ஜாவியா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அக்கல்லூரியின் ஏழாண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த 3 மாணவர்களுக்கு “ஆலிம் ஃபாஸீ” பட்டமும், திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள 5 மாணவர்களுக்கு “ஹாஃபிழ்” பட்டமும் வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
ஹாஃபிழ் கே.எம்.ஏ.ஷெய்கு முஹம்மத் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ வரவேற்புரையாற்றினார்.
பின்னர், ஸனது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஜமீலாபாத்தைச் சார்ந்த செய்யித் ஜமாலுத்தீன் என்பவரின் மகன் ஹாஃபிழ் எஸ்.முஹம்மத் இஸ்மாஈல்,
அதே பகுதியைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மத் யூனுஸ் என்பவரின் மகன் ஒய்.முஹம்மத் ஸிராஜுத்தீன் ஃபாஸீ,
காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சார்ந்த மக்தூம் மீராலெப்பை என்பவரின் மகன் மவ்லவீ எம்.எம்.கவுஸ் முஹம்மத்
ஆகிய மூன்று மாணவர்கள் “ஆலிம் ஃபாஸீ” ஸனது - பட்டம் பெற்றனர்.
காயல்பட்டினம் எல்.எஃப்.ரோடு என்ற முகவரியைச் சார்ந்த முஹம்மத் மரைக்காயர் என்பவரது மகன் எம்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
காயல்பட்டினம் அம்பல மரைக்காயர் தெருவைச் சார்ந்த ஹாஜி வி.எஸ்.எம்.அமானுல்லாஹ் என்பவரின் மகன் எம்.ஏ.முஹம்மத் நியாஸ்,
காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சார்ந்த ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் உமர் ஸாஹிப் என்பவரது மகன் எம்.ஓ.எஸ்.செய்யித் அலீ ஸாஹிப்,
காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.ஐ.ஷெய்கு நூருத்தீன் என்பவரின் மகன் எஸ்.என்.தைக்கா தம்பி,
அதே தெருவைச் சார்ந்த ஹாஜி எஸ்.எம்.உமர் அப்துல் காதிர் என்பவரது மகன் ஓ.ஏ.சி.தைக்கா ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
ஆகிய ஐந்து மாணவர்கள் “ஹாஃபிழுல் குர்ஆன்” ஸனது - பட்டம் பெற்றனர். கலீஃபத்துல் குலஃபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ அவற்றை வழங்கினார்.
கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் கல்ஜி ஃபாஸீ பட்டமளிப்புப் பேருரையாற்ற, பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பாக மவ்லவீ எம்.எம்.கவுஸ் முஹம்மத் ஏற்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, விழா தலைவர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, பன்னூலாசிரியர் “முத்துச்சுடர்” மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ஜாவியா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், “ஆலிம்”, “ஹாஃபிழ்” கல்விப் பிரிவுகளுக்கு நடைபெற்ற தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ நன்றி கூற, ஜாவியா ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஒய்.எம்.அப்துல்லாஹ் ஃபாஸீ துஆவுக்குப் பின், ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
விழா நிகழ்வுகளனைத்திலும், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அன்று மாலை 05.00 மணிக்கு, பட்டம் பெற்ற மாணவர்களை ஜாவியாவிலிருந்து பைத் முழங்க, நகர்வலமாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று சேர்த்தனர்.
தகவல்:
ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகம் சார்பாக,
மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ,
காயல்பட்டினம். |