தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை செய்யும் நேரம் திங்கள்கிழமை (ஆக. 1) முதல் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆர்.அமிர்தா ரத்தினகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை செய்யும் நேரம் 1.8.2011 முதல் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதனடிப்படையில், ஏற்கெனவே காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இனி காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்தடை செய்யப்படும்.
அதுபோல, காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும்,
10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரையும்,
நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும்,
பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் 8 மணி வரையும் மின்தடை செய்யப்படும்.
மேலும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின்கீழ் அமைந்துள்ள மின் தொடர்களில் மின்தடை செய்யும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |