செய்தி எண் (ID #) 6777 | | |
வெள்ளி, ஜுலை 22, 2011 |
‘சேவைச் செம்மல்‘ விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வருக்கு முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் ஜூலை 25இல் பாராட்டு விழா! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 6865 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய |
|
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டது.
10.07.2011 அன்று நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவுவிழாவின்போது, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கும், இன்னும் பலருக்கும் அவர்களின் சமுதயாச் சேவையைப் பாராட்டி ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கப்பட்டது.
தங்கள் மத்ரஸா முதல்வருக்கு இந்த விருதை வழங்கியமைக்காக, மத்ரஸா நிர்வாகம் சார்பில் மாநாட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு, ‘சேவைச் செம்மல்‘ விருது பெற்றமைக்காக அவரைப் பாராட்டி, அந்த மத்ரஸாவின் முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் இம்மாதம் 25ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, ஆலிம்கள் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் மன்ற ஒருங்கிணைப்புக் குழுவினரான ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் ஒருங்கிணைப்பில், மன்ற அங்கத்தினர் செய்து வருகின்றனர்.
|