தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவைகளில் பொது ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 140,000 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8 அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துவங்கியது.
பதிமூன்றாம் நாளான நேற்று (ஜூலை 20) அழைக்கப்பட்ட 3027 மாணவர்களில், 2452 மாணவர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர். 3 மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. பதிமூன்றாம் நாள் முடிவில் காலியுள்ள இடங்கள் விபரம் வருமாறு:-
(அண்ணா பல்கலைக்கழகம் + அரசு கல்லூரிகள் + தனியார் கல்லூரிகள்)
Open Competition - 30,629 (467 + 0 + 30,162)
BC (Muslim) - 4,122 (105 + 0 + 4,017)
BC - 29,317 (634 + 0 + 28,683)
MBC - 23,414 (550 + 1 + 22,863)
SC (Arunthathiyar) - 4,244 (176 + 73 + 3,995)
SC - 20,245 (703 + 94 + 19,448)
ST - 1,385 (65 + 32 + 1,288)
மொத்தம் - 113,356 (2,700 + 200 + 110,456)
இதுவரை சமுதாய ஒதுக்கீடு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்:-
Open Competition - 14,231
BC (Muslim) - 940
BC - 9,038
MBC - 5,552
SC (Arunthathiyar) - 128
SC - 1,500
ST - 29
FOC - 35
மொத்தம் - 31,453
|