கருத்துக்களில் 34-வது கருத்தே சிறந்தது. சத்தியத்தை சொல்கிறோம் என்ற போர்வையில் தங்களை தாங்களே அறியாமல் இப்படியே சண்டை பிடித்து கொண்டு இருங்கள். தனி மனித வாழ்வும் சமுதாயமும் வளம் பெரும்???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
65. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Zainul Abdeen (Dubai ) [28 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6462

மதஹபு இல்லை என்று வந்தவர்களுக்கு TNTJ/ Online PJ தான் இப்போதைக்கு அவங்களுக்கு மதஹபாகவும் PJ தான் அவர்களுக்கு இமாமாகவும் இருந்து வருகிறார் எனபது நம் அனைவரும் அறிந்த உண்மை. ஆதலால் அவர்கள் அவர்களுடைய இமாம் எழுதியே குர்ஆன் மற்றும் அவர்கள் தொகுத்த ஹதீத்கலையே ஆதாரமாகும் பேசும் வரை நாம் அவர்களுக்கு ரசூல் (ஸல்) அவர்களின் புகழ் மாலை பாடுவதின் மகிம்மையை அவர்களுக்கு எடுத்து கூறுவதில் நாம் தோல்வியே அடைவோம். எனவே இந்த விவாதத்தை முடித்து விட்டு மற்ற செய்திகளை பதியுமாறு கேட்டு கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
66. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by Mohamed Yoonus (Qatar) [28 July 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 6463

அஸ்ஸலாமுஅலைக்கும்.

இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ள சகோதரர்கள் ஜமால் காக்கா, சாளை சலீம் காக்கா மற்றும் கவிமகன் ஆகியோர் தொடர்ந்து விவாதிக்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

காரணம் என்னவெனில், விவாதத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்ற சூட்டிகையுடன் உள்ளே நுழைந்த AWS அவர்கள், கவிதை மற்றும் கவிஞர்களை சாடும் நோக்கத்துடன் இறைவசனத்தையே தவறான பாதையில் வளைக்க முயற்சி செய்து, வைரமுத்துவை மேற்கோள் காட்டும் நிலைக்குச் சென்றார். ஏராளமான நேயர்கள் அவரது தவறை குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை எடுத்துக் காட்டி பகிரங்கமாக கண்டனம் செய்ததும், அடுத்த பதிவில் அதைக் குறித்து கருத்தே எழுதாமல், குர்ஆன் மட்டும் போதும் என்ற ரீதியில் ஒருவாதத்தை எடுத்து வைத்துள்ளார். அடுத்தது எல்லா விஷயத்தைப் போல, மார்க்க விஷயத்தையும் சகோதரர் ஜியாவுதீன் அவர்கள் தமாஷாகக் கையாளும்விதம் அவரது கண்ணியத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது. கவிமகன் எழுதிய கவிதையைக் குறித்த சரியான புரிதல் இல்லாமலேயே, அவரை ஏளனப்படுத்தும் விதத்தில் மஸ்தான்சாஹிப் பாடல்கள் என்றார். ஜியா அவர்களே! மஸ்தான் சாஹிப் பாடல்கள் என்றால் என்னவென்றாவது உங்களுக்குத் தெரியுமா? பின்னர் மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து சுதாகரித்துக் கொண்ட இவர், அறிவுஜீவி பி.ஜே.அவர்களின் இணையதளத்தை ஆதாரமாக்கி வாங்கி கட்டிக் கொண்டார். மீண்டும் அடுத்த பதிவில் விவரமாக அலசுவோம் என்று ஆரம்பித்த அவர், அபூதாலிப் குறித்த நாயகத்தின் ஹதீஸை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கவிமகன் போட்டுவைத்திருக்கும் கிடுக்கிப் பிடியை அறியாமலே, அவருடைய வாதத்திற்கு சாதகமான இறைவசனங்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை பீஜேவின் தளத்தில் இருந்து கட் அன்ட் பேஸ்ட் செய்து ஒதுங்கிக்கொண்டார். ஆரம்பம் முதலே என்ன நடக்கிறது என்பதை புரியாமலேயே விவாதகளத்தில் இருக்கும் இவருடன் விவாதித்து என்ன பயன்?

இறுதியாக சகோதரர் Cnash அவர்கள், மேலோட்டமாய் கொஞ்சம் விவரமாக எழுதுவதைப்போல் தோற்றமளித்தாலும், இவரது கதையும் அதே பாதைதான். கனவுகள் மார்க்கமில்லை என்றும் அபூலஹப் பற்றிய ஹதீஸ் எல்லோராலும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்ற இவரது வாதம் ஜமால் அவர்களால் அடித்து நொறுக்கப்பட்டு விட்டது. அபூதாலிப் குறித்த ஹதீஸை ஏற்றுக் கொள்கின்றீர்களா/ மறுக்கின்றீர்களா? என்ற கவிமகன் அவர்களது கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் அது வேறு, இது வேறு என்பதைப்போன்று எழுத ஆரம்பித்த இவரது கருத்து AWS அவர்களது பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது. இவருடன் எவ்வளவு அதிகம் விவாதம் செய்கிறோமோ, அதைவிட அதிகமான ஹதீசுகளை வெளியே தள்ளி விடுவார். எல்லா விஷயத்திலும் இமாம்களை மறுக்கும் இவர், இப்போது புதிதாக அந்த ஹதீஸை இந்த இமாம் தள்ளிவிட்டார், அந்த இமாம் தள்ளிவிட்டார் என்று, இஷ்டம்போல அடித்துவிட ஆரம்பித்துவிட்டார்.

ஆதலால்தான் நண்பர்களே சொல்கிறேன். இவர்களுடன் விவாதம் செய்து எந்தப்பயனும் இல்லை. புனித நோன்பு மாதம் நெருங்கிவிட்ட காரணத்தால், அதிகமதிகம் அமல் செய்வோம். நன்மையைத் தேடும் வழியைப் பார்ப்போம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
67. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by jamal (colombo) [28 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6466

தம்பி வி.எஸ்.எம். அலி அவர்களே!

உங்களது கருத்துக்களை முற்றிலும் படித்துவிட்டுத்தான் நான் பதில் எழுதுகிறேன். உங்களின் கருத்தை கண்டித்து மாடரேட்டர் எழுதிய பிறகும் கூட இன்னும் பிடிவாதம் பிடித்துக் கொண்டு, விதண்டாவாதம் செய்கிறீர்கள். குத்துக்கல் தெருவிலிருந்து சதுக்கைத் தெருவை சுற்றி குத்துக்கல் தெருவிற்கு வருவதற்கு அரை மணிநேரம் ஆகுமா? என்று கேட்டால் விதண்டாவாதமா? உங்களின் கூற்று முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. தான் சொல்வது சரி என்று நிரூபிக்க பல பொய்களை சொல்லிக் கொண்டே செல்கிறீர்கள். குத்துக்கல் தெருவிலுள்ள நீங்களே இரவில் போடப்பட்ட மேடை தங்களுக்குத் தெரியாது என்கிறீர்கள். இதை எப்படி நம்புவது?

உங்களின் கற்பனையில் மற்றொரு மைல்கல் நான் இந்த இணையதளத்திற்கு புதிது என்பது. இணையதள பதிவு பட்டியலைப் பார்த்தால் நான் எப்போதிலிருந்து இருக்கிறேன் என்று தெரியவரும்.

ஊரில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் (ரோட்டை அடைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வது) நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லியிருப்பின் மிகவும் பாராட்டிற்குரியது. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். தன் விருப்பத்தை விட பொது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எங்களது மனமார்ந்த நன்றி! விஷயங்களை தெளிவுபடுத்தத்தான் இந்த கருத்துப் பரிமாற்றமே தவிர யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களின் கருத்துக்களுக்கு எங்கள் நன்றி!

மார்க்கவிஷயங்கள் பற்றி எழுதியிருக்கும் நபர்களில் ஒருவர் பிறந்த நாள் விழா கிறித்துவர்களின் கலாச்சாரம் என்று எழுதியிருக்கிறார். நமது குழந்தை பிறந்தால் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர், நர்சுகள் மற்றுமுள்ளவர்களுக்கு சந்தோசத்திற்காக சாக்லேட் மற்றும் இனிப்புகள் வழங்குகிறீர். உங்கள் குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாடுவது மட்டும் மாற்றுக் கலாச்சாரம் இல்லையா? தெருவுக்குத் தெரு, பள்ளிக்கு பள்ளி சுவர்களில் குர்ஆன் ஆயத்துக்களை எழுதிக் கொள்வது எந்த கலாச்சாரம்? அதேபோல் பெண்களை பேராட்டம், மறியல் என்ற பெயரில் நடுரோட்டிற்கு இழுத்துவருவது இஸ்லாமிய கலாச்சாராமா? இன்னும் சொல்லலாம்....

நபிகளாரின் பிறந்த நாளை அல்லாஹ் அல்லவா கொண்டாடியிருக்கிறான் நரகவாதி அபூலஹப் தனது ஹபீபின் பிறந்த செய்தி கேட்டு அடிமையை விடுதலை செய்ததற்காக, நரகிலிருந்தாலும் அவர்களின் மேன்மையை விளங்கும்படி செய்வதற்காக அல்லாஹ் கொடுத்ததல்லவா அது. அதையும் கூடாது என்கிறீர்கள்.

ஏனெனில் தாங்கள் கூறும் ஷாபி இமாம், மாலிகி இமாம் போன்றோர் கூறியதாக சொல்பவைகள் முழுமையானதாக இல்லை. அதற்கு வைக்கப்பட்ட பொருளும் முழுமையானதாக இல்லை. நீங்கள் பி.ஜே. போன்றவர்கள் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்புகளிலிருந்து ஆதாரங்களை காட்டுகிறீர்கள். நாங்கள் எடுத்துச் சொன்ன பிறகும் திரும்பத் திரும்ப அதையே செய்கிறீர்கள். அதை விட்டு முதலில் திரும்புங்கள். ஒருவர் சொல்கிறார் நபிமொழி குர்ஆனுக்கு முரண்படுவதுபோல் தோற்றம் தெரிகிறதே! என்று. அதுதான் நமது சிற்றறிவுக்கு எட்டியது. அல்லாஹ் அதற்கென்றே ஹதீதுகளின் தரம் பற்றி அறியவும், ஹதீதுகள் குர்ஆனுக்கு முரண்படுகிறதா? என்பது பற்றி அறியவும் ஆய்வாளர்கள், இமாம்கள் இருக்கின்றனர்.

அவர்கள் ஏற்கனவே அதற்குரிய பதில்களை எழுதி சென்றுவிட்டனர். தயவு செய்து அதைப் பார்த்துக் கொள்ளவும். நேரடி தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்த்து இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் வேண்டுகிறேன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
68. கம்பெடுதவன்லாம்.... வேட்டை காரன் போல....
posted by s.s.md meerasahib (riyadh) [28 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6467

அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் நமது மக்கள் புஹாரி இமாம் அவர்களுக்கே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்...! என்ன நம் முன்னோர்கள் எல்லாம் மௌலூது ஓதியதாலும் மீலாது கொண்டாடியதாலும் பித்அத் செய்து..... மரண படுக்கையில் நாவில் கலீமா உடனும், நல்ல வசீயதுடனும் மரணித்து விட்டார்கள். இன்றோ... நாம் நபிவழி, குரான் வழி பேணுகிறோம் என்று சொல்லி... தவறான கருத்துக்களை, இமாம்களுக்கு எதிரான கருத்துக்களை நாமும் நடைமுறை படுத்தி, ஏனைய மக்களையும் வழி கெடுக்கிறோம். அன்றோ..... மரணம் கலிமாவில் இருந்தது இன்றோ.... பல மரணம்கள் கோமாவில் இருக்கிறது. என்ன செய்வது 1200௦௦ வருடங்களுக்கு முன் வந்த இமாம்களுக்கு தெரியாதது நமக்கு தெரிந்து விட்டது.

அட்மின் அவர்களே...... ஹக்கைதான் எழுதி உள்ளேன்.... இதையும் நாம் சிந்திக்க வேண்டியது உள்ளது. யாரையும் தனி நபரை குறை கூறவில்லை. என்னையும் சேர்த்துதான் எழுதி இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
69. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by AbuJamal (Jeddah-Saudi Arabia) [28 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6470

Moderator: Dear Br. Abu Jamal, pls provide your full name to allow your comments.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
70. நாயகத்திற்காக... ப்ளீஸ்..
posted by BSAS (Kowloon) [28 July 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 6471

எனதருமை காக்காமார்களே.. உங்களது ஆராய்ச்சி எல்லாம் நீங்கள் சொல்லியது போல இமாம்களை மிஞ்சியது போன்று (??) உள்ளது. இருந்த போதிலும் ஒரு சின்ன வேண்டுகோள்:

நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிகரில்லா புகழுக்கு இகழ் சேர்க்க துடிக்கும் உங்கள் ஆராய்ச்சியையும், சிந்தனையும் சற்று மாற்றி பாருங்கள். அதில் நிம்மதியும் ஆனந்தமும் பெறுவீர்கள்.

வல்ல நாயனே அவர்களின் எல்லை இல்லாப் புகழை தெளிவாக உயர்த்திய பின்பு நமக்கென்ன கஷ்டமும் பொறாமையும்? இதனால் தானோ என்னமோ பீரப்பா (என்னடா மறு படியும் பீரப்பா என்று நினைக்காதீர்கள்) ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படி சொன்னார்களோ?

கலிமா சொன்னவன் கனலதில் (நரகத்தில்) புகுவதேன் ஹக்கு ரசூல் மீது ஹசது (பொறாமை) கொண்டதனாலே

மீண்டும் ஒரு முறை வேண்டிக்கொள்கிறேன்: உங்களின் ஆராட்சியை உம்மத்திர்க்காகவே அர்ப்பணித்த அந்த உத்தம நபியின் மீது அன்பு கொண்டு மேற்கொள்ளுங்கள். சத்தியமாக ஜெயம் பெறுவீர்கள்

அன்றி, நிச்சயமாக நீங்கள் எதை பகுத்தறிவு என்று நினைத்துக் கொண்டு "நான்" என்ற அகங்கார மாயையில் சிக்கிக் கொண்டுள்ளீர்களோ அது உங்களை வெகு அகல பாதாளத்தில் கொண்டு செல்ல மிக போதுமானது. அல்லாஹ் அதை விட்டும் நம்மை (பாவிகளுக்காக பிழை பொறுக்க தேடும் அந்த ஷபீஉல் முத்நிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால்) பாதுகாப்பானாக. வஸ்ஸலாம்

Dear Administrators,

Please pay attention to completely reject any comments which will bring no benefits to the viewers & the community in a constructive manner rather it would lead to further split amongst us. Especially any messages been written in the dis-respect of our beloved Muhammad (sallallahu alaihi wasallam) and saaliheen (raliallahu anhum) should not be published at all in the first place, after all we all here because of them. Thanks for your considerations


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
71. Re:ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீ...
posted by vsm ali (kayalpatnam) [28 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6474

கொழும்பு ஜமால் காக்கா , நான் சொல்வதை இதுவரை நீங்கள் நம்பவில்லை. adamant ஆகவே உள்ளீர்கள். இனிமேலும் உங்களை நான் வற்புறுத்தி "நம்புங்கள்" என்று கூற விரும்பவில்லை. அல்லாஹ்வை நம்புங்கள், அது போதும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
72. உயிரினும் மேலான உத்தமரே நாயகமே!.
posted by kavimagan m.s.abdul kader (dubai) [28 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6475

உத்தம நபிகளாரே! நீங்கள் பிறந்ததால் நாங்கள் வாழ்கிறோம் மனிதர்களாக! எண்ணில்லா செல்வங்கள் உமைநாடி வந்தபோதும் ஏழ்மையின் வாழ்வினை ஏற்றஎம் ஏந்தலே! உங்களைப் புகழ்வதால் உயர்வு எங்களுக்கு! ஹம்ஜாவின் ஈரலை மென்றுமிழ்ந்து கொடுஞ்செயல் புரிந்திட்ட ஹிந்தாவையும் மன்னித்த வேந்தரே! நாளை மறுமையிலே திண்டாடும் வேளையிலே மன்றாட எமக்கங்கே யார்வருவார் நீங்கள் அன்றி! உங்களைநான் புகழ்வதனால் உலகமென்னைப் பொய்யனென்று உரைத்தாலும் கலங்கிவிடேன் உயிரேஎம் நாயகமே! கல்லடிகள் சொல்லடிகள் எமக்காக ஏற்றவரே! உண்மையின் உறைவிடமே உமைப்புகழும் என்கவிதை ஓயாது ஒருபொழுதும் உயிரோடு வாழும்வரை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
73. Quran and Sunnah VS Personal Opinions, desires and Logic.
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [28 July 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 6477

Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh, I have written the following which inshaAllah is a good reminder for us, and hopefully the evidences be used as guiding principles for our Islamic sharing on this website. Importance of the Quran, the Sunnah and utilising the Scholars. As Muslims we need to learn Islam according to the Quran and Sunnah, with the explanations by the early Muslims, and we should understand that Islamic ruling / fatawa are given by the Ulema. It simply can not be based upon our own personal opinions, philosophies or even logic. The Quran and the Sunnah is our perfect source. The Quran is the word of Allah, revealed to the Prophet Muhammad via the Angel Gabriel. The Sunnah is the teaching of the Prophet from his words and It is not for us to reject or ignore a hadith, because our own personal desires or thoughts say otherwise. Allah said in the Qur'an: “Your companion (Muhammad) is neither astray nor being misled. Nor does he speak of his own desire. It is (only) the revelation with which he is inspired” (Surah An-Najm 53:2-4). The Sunnah is based upon the words, actions and approvals of the Prophet (s). The Prophet (s) did not teach anything that was not revealed to him from Allah the Most High. Imam Ahmad, rahimahullah said in his work Usul as-Sunnah, that the Sunnah explains the Quran and there is no Qiyas in the Sunnah. - Qiyas means that a person can not use analogical reasoning of the Sunnah. Unfortunately, some individuals choose to ignore the Sunnah. They make varying excuses due to either their ignorance or arrogance, or perhaps even both. The Prophet of Allah said: “I have been given the Qur'aan and something similar to it besides it. Yet a time will come when a man leaning on his couch will say ‘follow the Qur'aan only; what you find in it permissible, take as permissible, and what you find as forbidden, take as forbidden’. But verily what the Messenger of Allaah has forbidden is like what Allaah has forbidden” Authentic Hadith (Ahmad, Abu Dawood) “Whosoever obeys the Messenger, has indeed obeyed Allaah” (Surah An-Nisa 4:80) “But no, by your Lord, they can have no faith, until they make you (O’ Muhammad) judge in all disputes between them, and find in themselves no resistance against your decisions, and accept them with full submission” (Sura An-Nisa 4:65) “It is not fitting for a believer, man or woman, when a matter has been decreed by Allaah and His Messenger to have any choice in the matter. If anyone disobeys Allaah and His Messenger he is clearly astray” (Surah Al-Ahzab 33:36) The Prophet said: “I have left two things among you, as long as you hold fast to them you will never go astray. They are the Book of Allaah and the Sunnah of His Messenger" (Al-Muwatta) The Importance of the Scholars: Narrated By Abdillah Ibn Amr Ibn 'Aas (radiallahu 'anhu) he said: I heard the Prophet say :"Allah does not take away knowledge by taking it away from the hearts of the worshippers. But he takes knowledge by taking away the Ulama (Scholars) until there are hardly any scholars then the people will take ignorant leaders and they will be asked questions and they will give rulings without knowledge so hence they go astray and lead others astray." (Bukhari and Muslim) The learned scholars who spend their days and nights, enduring hardships in seeking knowledge of Islam to help the Ummah. They understand topics of the Deen based not merely by one or two ayaat or hadith, but with the scope of knowledge needed to make answers and verdicts. - The hadith above shows the importance of the scholars, the fact that by taking the scholars away Allah takes knowledge away. Brothers and sisters, Muhammad Ibn Sireen (rahimahullah) said, "This religion is knowledge so therefore beware of who you take your knowledge from". Another statement of the past scholars is "Do not take from a Suhufi (one who reads books and never studied under the scholars) nor a Mushafi (one who reads Qur'an but never studied the rules of Tajweed or Tafseer under the scholars). People who can give Fatwa are the elite known scholars, nobody else. It is not right for an individual to come along and give their own opinions on matters of the Deen. Whether its a matters of science of hadith, tafsir, fiqh or Aqeedah. A person can not merely negate matters of shariah because they do not like it. Unfortunately, these days individuals cite they are using "logic" in order to give what are in fact their personal erroneous desires and philosophies. We must look to the early sources and respect the matters of the early Muslims and the scholars of our times. Remember again, the Prophet said that Allah removes the knowledge, by the removal of the scholars. When people start taking their rulings and understanding of the Deen from the ignorant people who do not bring evidences or the statements of the scholars, this is when our personal beliefs and the Ummah itself become weaker. May Allah guide us to what is the best way and make things easier for us, amin Wasalamu alaykum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
74. கருத்துக்கள் நிறுத்தப்படுகிறது!
posted by Moderator (Kayalpatnam) [28 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6481

அன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இச்செய்தியின்கீழ் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை ஓரளவுக்குப் பின் நாம் நிறுத்திவிட்ட நிலையில், இந்த மீலாத் விழாவை நடத்திய சகோதரர் சட்னி செய்யித் மீரான் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மீண்டும் கருத்துப்பதிவுக்கு இடமளிக்கப்பட்டது.

எனினும், இச்செய்தியின் கீழான கருத்துப் பரிமாற்றம், நம் யாவருக்கும் மனச்சோர்வளிக்கும் என்ற ஒன்றைத் தவிர வேறெதையும் தந்துவிடப் போவதில்லை என்று உணரப்படுவதால் இத்துடன் கருத்துப் பதிவு நிறுத்தப்படுகிறது.

நம் மக்களிடையேயுள்ள இதுபோன்ற பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் குறித்து விவாதிக்க விரைவில், www.kayalpattinam.com வலைதளத்தில் discussion board மூலம் ஏற்பாடு செய்யப்படும். அந்தப் பக்கத்தி்ல் விரும்புவோர் புதுப்புது தலைப்புகளில் கூட விவாதித்துக்கொள்ளலாம்.

அதை விடுத்து, இதுபோன்ற செய்திகளின்கீழ் பதிவு செய்வதைத் தவிர்த்துக்கொள்வது நம்மிடையே இருக்கும் சிறிதளவு ஒற்றுமையைப் பாதுகாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தயவுசெய்து சிரமத்தைப் பொருந்திக்கொள்க! நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved