ரமழான் துவக்கம், நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான தேதிகளை பிறை பார்க்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் ஓராண்டும், ஜாவியா அரபிக்கல்லூரியில் ஓராண்டும் நகரின் மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஒன்றுகூடி, கலந்தாலோசனை செய்து முடிவுகளை அறிவிப்பது வழமை.
அந்த அடிப்படையில் இவ்வாண்டு ரமழான் துவக்க தினத்தை முடிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் 01.8.2011 திங்கட்கிழமை பின்னிரவில் நகர மார்க்க அறிஞர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் இரவில், பிறை கண்டவர்கள் ஜாவியாவில் நடைபெறும் மார்க்க அறிஞர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். |