ரமழான் (1432) மாத அமாவாசை ஜூலை 30 சனிக்கிழமையன்று - இங்கிலாந்து நேரப்படி மாலை 6:40 மணி அளவில் ஏற்பட்டது. அப்போது இந்திய நேரம் நள்ளிரவு 12:10 (ஜூலை 31).
உலகளவில் இப்பிறையை முதன் முதலாக - வெறுங்கண்கள் கொண்டு - தென் ஆப்ரிக்காவில் காண முடியும் என கணிக்கப்பட்டிருந்தது. பிறையை ஜூலை 31 மாலையில் - மக்ரிபுக்கு பிறகு - தேடும்படி அறிவிப்புகள் தென் ஆப்ரிக்கா முழுவதும் வெளியிடப்பட்டிருந்தன. பார்க்கவும் இங்கே
இந்திய நேரப்படி சுமார் இரவு 9:30 மணி அளவில் தென் ஆப்ரிக்கா ஜாமியத்துல் உலமா தலைமை செயலாளர் இப்ராகிம் பாம் - தென் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் ரமழான் பிறை காணப்பட்டதாக - ஒருங்கிணைந்த உலமாக்கள் குழு சார்பாக - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து - தென் ஆப்ரிக்காவில் நாளை (ஆகஸ்ட் 1) ரமழான் 1 ஆகும்.
இவ்வறிவிப்பினை - தென் ஆப்ரிக்காவின் இஸ்லாமிய வானொலி நிலையங்களான அல் அன்சார் உட்பட பல வானொலி நிலையங்கள் நேரடியாக ஒலிபரப்பு செய்தன.
புகைப்படம் செய்தியுடன் ஆகஸ்ட் 1 அன்று இணைக்கப்பட்டது
1. Re:தென் ஆப்ரிக்காவில் ரமழான்... posted byA.W.S. (Kayalpatnam)[31 July 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 6546
This proved the reliability of Hijri Calendar as well as the article ( ரமழான் (1432) மாதம் என்று துவங்குகிறது?) appeared yesterday in Kayalpatnam dot com.
"You can't wake up a person if he pretends to be sleeping".
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross