தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆர்.செல்வராஜ் மாற்றப்பட்டு, ஆஷிஷ்குமார் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக எஸ் மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி, அறநிலையத்துறை, செய்தித்துறை துணைச்செயலாளராக எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை இயக்குநராக சத்யபிரியா ஷாகு நியமினம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக கே.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக சிவி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநராக ஏ.முஹம்மத் அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை மருத்துவத்துறை இயக்குநராக டாக்டர் ஆர் பழநிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பி.அமுதா தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி இயக்குநராக எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வீரராகவராவ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக ஜி லட்சுமிபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் (23.07.2011)
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆபிதீன் |