வெளியூரில் பயின்று ஆலிம் பட்டம் பெற்ற மாணவருக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் வரவேற்பளிக்கப்பட்டது.
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த நஹ்வீ எஸ்.எஸ்.யாக்கூத் என்பவரின் மகன் ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ். வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ள இவருக்கு, 17.07.2011 அன்று காலையில் அக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் “ஆலிம் கைரீ” ஸனது - பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர், அன்று மாலையில் ஊர் திரும்பிய அவருக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் வரவேற்பளிக்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் வாழ்த்துரை வழங்கினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர், ஹாமிதிய்யா பைத் பிரிவு மாணவர்கள் அவரை அவரது இல்லம் வரை பைத் இசைத்து நகர்வலமாக அழைத்துச் சென்றனர். வழியில், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
1. ஆலிம் ஹைரி posted byK.A.FAIZAL (KAYAL)[23 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6288
அஸ்ஸலாமு அலைக்கும்.வெளிஊரில் சென்று ஆலிம் பட்டம் பெற்ற இவருக்கு மனமார்ந்த நன்றிகள்.இவரும் ஹாமிதிய்யா 'ஹாபிழ்' என்பது குறிப்பிடத்தக்கது.கல்வியை கற்றதோடு மட்டுமில்லாமல் அதனைக் கொண்டு அவர் அமல் செய்யவும்,தான் கற்ற கல்வியை பிறருக்கு எடுத்துச்சொல்லி பிற மக்கள் அமல் செய்யும் பாக்கியத்தையும் அல்லாஹ் நமக்கு தருவானாக!இன்னும் அவரை கல்வியை கற்றுக்கொடுத்த ஆசிரியர்ஹளுக்கும்,அவர் தம் பெற்றோருக்கும் நன்றி உள்ள பிள்ளையாக ஆக்கி வைப்பானாக!ஆமீன்.வஸ்ஸலாம்.
2. Re:வெளியூரில் பயின்று ஆலிம் ... posted byyahya mohiadeen (dubai)[23 July 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6290
அருமைத்தம்பி ஹாபில் நஹ்வி சதக்கதுல்லா ஆலிம் அவர்களுக்கு, உலகப்பொதுமறையாம் உயரிய குரான் ஷரீபை உள்ளத்தில் ஏந்தியும், சன்மார்க்கம் தீனுல் இஸ்லாத்தின் நன்நெறிகளையும், தூய போதனைகளையும் கற்றுத்தேர்ந்த நீங்கள், அதன் வழியில் உங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டும், நம் சமுதாயத்தையும் அதன் வழியில் அழைத்துச் செல்வீர்கள் என நம்புகிறோம். வாழ்த்துகளுடனும், பிரார்த்தனையுடனும்....
எனது அருமை சகோதரர் அல்ஹாஜ் நஹ்வீ எஸ்.எஸ்.யாக்கூத் அவர்களின் மகன் ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ். வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்று, “ஆலிம் கைரீ” ஸனது - பெற்ற இளம் ஆலிம் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை ,தெரியப்படுத்துகிறேன். து''ஆ செய்கிறேன். கற்ற கல்வியை தானும்,பயன்படுத்தி, சமுதாயம் பயன் பெற போதிக்கவும் வேண்டுகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இவரின் குடும்பத்தில் பரக்கத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்துவானாக ! நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையையும், சமுதாய சேவையாற்ற நல்ல தொவ்பீக்கையும் வழங்கி அருள்வானாக ! .
4. Re:வெளியூரில் பயின்று ஆலிம் ... posted byM.E.L.NUSKI (Riyadh -Saudi arabia)[23 July 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6304
என் அன்பு மச்சினன் ஹாபிள் N .Y .சதகதுல்லாஹ் ஆலிம் பட்டம் பெற்று இருப்பதை அகமகிழ்வு அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அருமை மவ்லவி இன் ஹயாத்தை நீளமாக்கி சத்திய சன்மார்க்க சேவையை தொய்வின்றி செய்திட அருள் புரிவனாக ஆமீன்.
9. Re:வெளியூரில் பயின்று ஆலிம் ... posted byM.S.MAHMOOD RAJVI (KAYALPATTINAM)[24 July 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 6325
அஸ்ஸலாமு அலைக்கும்....!
நஹ்வி சதக்கத்துல்லாஹ் அவர்கள் ஹாபிழ் மற்றும் ஆலிம் மட்டுமல்ல, மார்க்க கல்வியுடன் உலக கல்வியும் ஒரு சேர பயின்று M.com பட்டமும் பெற்று உள்ளார். இவர் மட்டுமல்ல இவருடன் சேர்ந்து பட்டம் பெற்ற அனைத்து ஆலிம்களும் ஏதாவது ஒரு இளங்கலை, முதுகலை இத்துடன் கணினி பட்டய படிப்பும் பெற்று உள்ளனர் என்பது அக்கல்லூரியின் சிறப்பு.
நம் ஊர் மாணவருடன் சேர்ந்து அனைத்து மாணவர்களையும் வாழ்த்துவதுடன் இதற்காக அயராது உழைக்கும் அக்கல்லூரியின் முதல்வர் O.M. அப்துல் காதிர் பாகவி ஆலிம் அவர்களையும் போற்றுவோம். இது போல் நம் ஊரிலும் அரபிக் கல்லூரிகள் அமைந்தால் இன்னும் பல ஆலிம்கள் உருவாகுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நடக்குமா?! பொறுத்திருந்து பார்ப்போம்.
11. Congradulation Sadakathullaah posted byK.M.S.OMER (Bangalore/Kayalpatnam)[28 July 2011] IP: 121.*.*.* India | Comment Reference Number: 6464
Congrats my dear, After such a long time i am seeing you through our kayalpatnam,com, Take the Deen among the peoples what u have learned, Wassalaam......
12. Re:வெளியூரில் பயின்று ஆலிம் ... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[28 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6469
சிறப்பாக தீனியத் கல்வியை முடித்து பட்டம் பெற்ற அருமை ஆலிமுக்கு அகங்குளிர்ந்த வாழ்த்துக்கள். வல்ல நாயன் கற்ற கல்விபடி நடக்கவும் சமுதாயத்திற்கு எடுத்துரைக்கவும் அருள் செய்வானாக. ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross