ரமழான் (1432) மாதம் துவங்குவதை தொடர்ந்து சவுதி அரேபிய அரசாங்கம் பல முன்னேற்பாடுகளை - குறிப்பாக மக்காவில் -
அறிவித்துள்ளது.
ரமழான் துவக்கத்தை அறிவிக்கும் முகமாக ஞாயிறு இரவு மக்காஹ் மணிக்கூண்டிலிருந்து (Makkah Royal Clock Tower) 16 மின்பிம்பங்கள் - விண்ணை நோக்கி ௦- 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனுப்பப்பட்டன. இம்மணிக்கூண்டில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகள் - 7 கிலோமீட்டர் வரை தொழுகைக்கான அதானை கொண்டுசெல்லும் திறன் கொண்டது. அதான் வேளையில் மின்னும் - பச்சை மற்றும் வெள்ளை நிற ஒளிகள் - 30 கிலோமீட்டர் தூரம் வரை தென்படும்.
மக்காஹ் மணிக்கூண்டு - King Abdul Aziz Endowment Project திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள - 7 கோபுர கட்டிடங்களில், மிக பெரிய கட்டிடமான கட்டிடம் எண் ஐந்தின் உச்சியில் உள்ளது. ஹரத்தை எதிர்நோக்கியுள்ள இக்கட்டிடம் - 76 மாடிகள் கொண்டு, 601 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உலகின் இரண்டாம் மிகப்பெரிய கோபுரமாகும். இதில் செயல்புரியும் ஹோட்டலில் - 858 அறைகள் உள்ளன.
மக்காஹ் மணிக்கூண்டு ஞாயிறு அன்று அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கியது.
இதற்கிடையே ரமழான் துவங்குவதை தொடர்ந்து - உம்ரா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோன்பாளிகளுக்கு இலவச உணவு பொட்டலங்களை வழங்க சுமார் 500 பேர் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு உட்கொள்பவர்கள் - மக்காஹ் முக்கரம்மாஹ் நூலகம் முதல் கஸ்சாஹ்/அல் சுபைக்காஹ் உட்பட அமைந்துள்ள முற்றம் வரை - அமர ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளது.
நீங்கள் இங்கு உள்ளீர்கள் (You are here) என்ற அடையாள வரைப்படம் - ஹரத்தில், ஆங்கிலத்திலும், அரபியிலும் 17 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் தகவல்::
ARAB NEWS |