அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலாச்சார சங்கம போட்டிகளில் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலாச்சார சங்கம நிகழ்ச்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகள் பலவற்றில் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரும் கலந்துகொண்டனர்.
நடுநிலை வகுப்புகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில்,
ஆங்கில கட்டுரைப் போட்டியில், அப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி எம்.ஏ.கே.சித்தி மதானி முதலிடத்தையும்,
எட்டாம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா ஆங்கில பேச்சுப் போட்டியில் மூன்றாமிடத்தையும்,
அதே வகுப்பைச் சார்ந்த மாணவி பி.எம்.ஏ.சாரா, பொக்கே தயாரிப்பு போட்டியில் மூன்றாமிடத்தையும்,
ரங்கோலி போட்டியில், எட்டாம் வகுப்பைச் சார்ந்த மாணவி ஏ.எம்.ஃபாத்திமா ஃபஸீஹா, எம்.தனலக்ஷ்மி ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
உயர்நிலை வகுப்புகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில்,
ஒன்பதாம் வகுப்பு மாணவி யு.இசட்.கே.ஹலீமா, தமிழ் பேச்சுப் போட்டியில் முதலிடத்தையும்,
அதே வகுப்பைச் சார்ந்த மாணவி எஸ்.எச்.ஜென்னத் முஃமினா ஆங்கில பேச்சுப்போட்டியில் முதலிடத்தையும்,
அதே வகுப்பைச் சார்ந்த பி.மேனகா, ஏ.என்.அஷ்ருன் நிஸா ஆகிய மாணவியர் மெஹந்தி வரைகலைப் போட்டியில் இரண்டாமிடத்தையும்,
மாற்றுடைப் போட்டியில் அப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஹவ்வா நவ்ரீன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
மேல்நிலை வகுப்புகளுக்கான பிரிவில்,
அப்பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி எம்.ஏ.ஜொஹரா வாஸிஆ, கே.சாந்த குமாரி ஆகியோர் சிகையலங்காரப் போட்டியில் முதலிடத்தையும்,
அதே வகுப்பைச் சார்ந்த மாணவி பி.மதீஹா ஆரி வேலைப்பாடு போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர். |