ரமழான் மாதம் துவங்குவதை அடுத்து மக்காவில் உள்ள ஹரம் ஷரிபில் தராவீஹ் தொழுகையினை (இரவு தொழுகை) முன் நடத்தவுள்ள இமாம்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அல் ஜுஹானி மற்றும் ஷேக் அப்துர்ரஹ்மான் அல் சுதைஸ் ஆகியோர் தராவீஹ் தொழுகையினை முன் நின்று நடத்துவர்.
இறுதி பத்து தினங்களின் - இரட்டைப்படை நாட்களில் - தொழுகையினை டாக்டர் சவுத் அல் சுரைம் மற்றும் ஷேக் மஹர் பின் ஹமாத் அல் முஐக்கிலி ஆகியோர் தராவீஹ் தொழுகையினை முன் நின்று நடத்துவர். இக்காலகட்டத்தில் அல் ஜுஹானி மற்றும் அல் முஐக்கிலி ஆகியோர் தராவீஹ் தொழுகையினையும், அல் சுரைம் மற்றும் அல் சுதைஸ் ஆகியோர் தஹஜ்ஜத் தொழுகையையும் முன் நின்று நடத்துவர்.
குர் ஆனை முழுமையாக முடிக்கும் (கத்தம்) நாளில், தராவீஹ் தொழுகையை ஷேக் அல் சுதைஸ் நடத்துவார்.
ரமழான் மாத ஜும்மா பயான்களை - முறையாக - ஷேக் ஸாலெஹ் பின் முஹம்மது அல் தாலேப் (ஆகஸ்ட் 5), டாக்டர் ஒசாமா பின் அப்துல்லாஹ் ஹயாத் (ஆகஸ்ட் 12), டாக்டர் ஸாலெஹ் பின் அப்துல்லாஹ் பின் ஹுமைத் (ஆகஸ்ட் 19) மற்றும் டாக்டர் சவுத் பின் இப்ராஹீம் அல் சுரைம் (ஆகஸ்ட் 26) ஆகியோர் வழங்குவர்.
ஹரத்தில் நடக்கும் தொழுகை உட்பட அனைத்து காட்சிகளையும், www.kayal.tv இணையதளத்தின் - மஸ்ஜித் அல் ஹரம் பக்கத்தில் - நேரடியாக 24 மணி நேரமும் காணலாம்.
தகவல்:
SAUDI GAZETTE |