நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் ஆகியன இணைந்து நடத்தும் கண் சிகிச்சை இலவச முகாம் 24.07.2011 அன்று (நாளை) காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்குகிறார். நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் பாவனாசகுமார், கே.எம்.டி. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எஸ்.எஸ்.இஸ்மாஈல் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இம்முகாமில், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஆர்.இராமகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் கண் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவுள்ளனர்.
முகாம் அமைப்பாளர்களாக ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி எம்.என்.முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி, ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன் ஆகியோர் களப்பணியாற்றி வருகின்றனர்.
முகாம் குறித்து தேவைப்படும் தகவல்களை, காயல் இரத்த தானக் கழகத்தின் நிறுவன தலைவர் ஹாஜி எல்.எஸ்.அன்வர் (கைபேசி எண்: +91 94436 57298), காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ (கைபேசி எண்: +91 94866 55786) ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு முகாம் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |