சிறப்பு சாலை திட்ட பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பணத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை தலைமை பொறியாளர் ரகுநாதன் தெரிவித்தார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான நகராட்சி என்ஜினீயர்கள் ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சென்னை நகராட்சிகளின் தலைமை என்ஜினீயர் ரகுநாதன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு சாலை திட்ட பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு முடிக்கப்படவில்லை என்றால் நிதியை அரசுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை என்ஜினீயர் வலியுறுத்தினார். கூட்டத்தில் 3 மாவட்டங்களில் உள்ள நகராட்சி, மாநகராட்சி என்ஜினீயர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடி பக்கிள் ஓடை மூன்றாம் கட்ட பணிகள் நடப்பதை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் பிரயன்ட் நகர் பகுதியில் வேலை முடிவுற்ற இடத்தில் போர்டுகள், லைன் மார்க், சாலை விபரம் குறித்த விபரம் அடங்கியவை வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார். தலைமை பொறியாளருடன் இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும் பலர் சென்றனர்.
முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் தலைமை பொறியாளரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சந்தித்தார். மாநகராட்சிக்குரிய புதிய திட்டங்களுக்கு விரைவில் அனுமதியளித்தல் உள்ளிட்டவை குறித்து அவரிடம் தெரிவித்ததாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் (22.07.2011)
இதனையடுத்து காயல்பட்டினத்தில், இடைநின்ற சாலைப்பணிகள் கடந்த சில நாட்களாக மீண்டும் நடைபெறுகிறது. காயல்பட்டினம் அலியார் தெருவில் நேற்று நடைபெற்ற சாலைப்பணி காட்சி:-
|