தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளருக்கு 33 சதவிகிதம் வரை தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ஐ. திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்கள் நலன் கருதி உபயோகத்தில இருக்கும் மற்றும் புதிய இணைப்புகளுக்கு தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 33 சதவிகிதம் வரை தள்ளுபடி சலுகைகளைப் பெறலாம்.
மூன்று ஆண்டு திட்டம்: வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் 24 மாதத்துக்கான வாடகையைச் செலுத்தி 36 மாதம் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதத்துக்கான வாடகை இலவசமாக வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டு திட்டம்: இத்திட்டத்தின் மூலம் 18 மாதத்துக்கான வாடகையைச் செலுத்தி 24 மாதம் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 6 மாதத்துக்கான வாடகை சலுகையாக வழங்கப்படுகிறது.
ஒரு ஆண்டு திட்டம்: வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் 10 மாதத்துக்கான வாடகையைச் செலுத்தி 12 மாதம் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் 2 மாதத்துக்கான வாடகை சலுகையாக வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களில் மாறுவதற்கு 0461- 2333555 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது. வீடு தேடி வந்து சேவை வழங்கப்படுகிறது. அல்லது அருகில் உள்ள வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross