ரமழான் (1432) மாத அமாவாசை ஜூலை 30 சனிக்கிழமையன்று - இங்கிலாந்து நேரப்படி மாலை 6:40 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் நள்ளிரவு 12:10 (ஜூலை 31).
அன்று (ஜூலை 30) காயல்பட்டணத்தில் சூரியன் மறைந்தப்பின்னரே அமாவாசை நிகழ்கிறது. மேலும் அன்று உலகின் எந்தப்பகுதியிலும் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காண இயலாது.
ஜூலை 31 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:39 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:07. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 18.5 மணி நேரம். சூரியன் மறைந்து 28 நிமிடங்கள் பிறகு சந்திரன் மறைந்தாலும் அன்று
வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் காண இயலாது.
ஜூலை 31 அன்று தெற்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்க கண்டம், மத்திய அமெரிக்க கண்டம், தெற்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காணலாம்.
ஆகஸ்ட் 1 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:39 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:56. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 42.5 மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம். மேலும் உலகின் பிற பகுதிகள் அனைத்திலும்
அன்று பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு ஜூலை 31 - ரமழான் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூலை 31 (அமாவாசை) அன்று ஸஃபான் 29 பூர்த்தி ஆகிறது. அன்று தெற்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்க கண்டம், மத்திய அமெரிக்க கண்டம், தெற்கு அமெரிக்கா பகுதிகளில் பிறையை காண வாய்ப்புள்ளது.
அப்பகுதிகளில் அன்று பிறை காணப்பட்ட தகவல் வந்தால் அவர்களுக்கு ஆகஸ்ட் 1 அன்று ரமழான் 1 ஆகும். தகவல் கிடைக்கப்பெறாவிட்டால் - அவர்கள்
ஆகஸ்ட் 1 அன்று ஸஃபான் 30 யை பூர்த்தி செய்வர்.
அவர்களுக்கு ஆகஸ்ட் 2 அன்று ரமழான் 1 ஆகும்.
ஜூலை 2 அன்று காயல்பட்டினத்தில் பிறை காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டதால், ஸஃபான் மாதம் அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜூலை 4 அன்று (ஜூலை 3 பின்னேரம்) துவங்கியது.
அவர்களுக்கு ஜூலை 31 (அமாவாசை) அன்று ஸஃபான் 28 முடிந்திருக்கும். ஆகஸ்ட் 1 அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம். அவ்வாறு காணப்பட்டால் அவர்கள் (அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள்) ஆகஸ்ட் 1 அன்று ஸஃபான் 29 யை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 2 அன்று ரமழான் 1 யை
துவக்குவர். அவ்வாறு பிறை ஆகஸ்ட் 1 அன்று காணப்படாத பட்சத்தில் ஆகஸ்ட் 2 அன்று ஸஃபான் 30 யை பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 3 அன்று (ஆகஸ்ட் 2 பின்னேரம்) அவர்கள் ரமழான் மாதத்தை துவக்குவர்.
3. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted bysyedahmed (GZ,China)[30 July 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 6504
" UNITY IS STRENGTH " என்ற பழமொழிக்கேற்ப நாம் அனைவரும் பாகுபாடு இல்லாமல் பிரிவினை என்ற சக்தியை
விட்டு விட்டு, பெரியோர்கள், உலமாக்கள் கூற்றின்படி ஒற்றுமையோடு இந்த புனித சிறப்பான மாதத்தை கடைபிடிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடைமைகளில் ஒன்று. வல்ல நாயன் நம்முடைய நாட்டங்களை நிறைவேற்றிதருவனாக, ஆமீன்.
4. ரமழா (1432) மாதம் என்று... posted byJabbar (Hong Kong)[30 July 2011] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 6507
Kayal Patnam .com is doing this type of scientific info.. into their web news is part of their profession. This is nothing wrong and we should always appreciate them. This is none of Kayalpatnam Aalim's business to look after and follow it. Our religion clearly stats in Hadeeth that Ramadhan should starts after looking the moon. So we all to have wait for our Aalim/Jamaath anouncemets........... Allah give us all to perform fast with full of strength and reward us all our Ramadhan ibadath, Insha Allah...
5. மனம் ஒரு குரங்கு............... posted bys.s.md meerasahib (riyadh)[30 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6510
அஸ்ஸலாமு அலைக்கும். இதில் தந்திருந்த விளக்கம்லாம் சூப்பர்தான்......... நம் ஊர் எல்லா தரப்பு உலமாக்களும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுங்கள் ஒற்றுமைக்கு உதவுங்கள் ஏகோபித்த முடிவை நம் மக்கள் பின்பற்ற தாயாராக உள்ளனர். வேற்றுமையை தவிக்கவும்.வஸ்ஸலாம்.
6. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted byvsm ali (kayalpatnam)[30 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6513
விளக்கமெல்லாம் சூப்பராத்தான் இருக்கு. அனால் அதை " விளங்கிக்கொள்ளும் " மனப்பக்குவம்தான் நம்மிடம் இல்லை . " விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை " இது எங்கோ கேட்ட ஒரு பழமொழி . ஆனால் இங்கோ , யார் விடுவது , யார் கொடுப்பது ? எல்லாம் ஈகோ பிரச்சினை . UNIT(ea)Y பருகப்போகும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
7. Ramadan?? posted byIbrahim Ibn Nowshad (Chennai)[30 July 2011] IP: 119.*.*.* India | Comment Reference Number: 6516
Assalamu Alaikkum Wrwb.
In my personal opinion. We are humans first of all prone to error. He is Allah who taught us which we knew not.
As per the authentic Hadeeth that we should welcome Ramadan after the visible Crescent by ones own or the news about same by trustworthy witness rather than calculating the moon traces. As shown in the above figures the moon phases start very below to the Hawai and Fiji. It is mentioned in Blue. At that time Australians almost cross the day of Sahur of next day of around 05:30AM to 06:30AM in the morning.
Else in this way. The next day on 31st South African, South America and Central America region the Crescent visibility is fine. If we get the news of Crescent visibility from those region we can accept it, since the time difference from Capetown to Kayalpatnam is 03:30 Hrs. Which means if 6:00PM in Capetown, it would be 09:30PM in Kayalpatnam. Which is enough to prepare Sahur food. In Australia and Fiji it would be around 3:00AM to 4:00AM in the early morning. Which can be also accept under the whole world start the Ramadan day 1.
But in the Third side. It is doubtful to start the Ramadan day 1 if Crescent seen in local nearby only on next day. Remember, What happen if suppose the moon not visible due to Clouds? What is the scale of Crescent sight seeing? Nearby like Colombo, Kerala? or the Maharastra's Malegon as like before?
Let us all discuss together with Authentic Hadeeth by Start Ramadan and Leave Ramadan by SEEING Crescent. Even the witness accepted from trustworthy of Prophet period for Crescent. Is there any other evidence to Calculate or seen only nearby? Let us all come to single root of evidence that Allah had given us Holy book to the Whole Mankind, Allah sent Messengers to whole Mankind, Allah created the wordly pleasures to Whole Mankind, Allah created Sun and Moon to the whole Mankind.
May be the perspective approach on each of them may be varied from each of us own view.
8. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted byT.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852rr)[30 July 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6520
அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ் ,..வ பறக்...
அன்புள்ள சகோதர முஸ்லீம்களே! இது ஒன்றும் நமக்கெல்லாம் புதிது அல்ல.. ஸெய்ய்யிதுனா அலீய்யின் கற்ரமல்லாஹு வஜ்ஹஹு (றழி)அவர்கள் காலத்திலேயே நடந்த விஷயம்தான். அதன் தாத்பரியம் என்னவென்றால்,... ஃகுலஃபா எ றாஷிதீன்களில் முதல் மூவரை உதாசீனப்படுத்தி, கேவலப்படுத்திவிட்டு அலீ ( றழி) அவர்களை முற்படுத்தி நபியாகவோ தலைவராகவோ என்னி அதன் வழி நடந்து இஸ்லாத்தில் ஒரு பிரிவை, ஒரு பிழவை உண்டு பண்ணிய சூழ்ச்சிதான். ஷீயா இஸம்.
ஆனால் இது மாதிரி குழப்பத்தை ஆரம்பித்து வைத்ததே யஹூதிகள் தான். அதன் வழி நடக்க ஆரம்பித்து இன்றுவரை நடந்த நடக்கின்ற ஷீய்யாக்கள் கூட்டத்தினர்களின் வழி முறைதான். அம்மாவாசைக்கு அடுத்த நாள் பிறை ஒன்று என கணக்கிடுவது ஆகும். ஆனால் நபி (ஸல்) அவர்களை ஆஸலாக பின்பற்றும் ஸுன்னத் வல் ஜமாத்தார்கள் அவரவர் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் உள்ளவர்கள் மட்டும் பிறை கண்டபின்தான் பிறை ஒன்று என கணக்கிடுவார்கள். உலமாக்களிடம் எல்லை விசயம் விவரமாய் கேளுங்கள். கிடைக்கவிட்டால் என்போன்ற அவாம்களிடம் கேளுங்கள். அதும் கிடைக்காவிட்டால் இஸ்திஃகாறா தொழுது அல்லாஹ்விடம் ஓர்மையுடன் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.
”கண்டு பிடியுங்கள், கண்டு விடுங்கள்” என்ற ஹதீதுக்கு இந்த புது யுக இஸ்லாமியர்கள் என்ன விளங்கினார்களோ? மேலும்
இது சம்மந்தமான கூடிய விளக்கம் உள்ள பயான் மவ்லவி அல்ஹாஃபிழ்,அல்ஹாஜ் அப்துல்லாஹ் மக்கி ஆலிம் அவர்கள் 3,4 வருடஙளுக்கு முன் வழமையாக் ஜாவியாவில் நடக்கும் றமழான் த்ஃலீமில் ஒருதினம் காலை 10-12 மணிகளில் நடத்திய பயானை கேட்டு தெளிவு பெறுங்கள். ஸீ டீ ரெகோர்ட் நம்மிடம் இருக்கிறது. தொடர்ஃபுக்கு. 04639-280852 க்கு டயல் செய்க.வஸ்ஸலாம், T.M.Rahmathullaah. KPM.
9. குடோஸ் டு தம்பி ஸாலிஹ் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[30 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6522
பிறை விசயமாக, அறிவியல் சார்ந்த கருத்துகளை, மிகவும் புரிய கஷ்டமான கருத்துகளை, காயல் வெப்சைட், மிக இலகுவாக அனைவரும் புரியும் படி, விவரித்து இருந்ததற்கு, தம்பி சாளிஹ்க்கு பாராட்டுக்கள்.. அதிலும், பல கொள்கை உடையவர்களின் கணக்குப்படி, நோன்பு எப்போவெல்லாம் ஆரம்பமாக வாய்ப்பு உள்ளது என்று, அனைவரையும் திருப்தி படுத்தும் விதம் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது ... தம்பி இதில் ஏதாவது ஒரு கொள்கையின் படி தான் இருக்க முடியும் அண்ட் அது தான் இயல்பு.. ஆனாலும், தான் சார்ந்த கொள்கையின் கருத்துகள் மட்டுமையை, வெளியிடாது, பரந்த மனப்பான்மையுடன், எல்லோரையும் satisfy பண்ணி எழுதியது, அவனின் பரந்த மனப்பான்மையையும், ஊடக சானக்கியதனதையும், mental maturity ஐயும் தெளிவாக காட்டுகிறது..
பல வாசகர்களின் கவலை, வெய்யேறு நாளில் நோன்பு துவங்குகிறது என்று.. வெவ்வேறு கொள்கையை சொல்லும் எல்லோருமே தங்கள் வாதங்களை சரியாக வைப்பதால், இதில் சுமூக உடன்பாடு ஏற்பட, அல்லாஹ் தான் வழி காட்டனும்.. அல்லாஹ் எந்த ஆதமாவையும், தனது சக்திக்கு மீறி சோதிக்க மாட்டான் என்ற ஹதீத் படி, மனசாட்சி படி, இறுதி முடிவை அல்லாஹ்வுடன் விட்டு விட்டு, புனித ரமாலானை நல்ல முறையில் அடைந்து பயன்பெறுவோம் ஆகா.. ஆமீன்..
10. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted byசாளை நவாஸ் (sg)[31 July 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6524
இரண்டு நண்பர்கள் சந்தித்து கொள்கின்றனர். உரையாடல் பின்வருமாறு
ஒருவர் : மச்சான், தலைய தூக்கி பிறை தெரியுதான்னு பாரு
மற்றொருவர் : தலைய தூக்கி பார்த்தா ஒரே செல் போன் டவரா தெரியுது.
ஒருவர் : சரி வா கடற்கரை போய் பார்ப்போம்.
மற்றொருவர் : வேண்டாம்பா, போன மாசம் அங்கே போய் கண்ணாடி கிளாஸ் காலை பதம் பார்த்துட்டு, நா வரலே.
(சிறிது நேரம் கழித்து )
ஒருவர் : வர வர காதும் சரியாய் கேட்க மாட்டேன்குது
மற்றொருவர் : ஏன்?
ஒருவர் : இல்லப்பா, இடது காத்து பக்கம் இன்னிக்கி நோன்புன்னு விளங்குது, வலது காத்து பக்கம் நாளைக்கி நோன்புன்னு விளங்குது. எந்த காதுல பிரச்சினைன்னு தெரியலே..
மற்றொருவர் : மாப்ளே!! உனக்கு காதுலே இல்லை மூளைலே தான் பிரச்சினை. அது அந்த பக்கத்துல உள்ள பள்ளி, இது இந்த பக்கத்துல்ல பள்ளி.
ஒருவர் : அப்போ ரெண்டு பெருநாள் வருமேடா?
மற்றொருவர் : வரட்டுமே. நமக்கு ஒரு நாள் கஞ்சி எக்ஸ்ட்ரவ கெடைக்கும், ரெண்டு தமாம் சாப்பாடு கிடைக்கும். அப்புறம்
பக்கத்தில் இருக்கும் பெரியவர்கள் : அப்புறம் உங்களுக்கு தர்ம அடி கிடைக்கும். ஒளிஞ்சி போங்கடா
11. உண்மை சுடுகிறது... posted bykavimagan (dubai)[31 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6526
நவாஸ் அவர்கள் எழுதியது கற்பனையான உண்மை.
ஜூனியர் விகடன் பத்திரிகையில், புகழ் பெற்ற " டயலாக் "
என்னும் பகுதி ஞாபகத்திற்கு வருகிறது.ஒருபக்கம் சிரிப்பை
வரவழைத்தாலும், உண்மை சுடுகிறது.
14. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted byvsm ali (kayalpatnam)[31 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6533
சாளை நவாஸ் அவர்களின் கற்பனைக்கதையில் சிரிப்பை விட , வருத்தமே வருகிறது. இரண்டு நாட்களில் பெருநாள் வருவதால் , பிறரின் நகைப்புக்கு ஆளாகி விடுவோமே ! ஊரின் ஒற்றுமை பாதிக்கப்படுமே ! என்றெல்லாம் சற்றும் கவலைப்படாமல் , dialog இல் வரும் இரண்டு நபர்களும் , extra வாக , ஒருநாள் தமாம் சாப்பாடும் , ஒருநாள் கஞ்சியும் கிடைப்பதாக , சாப்பாட்டைப்பற்றியே பேசிக்கொள்கின்றனர். ஒருவேளை UNITY என்பது இந்த ஊரைப்பொருத்தவரை , கியாமத்து நாள் வரை " எட்டாக்கனி " என்று நினைத்து விட்டாரோ ?
15. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[31 July 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6535
பெருநாளுக்கு ஊர் வரலாம் என்று பிளான் பண்ணியுள்ளேன்.
அதில் பெரும் குழப்பம்,என் வீட்டு பெருநாளுக்கு வரவா, தாய் வீட்டு பெருநாளுக்கு வரவா, இல்லை சகோதரி வீட்டு பெருநாளுக்கு வரவா..
சென்ற ஹஜ் பெருநாளுக்கு ஊர் வந்து, 3 வீட்டிலும் பெருநாள் பிரியாணி வெவ்வேறு நாட்களில் போட்ட அனுபவம்..அந்த பயம் தான். அதில் சகோதரி வீட்டில் போட்டது நன்கு அமைந்து விட்டது..உடனே அம்மணி ....என்னத்தை எழுத.. குடும்பத்தில் குழப்பம் வேண்டாம்..
16. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted byZainul Abdeen (zain_msec@yahoo.com)[31 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6538
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் என்று வலைத்தளம் நடுவரால் கூறப்பட்டுள்ளது. இங்கு சொந்த கருத்தை(உண்மையை) பதிக்கனுமா இல்லை கற்பனை கலந்த பொய்யை பதிக்கனுமா ?????????
17. ஒற்றுமை எனும் அல்லாஹ்வின் கயற்றை பலமாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ! நீங்கள் நிச்சயமாக பிரிந்து விடாதீர்கள் !! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[31 July 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 6545
அன்பானவர்களே ...இந்த வேதனையான சூழ் நிலையில் ஆளுக்கு ஆள் கருத்துக்களை காமடியாக எழுதி மற்ற செய்திகளை போன்று இதிலும் உங்கள் எழுத்து அலங்காரங்களை கொண்டு மற்றவர் மத்தியில் நகைப்புக்கு ஆளாகாதிர்கள் என்று உங்கள் அனைவர்களையும் மிகவும் அன்போடும் உரிமையோடும் தாழ்மையோடும் வேண்டிக்கொள்கிறேன் .
பொதுவாகவே நான் இங்க நடக்ற கருத்து பதிவுகளில் அதிகமாக கலந்துகொள்வதில்லை என்பது உங்களில் அநேகருக்கு தெரியும் .இருந்தாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கருத்துக்களை பதிவு பண்ண வேண்டிய கட்டாய கடமையாக இருக்கிறது . அந்த நோக்கத்தில் தான் இப்போ என் கருத்தை கொண்டு உங்கள் இதயங்களை மிகவும் கண்ணீரோடு வருடுகிறேன் ....இனி வரும் காலங்களிலாவது தயவு செய்து மார்க்க விஷயத்தில் கருத்து மோதலில் ஈடு படாமல் ....வேறு வழி இல்லை என்ற பட்சத்தில் அவர் அவர் வழி என்று (அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவன் ) அமைதியாக சென்று விடுவோமாகில் உலகில் வாழும் ஆயிரக்கணக்கான kayalpatnam.com வாசர்களுக்கு (இந்த வளைய தளத்துக்கு நாம் காயல் வாசிகள் மட்டும் வாசகர்கள் அல்ல...மாறாக இஸ்லாம் வாழும் அணைத்து ஊர் மக்களும் மட்டும் அல்லாது மாற்று மத (சகோதர மத) நண்பர்களும் வாசகர்களாக இருக்கிறார்கள் )
நம் ஊர் மக்கள் ஒற்றுமை பேணி ...காத்து வரும் கண்ணியமான ஊர் வாசிகள் என்ற மரியாதை மட்டும் அல்லாமல் , இஸ்லாம் வகுத்த வழியில் வாழ்பவர்கள் என்பது போன்ற ஒரு மாயையாவது உண்டு பண்ணட்டுமே (அல்லாஹ் நம்மை இஸ்லாமிய வழியில் அடி பிறழாமல் காத்தருள் வானாகவும் ஆமீன் ! ) ...தயவு செய்து எண்ணி பார்பீர்களா என் அன்பு சகோதரர்களே !!
வல்ல அல்லாஹ் நம் ஊர் ஒற்றுமைக்கு நாம் வாழும் காலத்திலேயே கிருபை செய்வான் ...இந்த சங்கையான ரமலான் பொருட்டால் நாம் அனைவரும் அதற்காக அல்லாஹ்விடத்தில் அழுது மன்றாடுவோம் ....வாருங்கள் தோழர்களே.......
தமிழகத்துக்கே முன்னோடி முஸ்லிம் தலைமையகமாக நம் கால் பதியை அல்லாஹ் தேர்ந்தெடுத்து நம்மை அவன் அளவில் பொருந்தியவர்களாக ஆக்குவானாகவும் ....ஆமீன் .! ஆமீன்!! யா ரப்அல் ஆலமீன் !!!
(யாரையும் குறித்து புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுத வில்லை ..மாறாக எல்லா தரப்பாரையும் கண்ணிய படுத்தும் முகமாகவே இதை எழுதுகிறேன் என்பதை அறியத்தருகிறேன் )
18. Re:ரமழான் (1432) மாதம் என்று... posted bymohideen thambi (jeddah)[01 August 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6560
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு.
ரமளானின் முதல் பிறை!!!
ரமளானின் முதல் பிறையை கணக்கிடுவதற்கு, அதற்கு முந்தைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் ஆரம்ப, கடைசி நாட்களை கணக்கிடுவதிலும், ரமளானை அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் அக்கறை காட்டுவது அவசியமாகும்.
1. ஷஃபான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை.!
'ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)
'பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி 1909, திர்மிதி 624)
ஷஃபான் மாதம் சந்திர ஆண்டின் 8 வது மாதமாகும். இது ரமளானுக்கு முந்திய மாதம்.
ரமளான் மாதம் சந்திர ஆண்டின் 9 வது மாதமாகும். நோன்பு வைப்பதற்காக இறைவன் தேர்வு செய்த மாதம்.
ஷவ்வால் மாதம் சந்திர ஆண்டின் 10 வது மாதமாகும். இது ரமளானுக்கு அடுத்த மாதம்.
ரமளான் மாதத்தின் முதல் பிறையை முடிவு செய்வதற்கு, ஷஃபான் மாதத்தின் பிறையை கணக்கிட்டு வர வேண்டும். அதாவது அம்மாதத்தின் முதல் பிறையையும் கடைசி பிறையையும் பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல் ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
ரமளான் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பை விட வேண்டும். ரமளான் மாதத்தின் முதல் பிறை மேக மூட்டத்தின் காரணமாக தென்பட வில்லையானால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்த வேண்டும். அடுத்த நாள் ரமளானின் முதல் நோன்பை வைக்க வேண்டும் என்பதை இரண்டாம் ஹதீஸிலிருந்தும், ஷஃபானின் இறுதி நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை மூன்றாவது ஹதீஸிருந்தும் விளங்க முடிகிறது. (ஒருவரின் வழமையான நோன்பு அந்நாட்களில் அமைந்து அவர் நோன்பு நோற்றால் தவறில்லை என்பதை மற்றொரு நபிமொழி கூறுகிறது)
'ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1914, திர்மிதி 621)
2. ரமளான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை.!
'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 1907)
ரமளான் மாதத்தின் முதல் பிறை மேகமூட்டத்தால் தென்படவில்லையானால் எவ்வாறு ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமோ அதே போன்று ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை அதே காரணத்திற்காக தென்படவில்லையானால் ரமளான் மாதத்தையும் முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு பிறையை பார்க்க முயற்சிக்க வேண்டும். மற்றொரு ஹதீஸில் 30 நாட்கள் என்றும் வந்துள்ளது.
'நபி (ஸல்) அவர்களுடன் நான் 29 நாட்கள் நோன்பு நோற்றது, முப்பது நாட்கள் நோற்றதை விட அதிகமாகும்' என்று இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூது 2315, திர்மிதி 625)
நோன்பு என்றால் முப்பது நாட்கள் தான் என்றும் அவ்வாறு முப்பது நாட்கள் அமைய வில்லையென்றால் மனவருத்தம் கொள்வதும் திருப்தி அடையாதிருப்பதும், சிலவேளை ரமளான் மாதத்தின் முதல் பிறையை பார்த்த தகவல்களை அறிந்து மக்களுக்குச் சொல்லும் ஆலிம் அல்லது டவுன்ஹாஜியை திட்டுவதும் அறியாமையால் நடைமுறையில் இருந்து வரும் நிகழ்வுகளாகும். ஆனால் நபித்தோழர் இப்னு மஸ்வூது அவர்களின் கூற்று அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல அறிவுரையாக அமைந்துள்ளது. 30 நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்காக ரமளானுக்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு வைப்பதற்கு தடை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிறையைப் பார்ப்பதும் அதன்படி நோன்பு வைப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் பொருப்பும் கடமையுமாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross